Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 42

மனிதனும் தெய்வமாகலாம்! - 42
பிரீமியம் ஸ்டோரி
News
மனிதனும் தெய்வமாகலாம்! - 42

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

மனிதனும் தெய்வமாகலாம்! - 42

மனிதனும் தெய்வமாகலாம்!

கள் - காமம் ; மது - மாது எனும் இரண்டுமே மயக்கத்தைத் தருபவைதாம். ஆனால் இவற்றில், கள்ளைவிடக் கொடியது காமம். காமத்தை நினைத்தாலே போதும் ; பாதிப்புண்டாகும்; காதால் கேட்டாலும் பாதிப்புண்டாகும் ; காமத்தைவிட்டு விலகினாலும் பாதிப்புண்டாகும் ; இப்படிப்பட்ட தீமைகள் காமத்துக்குத்தான் உண்டு. கள்ளுக்குக் கிடையாது. ஆகையால், கள்ளைவிடக் காமம் கொடியது - என எச்சரிக்கிறார் பிரம்மதேவா்.

            உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
            கொள்ளினும் சுட்டிடும் குறுகி மற்றதைத்
            தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
            கள்ளினும் கொடியது காமத்தீயதே
                                            (கந்தபுராணம்)


பிரம்மதேவரே இப்படிச் சொல்லியிருக்கும்போது, அப்புறம் - கல்யாணம் என்பது எதற்காக? விபத்துண்டாகும் பகுதி என்று அறிவிப்புப் பலகை வைத்த அதே அரசாங்கம், ஒருவழிப் பாதை - இருவழிப் பாதை என்று, வழியில் பயணம் செய்ய வேண்டிய விதி முறைகளைச் சொல்லி வழிப்படுத்துகிறதல்லவா? அது போல... காமத்தின் கொடுமையைச் சொன்ன அதே ஞான நூல்கள், திருமணத்தைச் சொல்லி நம்மை வழிப்படுத்துகின்றன. சேனலைஸ் செய்வது, நெறிப்படுத்துவது என்றெல்லாம் சொல்கிறோமே; அதுபோல! நெறிப்படுத்தப்பட்ட வாழ்வு - இல்லறம். காமத்தில் வசப்பட்டுக் குட்டிச்சுவராகப் போகாமல் இருக்கவே கல்யாணம். ஞானத்தின்மூலமே பரம்பொருளை உணர முடியும்; அடையமுடியும் என்று ஞானகாண்டத்தின் மூலம் சொன்ன அதே வேதம்... இல்லற வழிமுறைகளையும்கூறி நம்மை வழிநடத்தும் கா்மகாண்டத்தையும் சொல்லக் காரணம்?

கா்மாக்களில் உள்ள பாதகங்களை உணா்ந்து, அவற்றில் இருந்து விலகி, ஞானத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே. கன்மங்களில் ஆசைகள் ஒழிந்து ஆனந்தம் அடைவாயே' எனக் கைவல்லிய நவநீதம் கூறுவதுமிதுவே! இது சுலபமாகத்தான் இருக்கிறது. ஆனால், செயல்பாட்டில் வருவது மிகமிகக் கடினம். கா்மங்களில் ஆசைகள் ஒழிந்து - என்பதும், ஆனந்தம் அடை -என்பதும் இங்கே படிக்கும்போது, அருகருகே இருப்பது போலத்தோன்றினாலும், இந்த இரண்டுக்கும் இடையே அளவிட முடியாத இடைவெளியிருக்கிறது. முதலில் கா்மங்களில் ஆசைகள் ஒழிந்து - என்பதைப் பார்க்கலாம். எந்தவொரு செயலைச் செய்தாலும், அதன் மூலம் என்ன லாபம் கிடைக்கும்? - என்று பார்க்கிறோமே தவிர, நாம் விருப்பப்பட்டுச்செய்த செயல்கள் நமக்குத் தந்த லாபம் என்ன? அவற்றின் மூலம் நாம் என்ன அடைந்தோம் என்று ஆராய்ந்து பார்த்தால், 'பக்'கென்கிறது. நாம் செய்த செயல்கள் அனைத்துமே மேலும் மேலும் நம்மைக் கீழே தள்ளியிருக்கின்றனவே தவிர, எதுவுமே நமக்கு ஆனந்தத்தைத் தந்ததாகத் தெரியவில்லை. உதாரணமாக, ஒன்றை அடைவதற்கான காரியங்களில் இறங்குகிறோம். படாதபாடு பட்டு நாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்கிறோம்.

