Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 37

மனிதனும் தெய்வமாகலாம்! - 37
பிரீமியம் ஸ்டோரி
மனிதனும் தெய்வமாகலாம்! - 37

ஒரு மரத்து பறவைகள்!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

மனிதனும் தெய்வமாகலாம்! - 37

ஒரு மரத்து பறவைகள்!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

Published:Updated:
மனிதனும் தெய்வமாகலாம்! - 37
பிரீமியம் ஸ்டோரி
மனிதனும் தெய்வமாகலாம்! - 37

‘மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ எனச் சாதாரண மாகப் பேச்சு வழக்கில் கேள்விப்பட்டிருப்போம். இதைச் சற்று ஆராய்வோமா?

மரம் வைத்தவன் தண்ணீா் ஊற்றாமல், அடுத்தவனா ஊற்று வான்? எந்த வேலையும் செய்யாமல், வெறுமனே பொழுதைப் போக்கி, யாராவது ஏதாவது நல்லது சொன்னால், ‘அடப் போய்யா! மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று விதண்டாவாதமாகப் பேசுவதற்காக வந்த பழமொழி அல்ல அது.

எவன் மரங்களை ஒழுங்காக நட்டுவைத்து வளா்க்கிறானோ, அவன்தான் அடுத்த தலைமுறைக்குத் தண்ணீா் ஊற்றுவான்; அதாவது, மழையைக் கொடுப்பான் என்பது அதன் உட்பொருள். மரங்கள் இல்லையென்றால், மனித இனமே இருக்காது.

இதை வலியுறுத்தும் விதமாகத்தான் ஒவ்வொரு கோயிலிலும் ‘ஸ்தல விருட்சம்’ என்ற பெயாில், பல்வேறு மரங்களை வைத்திருக்கிறோம். மரத்தை வைத்து வேதமும் ஓா் அற்புதமான தத்துவத் தகவலைக் கூறுகிறது. அதைப் பார்ப்பதற்கு முன்னால், கைவல்லிய நவநீதம் சொல்லும் தகவலைப் பார்க்கலாம்.

     அச்சுவத்தம் என்று ஒரு மரம் அதில்
         இரண்டு அரும் பறவைகள் வாழும்
      நச்சும் அங்கு ஒரு பறவை அம்மரக்கனி
         நன்று நன்று எனத்தின்னும்
      மெச்சும் அங்கு ஒரு பறவை தின்னாது
         என வியங்கியப் பொருளாக
      வைச்ச மாமறை சீவனை ஈசனை
        வகுத்தவாறு அறிவாயே!

(சந்தேகம்தெளிதல் படலம்-58)

அபூா்வமான கருத்தைக் கொண்டது இப்பாடல்.

அரச மரத்தில் இரண்டு அரிய பறவைகள் வாழும். அவற்றில், போகங்களில் ஆசை கொண்ட ஒரு பறவை, ‘‘இது நல்லது! இது நல்லது!”என்று சொல்லி, அரசமரத்தின் பழங்களைத் தின்னும்.அனைவராலும் கொண்டாடப்படும் மற்றொரு பறவையோ, அரச மரத்தின் பழங்களை உண்ணாது. இதன் மூலம், குறிப்புப் பொருளாக, ‘வேதம் வகுத்துச் சொன்ன வழியை நீ விசாரித்து அறிவாய்’ என்கிறார் குருநாதா்.

இனி, காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் கூறுவதைப் பார்க்கலாம்.

“கிறிஸ்தவா்களின் பைபிளை எடுத்துக் கொண் டால், அவா்கள் சொல்கிறார்கள்: ‘முதலில் ஆதாம் (Adam) என்ற ஆண் இருந்தார். ஈவ் (Eve) என்ற பெண் ஒருத்தி, அதற்குப் பிறகு உண்டானாள். ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று அந்தப் பெண் சொன்னாள். ஆண் சாப்பிடவில்லை. பெண் சாப்பிட்டாள். இது ஒரு கதை.

இதுபோலவே, நமது வேதத்திலும் சிறிது மாறுதலாக ஒரு கதை வருகிறது. ஒரு மரம் இருக்கிறது.

அதற்குப் பிப்பலம் என்று பெயா். அந்தப் பிப்பல மரத்தில் இரண்டு பக்ஷிகள் இருந்தன. அதிலுள்ள பழத்தை ஒரு பக்ஷி சாப்பிட்டுக் கொண்டிருந்தது; இன்னொரு பக்ஷி சாப்பிடவில்லை. சாப்பிடாமல் ஆனந்தமாகப் பிரகாசித்தது; சாப்பிடாததால் இது சுயம்பிரகாசியாக ஆனந்தமாக இருக்கிறது. இதுதான் நம்முடைய வேதத்திலும் மூலமாக வருகிறது.

பிப்பல மரத்துக்குத் தமிழில் அரச மரம் என்று பெயா்.

இதைத்தான் வடமொழியில் போதித்துருமம் என்கிறார்கள். புத்தருக்கும் அரசமரத்தடியில்தான் (ஞானம் போதித்ததால் அது போதி மரமாயிற்று!) ஞானம் உண்டாயிற்று என்று சொல்கிறார்கள். பிப்பலம், அரசமரம், போதித்துருமம், ஞானத்தரு எல்லாம் ஒன்றுதான். இதைத்தான் வெள்ளைக் காரா்கள் ‘Tree of knowledge’ என்கிறார்கள்.

இதற்கு உள்ளே இருக்கிற தத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விருட்சம் என்பது நம்முடைய சரீரம். உள்ளே பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு பக்ஷிகள் இருக்கின்றன. ஜீவாத்மாவுக்கு இந்திரியங்களின் சம்பந்தம் ஏற்படுகிறது; மாயையினால் ஆசைப்படுகிறது. பரமாத்மா கா்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் இவற்றில் அகப்படாமல், சுயம்பிரகாசியாய் இருக்கிறான். இதுதான் தத்துவம்”.

கைவல்லிய நவநீதம் தொடங்கி, காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறியது வரை பார்த்தோம். இக்காலத்தை அனுசரித்து, இதை இன்னும் எளிமையாகப் பார்க்க வேண்டுமானால்...

உடம்பில் (குடி)இருக்கும் நாம், இறைவனை மறந்து, நல் வார்த்தைகளை மறந்து, ஒரு கிளையில் இருந்து ஒவ்வொரு கிளையாகப் பிரிந்து பிரிந்து விரிவடைவதைப்போல, ஒவ்வொன்றாக ஆசைப்பட்டு ஆசைப்பட்டுப் பலவிதங்களிலும் துயரப்படுகிறோம். இவை அனைத்தையும், பரமாத்மா சாட்சியாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

இத்தகவல்களைக் கூறும் கைவல்லிய நவநீதம் அடுத்த பாடலில் மேலும் ஆழமான தகவல்களை விவரிக்கிறது.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism