
இந்தக் கலியுகத்தில் சத்தியம் பேசுவதே இறைவனை அடைவதற்கும், இறைவனின் அருளைப் பெறுவதற்கும் சிறந்த வழியாகும்.
- ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்
நம்பிக்கை நலமாகும்!
பைலட்டைப் பற்றி எதுவும் தெரியாதபோதும், விமானத்தில் செல்லும்போது நாம் கவலை இல்லாமல் ரிலாக்ஸாகச் செல்கிறோம்.
கேப்டனைப் பற்றி எதுவும் தெரியாதபோதும், கப்பலில் அச்சம் இல்லாமல் ரிலாக்ஸாகத்தான் பயணிக்கிறோம்.
ரயிலில் செல்லும்போதும் இன்ஜின் டிரைவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. எனினும், நாம் ரிலாக்ஸாகத்தான் செல்கிறோம்.
அப்படியே, டிரைவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாத நிலையிலும், நாம் பேருந்தில் பயணிக்கும்போது ரிலாக்ஸாகவே இருக்கிறோம்.
அப்படியிருக்க, நமது வாழ்க்கையை இயக்கிச் செல்பவர் கடவுள் என்று தெரிந்திருந்தும், வாழ்க்கையில் நாம் ஏன் ரிலாக்ஸாக இருக்கக்கூடாது. கடவுளிடம் நம்பிக்கை வைப்போம்; அவர், நம்முடைய வாழ்க்கையை அழகாகவும் இனிமையாகவும் நடத்திச் செல்வார்.
- சந்தியா குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘உள்ளேன் ஐயா!’
கடவுள் மறுப்பாளர் ஒருவர், தன் மகனுக்கு ‘கடவுள் இல்லை’ என்றே பெயர் வைத்தார்.
மகன் வளர்ந்து பள்ளிக்குச் சென்றான். அங்கே ஒவ்வொரு நாளும் வருகைப் பதிவின்போது, வகுப்பறையில் சிரிப்பலை எழும். ஏன் தெரியுமா?
ஒவ்வொரு மாணவனின் பெயரையும் சொல்லி வருகைப் பதிவை சரிபார்க்கும் ஆசிரியர், கடவுள் மறுப்பாளரின் மகனின் பெயரையும் சொல்வார்:
‘‘கடவுள் இல்லை’’
இவன் எழுந்து சொல்வான்:
‘‘உள்ளேன் ஐயா’’ என்று!
- சங்கர்