Published:Updated:

காணும் பொருள் யாவும் சக்தியடா!

காணும் பொருள் யாவும் சக்தியடா!
பிரீமியம் ஸ்டோரி
News
காணும் பொருள் யாவும் சக்தியடா!

காணும் பொருள் யாவும் சக்தியடா!

காணும் பொருள் யாவும் சக்தியடா!

ங்கக் கடலோரம் தந்தையுடன் சென்ற அந்தச் சிறுவன், வானில் தவழும் மேகங்களையும், கரையில் இருந்த பாறைகளில் தெரிந்த மேகங்களின் நிழலையும் கண்டு ரசித்தபோது, ஒவ்வொரு மேகத்தின் நிழல் வடிவமும் ஒரு சிற்பமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது. அன்று அந்தச் சிறுவன்

காணும் பொருள் யாவும் சக்தியடா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாமல்லனின் ரசனைப் பார்வையில் உருவானதுதான் தமிழகத்தின் பொக்கிஷங்களில் ஒன்றான மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்கள்!

சிற்பங்கள் மட்டுமல்ல, இயற்கையில் இறையைக் காணும் ரசனையின் விளைவானது சித்திரங்களாகவும் உருப்பெறும். அதற்குச் சிறந்த உதாரணம் ரமேஷ் ஆச்சார்யாவின் அற்புத ஓவியங்கள்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், ‘‘சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒவ்வொன்றையும் உற்றுப் பார்க்கும் வழக்கம் உண்டு. சுண்ணாம்பு உதிர்ந்திருக்கும் சுவர், தரையில் வழிந்தோடும் நீர், தரையில் படியும் மரம் செடிகளின் நிழல் என்று நான் உற்றுப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒரு சித்திரமாக எனக்குத் தெரியும். அவற்றையெல்லாம் அந்த வயதுக்கே உரிய வகையில் கிறுக்கிக் கொண்டிருப்பேன். போகப் போக அந்த கிறுக்கல்களிலும் ஒரு சித்திரம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன்.

காணும் பொருள் யாவும் சக்தியடா!

இப்படியாக எனக்கு நானே சித்திரம் வரையக் கற்றுக்கொண்டேன். பொதுவாக இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு வடிவம் - ஒரு சக்தி மறைந்திருக்கும். கலை ரசனையுடன் உன்னிப்பாகப் பார்த்தால் அந்த வடிவத்தை - சக்தியை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். அதேபோல் ஒவ்வொரு பொருளிலும் ஒரு சித்திரம் இருக்கிறது.

அப்படி சித்திரத்தை தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும் புத்தகங்கள், கடிகாரம், மின் விளக்கு என்று நாம் காணும் பொருள்களைக் கொண்டு சித்திரங்களாக வரையத் தொடங்கினேன்’’ என்கிறார்.
‘காணும் பொருள் யாவும் சக்தியடா’ என்பதுபோல், கண்ணுக்குப் புலப்படும் பொருட்களில் இறைவடிவை உணர்ந்ததாலோ என்னவோ, அப்பொருட்கள் ஒவ்வொன்றும் இந்த சித்திரக்காரரின் கைவண்ணத்தில், அழகு இறையோவியங்களாக உருப்பெற்றுவிட்டன.

அற்புதமான அந்த ஓவியங்கள் அட்டையிலும் இங்கேயுமாக கொலுவீற்றிருக்கின்றன, உங்களுக்காக!

- எஸ்.கண்ணன்