Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தினமும் ஜிம்முக்குச் சென்று, உடற்பயிற்சி செய்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, பெருமிதமாகவும் நிறைவாகவும் இருக்கும். தேக ஆரோக்கியத்தின் மீது இப்படித்தான் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். அதிலும், இளைஞர்களிடம் தேக ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வு இருந்துவிட்டால், அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்தச் சிந்தனை தொற்றிக் கொள்ளும்; அவர்களைப் பார்ப்பவர்களிடமெல்லாம் ஆரோக்கியத்தின் அத்தியாவசியம் பற்றிய விழிப்பு உணர்வு தொற்றிக் கொள்ளும்!

உடற்கட்டின் மீது மிகுந்த பிரியமும் ஆர்வமும் கொண்டு பயிற்சி செய்கிறவர்கள்தான் ஆணழகன் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். கறுப்போ சிவப்போ, குட்டையோ நெட்டையோ... அதெல்லாம் ஒரு பொருட்டல்ல! அங்கே உடற்கட்டுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. உடலில் வலுவைக் காட்டுகிறவர்களுக்குத்தான் பரிசுகளும் பதக்கங்களும் கிடைக்கின்றன.

உடல் வலுவுடன் ஒருவர் இருந்து விட்டால் போதுமா என்றால், இல்லை என்றுதான் சொல்வேன். போரில் வெற்றி பெற, உடல் வலு அவசியம். அதேநேரத்தில், அந்தப் போரில் உடல் வலுவை எங்கெல்லாம் காட்ட வேண்டும், எப்படிக் காட்ட வேண்டும், தோள்கள், கால்கள், கைகள் என்று எந்தப் பாகத்தில் இருந்து வலுவைக் கூட்டிச் சாய்க்க வேண்டும்... என்றெல்லாம் வியூகம் அமைக்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். அப்படி வியூகம் அமைப்பதற்கு, புத்தியில் வலுவிருக்கவேண்டும். அதனால்தான் வாள் வைத்திருப்பவரையோ, தோளில் வலு கொண்டிருப்பவரையோ, ஏராளமான படை வீரர்களுடன் இருப்பவரையோ பலவான் என்று சொல்லாமல், 'புத்திமானே பலவான்’ என்று சொல்லி வைத்தார்கள், முன்னோர்கள்!

ஒரு விஷயத்தை, பத்து விதமாகச் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், பத்து பேர் சிந்திப்பதை ஒற்றை ஆளாக இருந்து யோசித்துப் பார்ப்பதிலும் வல்லவராக இருக்க வேண்டும். இப்படிப் பலவிதமாகவும், பலர் யோசிக்கும்படியாகவும் சிந்திக்கத் தெரிந்து விட்டால், அடுத்தவரது மனநிலையையும் அவர்களது உணர்வுகளையும் அறிவதும் உணர்வதும் எளிதாகிவிடும்! அப்படி யோசிப்பதற்கான நேரத்தில், மெள்ள ஒரு நிதானம் உள்ளுக்குள் தானாக வந்துவிடும். அந்த நிதானம், இன்னும் ஆழ்ந்து யோசிக்கவும், யோசித்ததைச் சிறப்புறச் செயல்படுத்தவும் வைக்கும். 'பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். நிதானம் இருக்குமிடத்தில் பதற்றத்துக்கு வேலையே இல்லை. பதற்றமின்றிச் செயல்படுகிற எந்தக் காரியமும் செவ்வனே நடந்தேறும் என்பதில் எந்தவித ஐயப்பாட்டுக்கும் அவசியமே இல்லை.

சூழ்ச்சிகளால் நிரம்பிய இந்த உலகில், பொய்யும் புரட்டும் அதிகமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், புத்தியில் தெளிவு மிக மிக அவசியம் என்பதை உணர்கிறீர்கள்தானே?! பாடப் பாட ராகம் என்பது போல், யோசிக்கிற திறனையும் கிரகிக்கிற தன்மையையும் பெருக்கிக் கொள்வதற்கு, சில பழக்கங்களும் பயிற்சிகளும் போதுமானது! அதில் 'கபாலபதி’ எனும் பயிற்சிக்கு முக்கியமான இடம் உண்டு.

