Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!

கைகளை கவனி!

வாழ்க வளமுடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்க வளமுடன்!

மூளையின் கட்டளையால்தான் இயங்குகின்றன உயிர்கள்! மின்னல் வேகத்தில் மூளை உத்தரவிட, அதனைக் கணநேரத்தில் முடிக்கின்றன, கைகள்!

சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு, டீக்கடைக்குச் செல்கிறீர்கள். அப்போது யாரோ ஒருவர் சைக்கிளையோ மோட்டார் சைக்கிளையோ நிறுத்த... அது உங்கள் சைக்கிளில் லேசாக இடிக்க, சட்டென்று சரிகிறது சைக்கிள். அப்படி சைக்கிள் விழுகின்ற வேளையில் கண்கள் பார்த்ததும், 'சைக்கிள் விழுது பார், பிடி! பிடி!’ என மூளையிடமிருந்து கட்டளை வர... விறுவிறுவெனத்

தாவியோடி, சைக்கிளை நெருங்குகிறோம். ஆனால் இந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கிற நொடியிலேயே சைக்கிள் கீழே விழுந்துவிடலாம். ஆனாலும் மூளையின் உத்தரவை, கைகள் சிரமேற்கொண்டு செய்யும். விழுந்த சைக்கிளை நிமிர்த்தி வைக்கும்.

##~##
கைகளால் நம் உணர்ச்சிகளைக்கூடப் பிறருக்கு உணர்த்திவிட முடியும். அத்தனை மகத்துவம், கைகளுக்கு உண்டு.

கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வட்டமாக்கிக்கொண்டு, ஒருவரின் செயலை, எந்த வாய்வார்த்தையுமின்றி, 'சூப்பர்’ எனப் பாராட்டமுடியும். அதேபோல் ஒருவர் மேல் கோபம் என்றாலும், ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி, 'கொன்னுடுவேன்’ என மிரட்டமுடியும்.

அதுமட்டுமா? வார்த்தைகள் மொத்தத்தையும் மனசுக்குள் பூட்டிக்கொண்டு, கோபப்படும்போது சிலர் கைவிரல்களைச் சொடுக்கெடுப்பார்கள்; விரல்களை உள்ளங்கையில் குவித்துக் கொண்டு, கை பிசைவார்கள். இன்னும் சிலர், இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு, அந்தக் கைகளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மனசின் எண்ணங்களை, கண்களே உணர்த்தி விடும் என்பார்கள். சில தருணங்களில், கண்கள் பிரதிபலிப்பதைக் கைகளே செய்துவிடும்.

நாம் சாப்பிடுவதைக்கொண்டே நம் குணாதிசயங்களைச் சொல்லலாம் என்கின்றனர் அறிஞர்கள். 'என்ன இப்படிக் கோழி மாதிரி கையை அலைஞ்சுக்கிட்டே சோத்தை எடுக்கறே?’ என்று நிறைய வீடுகளில் சொல்வார்கள். 'நல்லா வக்கணையா, வள்ளு வதக்குன்னு எடுத்துச் சாப்பிட வேணாமா? அப்பத்தானே கண்ணு... உடம்புல தெம்பு கூடும்’ என்று உணவில் மட்டுமின்றி, சாப்பிடுகிற முறையிலும் கரிசனம் காட்டுகிற தாயுள்ளங்கள் வாழ்கிற பூமி, நம்முடையது!

சிலர், இரண்டு விரல்களை விட்டுவிட்டு, 'இதுக்கும் சாப்பிடுறதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்பதுபோல் உணவருந்துவார்கள். இதைக்கண்ட பெரியோர், பதறியடித்தபடி, 'இப்படி விரலை விட்டுப்புட்டு சாப்பிடக் கூடாது ராசா! அஞ்சு விரலையும் சேர்த்தாப்போல வைச்சு, சாப்பிட்டாத்தான் உறவுகள்கிட்ட, சொந்தபந்தங்கள்கிட்ட பாசம் வைக்கிற புள்ளையா நீ இருப்பே! இப்படி விரல் படாம சாப்பிட்டா... பெத்தவங்ககிட்டக்கூட, அதிக ஒட்டுறவு இல்லாம ஒரு பிரிவினையோடதான் இருப்பே கண்ணு!’ என்று கலங்கியபடி சொல்வார்கள். ஆக, கைகள் வெறும் விரல்கள் அல்ல; அவை, நம் குணங் களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்!

அப்பேர்ப்பட்ட கைகளைப் பாதுகாப் பாகவும் பலம் கொண்டதாகவும் வைத் திருக்கும் பொறுப்பு நம் கைகளில்தான், அதாவது நம்மிடம்தான் உள்ளது!

முதலில் நேராக நில்லுங்கள். வழக்கம் போல, இரண்டு பாதங்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்கட்டும். இரண்டு கைகளையும் மெள்ள மடக்கி, கிட்டத்தட்ட நம் முகத்துக்கு எதிரேவைத்துக் கொண்டு, கட்டை விரல்களின் நுனிகளை ஒன்றுடன் ஒன்று முட்டுவது போல் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற விரல்களை மடித்துக் கொள்ளுங்கள். இரண்டு முழங்கைகளும் நம் உடலில் இருந்து சுமார் ஓரடி விலகியே இருக்கட்டும்.

வாழ்க வளமுடன்!

பிறகு, நம் உடலை அப்படியே வலப்புறம் மெள்ளத் திருப்புங்கள். அப்படிச் செய்யும் போது, கட்டைவிரல்களின் நுனிகளின் இணைப்பு முனை யைப் பார்த்தபடியே கண்கள் இருக்கவேண்டும் என்பது அவசியம். அதேபோல், வலப் பக்கம் திரும்பும்போது, வலது காலை ஊன்றிக்கொண்டு, இடது குதிகாலைத்

தூக்கி, இடதுகாலின் பெருவிரலுக்கு சற்று அழுத்தம் கொடுத்தபடி, உடலைத் திருப்பவேண்டும். இதையடுத்து, இடப் பக்கம் திரும்ப வேண்டும். இடது காலை ஊன்றியபடி வலது காலின் குதிகாலை மெள்ளத் தூக்கி, அந்த வலது பெருவிரலுக்கு அழுத்தம் கொடுத்தபடி திரும்பவேண்டும்; உடலில் இருந்து ஓரடி தள்ளியிருக்கிற இரண்டு முழங்கைகள்; இரண்டு கட்டை விரல்களின் நுனிப்பகுதியும் முட்டிக் கொண்டிருக்கிற இடத்தை ஊன்றிக் கவனித்தபடி கண்கள் என இருக்க வேண்டும். இப்படி, வலது இடது என ஐந்து முறை தினமும் செய்யுங்கள்.

இதனால், கைகளில் ரத்த ஓட்டம் சீராகும்; தூங்கிக்கொண்டிருக்கும்போது கை-கால் என ஏதேனும் உறுப்புகள் மரத்துப் போகும் இல்லையா? அந்த நிலை இனி வராது. கைகளும் தோள்களும் பலம் பெறும்!

அந்தக் காலத்தில், அதாவது சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை, அரிசியோ காய்கறியோ சந்தையில் வாங்கி, பெரிய கூடையில் வைத்துக்கொண்டு, தலையில் சும்மாடு வைத்து, அதன் மேலே கூடையை வைத்துக்கொண்டு, கைகளை வீசி நடப்பார்கள். பிறகு, அது கிராமப் பழக்கம் என்று கேலி

பேசப்பட்டதால் குறைந்து விட்டது. இப்போது, கட்டைப் பை என்று சொல்லப்படுகிற 'பிக் ஷாப்பர்’ பைகள்தான் அதிகம்! இந்தப் பைகளில்தான் காய்கறிகள் வாங்குகிறோம்; ரிப்பேராகிவிட்ட மிக்ஸி ஜார்களை எடுத்துக் கொண்டு செல் கிறோம். வெளியூர்களுக்கு பயணம் செய்யும்போது, குடிப்பதற்கு மூன்று நான்கு தண்ணீர் பாட்டில்களும் உணவும் (முன்பெல்லாம், இட்லி, சப்பாத்தி, புளியோதரை என்று வீடுகளில் தயார் செய்து எடுத்துச்சென்றதெல்லாம் பழங்கனவு. இன்றைக்கு ஃப்ரைடு ரைஸ், நூடூல்ஸ், பிஸிபேளாபாத் என பேக்கிங்கில் வாங்கி வைத்துக் கொள்கிறோம்!) எடுத்துச் செல் கிறோம். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், பொருட்களை ஒரு பக்கமாகவும் கட்டைப்பையின் கட்டைகள் வேறு பக்க மாகவும் நம் கைகளைச் சேர்த்துக்கொண்டு கபடி விளையாடுவதை உணரலாம்.

இதனால், கைகளிலும் தோளிலும் வலி ஏற்பட்டு இம்சிக்கும். கம்ப்யூட்டர் கீ போர்டு உபயோகிக்கும் அன்பர்களுக்கும் இந்தப் பிரச்னைகள் உண்டு! நான் மேலே சொன்ன பயிற்சிகளை மேற்கொள்வதால், மூட்டுப் பகுதிகளில் உறுதி கிடைக்கும்; வாத நோய்கள் வர வாய்ப்பில்லாது போகும். இடுப்பு பிடித்துக்கொண்டு உபத்திரவம் செய்யாது; மூளை, நரம்பு மண்டலங்கள் மற்றும் சுரப்பிகள் சுறுசுறுப்புடன் இயங்கும்!

உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக் குக் குரல் கொடுப்போம். கூடவே, நம் கைகளுக்கும் கை கொடுப்போமே!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism