தொடர்கள்
Published:Updated:

பூச்சரம்!

பூச்சரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சரம்!

பூச்சரம்!

பூச்சரம்!

தொட்டால் திறக்கும்

சாவியைப் பார்த்து, சுத்தியல் கேட்டது... “உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும், ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால், நீ சுலபமாகத் திறந்து விடுகிறாயே, எப்படி?” அதற்குச் சாவி சொன்னது...

“நீ என்னைவிட பலசாலிதான். ஆனால், பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். நானோ, பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்!”

- ராஜலிங்கம் (வாட்ஸ்-அப் பகிர்வு)

செயல் ஒன்று... எண்ணம் வேறு!

ஒரு தெரு வழியே பிச்சைக்காரன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் ஒரு வீட்டின் முன் நின்றான்.

வீட்டுக்குள் இருந்து ஓர் அம்மா குழந்தையோடு வந்தாள். குழந்தை கையில் அரிசியைக் கொடுத்துப் பிச்சை போடச் சொன்னாள். அதை வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டின் முன் வந்து நின்றான் பிச்சைக்காரன். அந்த வீட்டுப் பெண்ணும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையைக் கூப்பிட்டு, அந்தக் குழந்தை கையால் பிச்சை போடச் செய்தாள்.

கொஞ்ச காலம் கழித்து, இரு பெண்களும் இறந்து மேல் உலகம் போனார்கள். முதல் பெண்ணை சொர்க்கத்துக்கும் இரண்டாவது பெண்ணை நரகத்துக்கும் அனுப்பச் செய்தார் நீதி தேவன்.

இரண்டாவது பெண், “என்னை மட்டும் ஏன் நரகத்துக்குப் போகச் சொல்கிறீர்கள்? அந்தப் பெண், தன் குழந்தையிடம் கொடுத்து தர்மம் செய்த மாதிரிதானே நானும் செய்தேன்?” என்றாள்.

அதற்கு நீதிதேவன், “நீங்கள் இருவருமே குழந்தை கையால் பிச்சையிட்டாலும், உங்கள் இருவரின் நினைப்பும் வேறு மாதிரி இருந்தது. அந்தப் பெண், குழந்தை கையால் பிச்சை போட்டால், அந்தப் புண்ணியம் தன் குழந்தைக்குக் கிடைக்குமே என்று நினைத்தாள். அதனால் அவளுக்குச் சொர்க்கம். ஆனால் நீ உன் கையால் பிச்சை போட்டால், அதிக அரிசி போடவேண்டியிருக்குமே என்று நினைத்து, குழந்தையின் கையால் பிச்சை போட்டாய். உனது இந்தக் கெட்ட எண்ணத்தாலேயே உனக்குப் புண்ணியம் கிடைக்கவில்லை” என்றார்.

- மெளனமூர்த்தி (வாட்ஸ்-அப் பகிர்வு)

கப்பல் மனசு!

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது; கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்! அதுபோல், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் உங்களைப் பாதிக்காது; நீங்கள் அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றிக்கொள்ளாத வரையிலும்!

- வேணுகோபால் (வாட்ஸ்-அப் பகிர்வு)