##~##
'எங்க பையன் படு ஷார்ப்! எந்த விஷயமானாலும் உடனே கிரகிச்சுக்குவான். அவனுக்கு கிராஸ்ப்பிங் பவர் ஜாஸ்தி’ என்று பெருமிதத்துடன் சொல்வார்கள் பெற்றோர்கள். அவர்களில் சிலர், 'எங்க பையன் படுகெட்டி தான். எல்லாத்தையும் நல்லாப் புரிஞ்சுக்கிறான். ஆனா, என்னன்னே தெரியலே... எப்பவும் 'டல்’லாவே இருக்கான். திடீர்னு அவனே கை- காலெல்லாம் அலம்பிட்டு, புஸ்தகத்தை எடுத்து வெச்சுக்கிட்டுப் படிக்க ஆரம்பிச்சிடுவான். ஆனா... ஒரு அரை மணி நேரம் ஆனதும், சட்டுனு புஸ்தகத்தை மூடி வைச்சிட்டு, படுக்கைல சுருண்டுக்கறான்’ என்று என்னிடம் வந்து பலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது, புத்தியில் தெளிவும் தீட்சண்யமும் எந்த அளவுக்கு முக்கியமோ, உடலில் வலுவும் அந்த அளவுக்கு முக்கியம். வாகனத்தின் இரண்டு சக்கரங்களும் சரியாக, ஒரே வேகத்தில் இயங்கினால்தான், பயணம் சுகமாக இருக்கும். ஒரு சக்கரம் மட்டும் மெதுவாகச் சுற்றினால், சேர வேண்டிய இடம் வரும்வரை, சிக்கலையும் அயர்ச்சியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்!

புத்தியானது 100 கி.மீ. வேகத்தில் இயங்கினால், நம் உடலும் அதே 100 கி.மீ. வேகத்துடன் இணைந்து இயங்கவேண்டும். சிந்திப்பதற்கு புத்தி உதவும் எனில், அதனைச் செயல்படுத்துவதற்கு உடலும் ஒத்துழைக்கவேண்டும். என்ன, சரிதானே?! மனவளக் கலையின் 'கபாலபதி’ பயிற்சியானது, புத்திக்கும் உடலுக்குமான அழகான பயிற்சி; அவசியமான பயிற்சி!

முதலில், சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அதாவது, சப்பணமிட்டபடி, ரிலாக்ஸ்டாக அமர்ந்து கொள்ளுங்கள். இடது கை பெருவிரல் எனப்படும் கட்டைவிரலால், மூக்கின் இடது துவாரத்தை அழுத்தி, அடைத்துக் கொள்ளவேண்டும். அப்போது, வலது துவாரத்தின் வழியே, மூச்சை வேகமாக வெளியே விடவேண்டும். பிறகு, அதே வலது துவாரத்தின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்!

ஒரு விஷயம்... 'கபாலபதி’ எனும் பயிற்சி யின்போது, அந்தப் பயிற்சியில் மூலபந்தம் ஏற்படுத்திக் கொள்வது ரொம்பவே அவசியம்.

அது என்ன மூலபந்தம் என்கிறீர்களா?

நம் உடலில் இருந்து காற்று வெளியேறுகிற வழிகளில், ஆசனவாய்ப் பகுதியும் ஒன்று. அடி பம்ப்பில் மாங்கு மாங்கென்று, கை வலிக்க வலிக்கத் தண்ணீர் அடித்து, அதனை ஓட்டை குடத்தில் நிரப்பிக்கொண்டு இருந்தால் என்னாகும்? தண்ணீர் ஒருபக்கம் வெளியேறிக்கொண்டே இருக்க, நம் உழைப்பு அத்தனையும் வீண் ஆகும் அல்லவா? அதுவேதான் இங்கேயும்! மனவளக் கலையின் கபாலபதி பயிற்சியின்போது, ஆசனவாய்ப் பகுதியை இறுக்கிக் கொண்டால், அதன் மூலம் காற்று வெளியேறாது. அதைத்தான் மூலபந்தம் என்பார்கள்.

கபாலம் எனப்படுகிற மூளைப் பகுதிக்குச் செல்லக்கூடிய காற்றானது, அதில் பட்டு, உடலின் பல்லாயிரக்கணக்கான நரம்புகளையும் தொட்டு உசுப்பிவிடும். மெள்ள மெள்ள உடலுள் பெரிய மாற்றங்களை உண்டாக்கும். அப்படி மூச்சுக் காற்று உள்ளுக்குள் சென்று மாற்றங்களை நிகழ்த்துகிற தருணத்தில், ஓட்டைக் குடம் போல் ஆசனவாய்ப் பகுதி மூலம் காற்று வெளியேறிக்கொண்டே இருந்தால், தேகத்துக்கும் புத்திக்கும் எப்படிப் பலன் கிடைக்கும்?

ஆகவே, அங்கிருந்து காற்று வெளியேறாத வகையில், கொஞ்சம் இறுக்கிக்கொண்டது போல் அமர்ந்திருப்பது உத்தமம்!

எனவே, கபாலபதி பயிற்சியைத் தொடங்கும் முன், மூலபந்தத்துடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அன்பர்களே!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா