Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

காலச் சூழல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மழைக்காலம், பனிக்காலம், குளிர்காலம், வெயில் காலம்... என்று காலங்களை, அதனதன் மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வந்தவர்கள்தான் நாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், கோடை காலம் எனப்படுகிற வெயில் காலம் முடிவுறுகிற மே மாதத்தைக் கடந்து, அக்டோபர் தாண்டியும்கூட வெயில் வறுத்தெடுக்கிறது. ஐப்பசியில் அடைமழை என்பார்கள். ஆனால், ஐப்பசி மாதத்தில் சிறு தூறலைக்கூடப் பார்க்க முடிவதில்லை. மாறாக, வெயில் காலத்தில் அல்லது குளிர்காலத்தில் தடாலென்று பெய்துவிட்டுப் போகிறது, மழை.

காலையில் சூரியன் உதயமாகும்போது சுள்ளென்று அடிக்கிற வெயில், பிறகு எட்டு மணிக்கெல்லாம் மேகங்கள் மூடி, சட்டென்று வானம் இருண்டு, 'நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன்’ என்பதுபோல் பாவனை காட்டுகிறது மழை. பிறகு, பத்து பத்தரைக்கெல்லாம் மீண்டும் சுட்டெரிக்கிற வெயிலின் ஆதிக்கம் ஆரம்பமாகிவிடுகிறது. உடலில் எந்நேரமும் புழுக்கம், கசகசப்பு, கண்களில் எப்போதும் ஒருவித அயர்ச்சி என ஆளை அடித்துப் போடுகின்றன, இந்தப் பருவ மாற்றங்கள்!

##~##
வெளிச்சத்தில் இருந்து இருள் சூழ்ந்த அறைக்குள் நுழையும்போதும் சரி... இருள் சூழ்ந்த அறையில் இருந்து வெளியே வந்து, வெளிச்சம் பார்க்கிறபோதும் சரி... வெளிச்சம், இருள் இந்த இரண்டையும் உடனே ஏற்றுக்கொள்ள முடியாமல், நம் கண்கள் கூசும்; சுருக்கென்று மெல்லியதாக உஷ்ணம் பரவி வாட்டும்; இமைகளை மூடிக்கொண்டால் தேவலை என்பதாக மனம் ஏங்கும். அந்த வெளிச்சத்துக்கோ இருட்டுக்கோ பழகுவதற்குக் குறைந்தது ஐந்து நிமிடங்களேனும் ஆகலாம்.

கடந்த 15 வருடங்களில், கண்களில் கோளாறு உள்ள அன்பர்களின் எண்ணிக்கை மெள்ள மெள்ள அதிகரித்து வருவதற்கு, கால மாற்றமும் ஒருவிதத்தில் காரணம் என்று சொல்வேன்.

ஒரு பக்கம், செயற்கை உரத்தால் விளைகிற காய்கறிகளைச் சாப்பிடுகிறோம். இதனால், காய்கறிகளுக்குள் இருக்கிற சத்துக்கள் அழிகின்றன. ஆகவே, சக்கையாகிப்போன காய்கறிகளைத்தான் நாம் உண்மையில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம். இன்னொரு பக்கம், சத்துக்களே இல்லாத நாகரிக உணவுகளுக்கு அடிமையாகிவிட்ட அவலமும் நடந்துகொண்டிருக்கிறது.

உணவு விஷயம் இப்படியிருக்க, சாலைகளில் வாகனங்கள் உமிழ்கிற பளீர் விளக்கொளியாலும், அந்த வாகனங்கள் கக்குகிற புகைகளாலும் கண்களில் ஒருவித எரிச்சல் பரவி, அதனால் ஒருவித நமைச்சல் உண்டாவதையும் நாம் அறியாமல் இல்லை.

இவற்றில் இருந்து தப்பிப்பதற்கான பயிற்சிகளில் ஒன்றை இப்போது பார்ப்போம்.

வழக்கம்போல், வஜ்ராசனத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். இரண்டு கைகளின் பெருவிரல் நகக்கண்களையும் ஒன்றாக எப்போதும்போல் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். முகத்துக்கு நேரே இணைந்திருக்கும் நகக்கண்களை நீட்டியபடி வைத்துக் கொண்டீர்கள்தானே?!

அப்படியே, அந்தக் கைகளை, நகக்கண்களை, கடிகாரத்தின் முட்கள் சுற்றுவதுபோல் வலச்சுழலாக, ஒரு வட்டமாகச் சுற்றுங்கள். கிட்டத்தட்ட, உங்களுக்கு எதிரில் கைகளால் காற்றில் வட்டமிடுகிற பாவனை இது! அப்படி வட்டப்பாதையாக, வலச்சுழலாக, கடிகார ஸ்டைலில் நகக்கண்கள் பயணிக்கிறபோது, வழக்கம்போல உங்களின் கண்கள் அந்த நகக்கண்களையே பார்த்தபடி இருக்கட்டும்.

எந்த அளவுக்குப் பெரிய வட்டமாகச் சுற்ற முடியுமோ, அந்த அளவுக்குச் சுற்றுவது நல்லது. முதலில் சும்மாவேனும், ஒருமுறை இப்படிச் சுற்றுகிறபோது, நம் கண்கள் அந்தத் தம்மாத்துண்டு இடத்தில் எங்கெல்லாம் சுழன்றடித்துப் பார்க்கின்றன என்பதை உணர்ந்தால் வியந்து போவீர்கள்.

இப்படி வட்டப்பாதையில் நகக்கண்கள் பயணிக்க, அந்த நகங்களைப் பின்தொடர்ந்து கண்கள் பயணிக்க... இந்தப் பயிற்சியை ஐந்து முறை செய்யுங்கள். பெரிய வட்டச் சுழலாகச் சுற்றினால், கண்களும் அவ்விதமே பயணிக்கும். அப்படிப் பயணித்துச் சுழல்கிற கண்களில், கண்மணிப் பாப்பாவும், கண்ணின் லென்ஸ் பகுதியும் நன்றாக, சீராக இயங்கத் துவங்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கடிகார முள்ளின் சுழற்சிபோல, வலது பக்கச் சுழலில் சுற்றினீர்கள் அல்லவா? இப்போது முகத்துக்கு எதிரே, நகக்கண்களை இணைத்தபடி, இடப்பக்கமாகச் சுற்றுங்கள். சின்ன வட்டம் போடாமல், முடிந்த அளவு பெரிதாக வட்டமிடுங்கள். அந்த வட்டப்பாதையில், உங்கள் கண்களும் மெள்ளப் பயணிக்கட்டும். இப்படியாக, ஐந்து முறை பயிற்சி செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்!

இந்தப் பயிற்சிகளை தினமும் சுமார் 20 நிமிடங்கள் செய்வதற்கு நேரம் இருக்கிறதா உங்களுக்கு? அல்லது, நேரத்தை ஒதுக்கிக் கொள்கிற திட்டமிடுதலும், பயிற்சியை மேற்கொள்கிற ஆர்வமும் இருக்கிறதா? அப்படி இருக்குமாயின், உங்கள் கண்கள் மானசீகமாக உங்களுக்கு நன்றி சொல்லும்.

எனக்குத் தெரிந்து, தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள அறிவுத் திருக்கோயில்களில், இந்தப் பயிற்சிகளை மேற்கொண்ட அன்பர்களில் சிலரை, ஆழியாறில் ஏதேனும் விழா நடைபெறும் தருணத்தில் சந்திப்பதுண்டு. அப்படி அவர்களைப் பார்க்கிறபோது, மகிழ்ந்து போவேன். எந்நேரமும் கோவைப் பழம் போலான சிவந்த கண்களைக் கொண்டிருந்தவர்கள், கருமையும் வெண்மையும் கொண்ட நிறமுள்ள, ஒளி பொருந்திய ஆரோக்கியக் கண்களைக் கொண்டவர்களாக மாறியிருப்பார்கள்.

அதேபோல், தூங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் மூக்குக் கண்ணாடியின் உதவியின்றி வாழ இயலாதவர்கள், பயிற்சிக்குப் பின்பு, தங்களின் அன்றாடப் பணிகளை மிகச் செம்மையாகச் செய்வதைப் பார்த்தேன். செய்தித்தாளை மூக்குக் கண்ணாடி வழியே பார்க்காமல், நேரடியாகவே படிக்கிற அளவுக்குக் கண்களில் கூர்மையும் ஒளியும் அதிகரித்துள்ள, ஐம்பது வயதைக் கடந்த அன்பர்களைக் கண்டு பூரித்துப் போனேன்.

இந்த உலகம் மிக ரம்மியமானது. அதே நேரம் மிகவும் பயங்கரமானதும்கூட! பூக்களும் நந்தவனமும் இருக்கிற பூமியில்தான், முட்களும் கற்களும் உள்ளன. வாசம் வீசுகிற சின்னப் பூவின் அழகை ரசிக்கவும் வேண்டும்; அதே நேரம், சின்னதொரு முள்கூடக் குத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக நடக்கவும் வேண்டும். காலில் முள் குத்திய நிலையில், அழகான பூக்களை ரசிக்க முடியாமலும் போகும், இல்லையா?

பயணத்துக்கான வாகனம் கால்கள் என்றால், அவற்றுக்கு வழிகாட்டுவது கண்கள்தான். அழகை ரசிக்கவும், ஆபத்தை உணர்ந்து தற்காத்துக் கொள்ளவும் உதவுவது நம் கண்களே! அவற்றை அக்கறையோடு கவனித்துக் காபந்து செய்வதுதானே நம் கடமை? அதுதானே நியாயம்?

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism