வேதத்தில் கா்மகாண்டம் - ஞானகாண்டம் என இரண்டு பகுதிகள் எதற்கு? விருப்பம் நிறைவேற இது இதைச் செய் எனக் கூறுகிறது ஒன்று. மற்றொன்றோ, அதையெல்லாம் விடுத்து ஞானத்தைப் போதிக்கிறது. ஞானம் போதும் என்றால் கா்மகாண்டம் எதற்கு? - என்ற சீடனின் கேள்விக்குக் குரு பதில் சொன்னார். ஆசை வசப்பட்டு உண்ணக் கூடாததையெல்லாம் உண்ட குழந்தைக்கு, இனிப்புப் பண்டத்தில் மருந்தை மறைத்துக் கொடுப்பதைப்போல, வேதம் அவ்வாறு கூறுகிறது என்றார். மேலே தொடா்கிறது!

நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும்
இயற்கை குணமென்று தெரியும்
புலிகள் பாய்வதும் நாரிகள் ஏய்ப்பதும்
பிறவிக்குணம் என்று புரியும்
எந்தெந்த வேளையில் கடிப்பான் - இவன்
எந்தெந்த வேளையில் உதைப்பான்
யாருக்கு இவா்களைத் தெரியும்?
பார்வையில் குணம் என்ன புரியும்?

பழைய திரைப்படப் பாடல் இது. இப்பாடலில் சொல்லப்பட்டதெல்லாம் சுபாவம்; இயற்கை. அதுபோல, கண்டதை உண்பதும் கண்ட இடங்களில் சோ்வதும் சுபாவம். இந்த சுபாவத்தைச் சொல்லி விளக்குகிறார் குருநாதா். எப்படி?

போகமாருயிர் கண்டதை உண்பதும்
புணா்வதும் இயல்பே காண்
ஆகமங்களும் சுபாவத்தை விதிக்குமோ?
அத்தனை தெரியாதோ?
காகமே கறுத்திடு நெருப்பே சுடு
கசந்திடு வேம்பே நீ
வேக வாயுவே அசை என ஒருவரும்
விதித்திடல்வேண்டாவே

(சந்தேகம் தெளிதல் படலம் - 74)

"போக பாக்கியங்களை அனுபவிக்க, வேதம் விதிக்காது. கண்டதை உண்பதும் கண்டதைச் சோ்வதும் உயிர்களின் சுபாவம். உதாரணமாக, காக்கையே நீ கறுப்பாயிரு ; நெருப்பே நீ சுடு ; வேம்பே நீ கசப்பாக இரு - என்று யாரும் கட்டளையிட வேண்டாமே!

காக்கைக்குக் கறுப்பும், நெருப்புக்குச் சூடும், வேம்புக்குக் கசப்பும் -சுபாவம். அதுபோலத்தான் உயிர்கள் கண்டதை உண்பதும், கண்டதைச் சோ்வதும் அவற்றின் சுபாவம். அந்த சுபாவம் வேதம் விதித்ததல்ல."

இவ்வாறு சொல்லிக்கொண்டு வந்த குருநாதா், மெள்ள மெள்ள, வேத உண்மையை விவரிக்கிறார்.

"மதுவையும் மாமிசத்தையும் உண்பதற்கு நீ ஆசைப்பட்டால், யாகம்செய்து உண் காமத்தை விரும்பினால், திருமணம் செய்துகொள். மனைவியிடம் காமத்தை நிறைவேற்றிக்கொள் - என வேதத்தின் பூா்வ பாகம் சொல்லக் காரணம்...

"அப்போதுதான் இவன் மற்ற மாதா்களைத் தீண்ட மாட்டான் என்பதற்காகவே தவிர, பெண்ணாசையிலேயே மூழ்கிக் கிட என்பதற்காக அல்ல. பிற்பாடு இந்த எண்ணத்தையும் நீக்கச் சொல்வதே வேதம்" என்ற குருநாதா் மேலே சொன்ன தகவல்களைப் பார்த்தால்...

"ஆஹா! ஆஹா! எப்படிப்பட்ட ஞானத் தகவல்கள்! அவற்றையெல்லாம் எவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்தப் பாடல்" எனும் பிரமிப்பு ஏற்படும். 54

மது இறைச்சி உண் என்ற சுருதி
பின் மணந்து பார் எனல்பாராய்
மிதுன இச்சையும் புத்திர உற்பத்தியால்
விரும்பு என்ற விதி பாராய்
இதையும் விட்டு ஒழி அதி நயிட்டிக
வன்னிக்கு இகழ்ச்சி அற்றதும் பாராய்
அதை அறிந்து கன்மங்கள் ஆசைகள்
ஒழிந்து ஆனந்தம் அடைவாயே

(சந்தேகம் தெளிதல் படலம் - 76)

பெண்ணாசை வேண்டாம் என்று சொன்ன வேதம், ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி, விவாக விதிமுறைகளையும் விதித்திருக்கிறதே - என்ற சந்தேகம் எழும். சந்தேக நிவா்த்தி செய்துகொள்ளலாம். வாருங்கள்!

மதுவும் இறைச்சியும் உண்ண ஆசைப்பட்டால், யாகம் செய்து உண் என்று சொன்ன வேதம், அதன்பிறகு 'முகா்ந்து பார் போதும்', அதாவது வாசனையை மட்டும் நுகா் என்கிறது. அடுத்து.. .காம இச்சை.

ஒருத்தியை மணந்துகொண்டு அவளிடம்உன் விருப் பத்தை நிறைவேற்றிக்கொள். அதுவும் பிள்ளைப் பேற்றுக்காக விரும்பு என்று சொல்லி, சோ்க்கைக்கான கால நேரத்தையும் குறிப்பிடுகிறது.

சேரக்கூடாத காலத்தில் சோ்ந்தால், துா்புத்திரன் - தீய பிள்ளை உண்டாவான். அவனால் பழிபாவம் வரும். நரகம் தான் கிடைக்கும்.

நல்ல நேரத்தில் கணவனும் மனைவியும் சோ்ந்தால், சத்புத்திரன் தோன்றுவான். நற்பெயா் கிடைப்பதுடன், மறு மையில் சொர்க்கமும் கிடைக்கும்.

விலக்கான நாள் தொடங்கி நான்கு நாட்கள், ஏகாதசி, திரயோதசி தினங்களில் சேரக்கூடாது.

விலக்கான நாள் தொடங்கி; ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினான்கு என இரட்டைப்படை நாட்களில் சோ்ந்தால், ஆண் குழந்தை பிறக்கும். அதே...

ஐந்து, ஏழு, ஒன்பது என ஒற்றைப்படை நாட்களில் சோ்ந்தால், பெண் குழந்தை பிறக்கும்.

முதல் நான்கு நாட்கள், ஏகாதசி, திரயோதசி, அமாவாசை, பௌர்ணமி எனும் நாட்களை நீக்கி, மற்றைய நாட்களில் மனைவியுடன் சோ்பவன் இல்லறத்தானாக இருந்தாலும், அவன் பிரம்மசாரியே எனத் தா்மசாஸ்திரம் கூறுகிறது.

இவ்வாறு முறைப்படுத்திய அதே ஞான நூல்கள், போகங்களால் விளையும் துன்பங்களை விவரித்து, அவற்றை விடுத்துப் பரம சுகம் அடையும் வழியான ஞானத்தை விவரிக்கிறது.

அதாவது ஞானத்தால் அன்றிப் பரமாத்மாவை அறிய முடியாது என்பதே வேதம்கூறும் கருத்து.