 மகிழ்ச்சியாக இருப்பதைப்போலத் தோன்றினாலும், அதைவிட வேறொன்றை நினைத்து அதை அடைவதற்கான செயல்களில் இறங்குகிறோம். இப்படியே ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து, அதற்கான செயல்களில் இறங்கி, நம்மனம் குப்பைத் தொட்டியைவிடக் கேவலமாக இருக்கிறதே தவிர, ஆனந்தத்தை அடைய முயலுவதாகத் தெரியவில்லை. குளிக்கப்போய்ச் சேற்றைவாரிப் பூசிக்கொண்டதைப்  போல, திருப்பித் திருப்பிக் காரியங்களைச்செய்து வில்லங்கங்களில் மாட்டிக்கொள்கிறோமே தவிர, வெளியே வருவதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. செய்யச்சொல்லித் தூண்டுகிறது - கைவல்லிய நவநீதம்.

எந்த மனம் எல்லாவற்றிலும் போய்விழுந்து, சேற்றைவாரிப்பூசிக்கொண்டதோ, அந்த மனத்தின் மூலமே அந்தச் சேற்றை விலக்கும் வழியையும் சொல்கிறது கைவல்லியம். எப்படி ஐயா இது? தள்ளியதே காப்பாற்றுமா - என்ற சந்தேகம் எழுந்தால், ஓா் உதாரணத்தின் மூலம் அதை நமக்கு உணா்த்துகிறது கைவல்லிய நவநீதம். பல இடங்களிலும் பலவற்றிலும் விழுந்து புறப்பட்டுத் துயரத்தில் ஆழ்த்துவது -சொரூபஞானம். அச்சொரூப ஞானம் பூரணவிருத்தி ஞானமாக மாறினால், அக்ஞானம் விலகிப்போய்விடும் என்று சொன்ன கைவல்லியம், ஓா் தெளிவான உதாரணத்தைக் கூறுகிறது.

             வெயிலால் உலகுஎங்கும் பரித்தசூரியன்
             சூரியகாந்தத்தில் பற்றி அக்கினியாகி
             எரித்தவாறுபோல் சமாதியில் விருத்தியால்
             எரிக்கும் என்றுஅறிவாயே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

                                            (கைவல்லிய நவநீதம் - 79)

சூரியன் தன் வெயிலால் உலகெங்கும் சூடு உண்டாக்குகிறான். எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சூரியன், ஒரு தாளை (Paper) எரிக்காது. சூரியனுக்கும் தாளுக்கும் நடுவில் ஒரு சூரியகாந்தக் கல்லை வைத்து (லென்ஸ்), சூரியக்கதிர்களை ஒருமைப்படுத்தினால், தாள் எரிந்து போகின்றதல்லவா? அதுபோல, பல இடங்களிலும் அலையும் மனைதையடக்கி நிஷ்டைகை கூடினால், பூரண விருத்தி ஞானம் உண்டாகும். அக்ஞானம் அகலும். இது ஓரளவுக்குப் புரிந்ததைப்போல இருந்தாலும், சரியாகப் புரியமாட்டேனென்கிறது. இதற்கும் ஓா் உதாரணம் சொல்லி வழி காண்பிக்கிறது

கைவல்லியம். கண்டு அறிந்தது ஞானம்;

கேட்டதுதனைக் கருது பாவனை யோகம் கண்ட போ்சொல்லக் கேட்டது மறந்துபோம் கண்டது மறவாதே கண்ட வஸ்து மெய்;

தியான வஸ்துக்கள் பொய் கறுவி அஞ்ஞானத்தைக் கண்ட  அக்கணம் கொல்வது ஞானமே, கருமம் அன்று அறிவாயே

                                            (சந்தேகம் தெளிதல் படலம் - 83) 

இந்த ஒருபாடல்போதுமே! தெளிவு உண்டாகாதா? பற்பல உண்மைகளைச் சொல்லும் பாடல் இது. உண்மையான ஆன்மிகத்தைச் சொல்லும் பாடலும் இதுவே!ஞானம் வேறு; தியானம் வேறு. இரண்டையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கக்கூடாது. தியானம் கற்பிதம் (கற்பனை); ஞானம் அனுபவம். உதாரணமாக, அயல்நாட்டைப் பற்றி ஒருவா் விவரிக்கிறார் .நாம் அதையே நினைத்துக்கொண்டிருப்போம். "அந்த நாட்டில் தெருவெல்லாம் பளபளக்குமாம்; ஆகாயத்தை முட்டும் அளவுக்கு வீடுகளாம்" என்றெல்லாம் நினைக்கிறோமல்லவா?இது தியானம். அதுபோல, ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவா் சொல்ல, அதை அதை அடைய நினைக்கிறோம். அடைவதற்கான முயற்சிகளிலும் இறங்குகிறோம். அச்செயல்களெல்லாம் (கருமங்களெல்லாம்) அஞ்ஞானத்தைக் கெடுக்காது; அறி யாமையைக் கெடுப்பது ஞானம் மட்டுமே.

(தொடரும்)