Published:Updated:

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!
வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

இந்த இதழ் சக்தி விகடன்:  https://bit.ly/2CPD3KB

இந்த வார சக்தி விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2Vv5xAO

ஆதித்ய அபயப் பிரதாம்பிகை! - ஒருமுறை, தமது கடமைலிருந்து தவறிய சூரியபகவான் மீது ஈசன் கோபம் கொண்டார். ஈசனின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரியன் அம்பிகையைச் சரண் அடைந்தார். சூரியனைப் பாதுகாத்து அபயம் அளித்த அம்பிகை, திருநீடூர் எனும் திருத்தலத்தில் ஆதித்ய அபயப் பிரதாம்பிகை என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திருநீடூர். தேவாரப்பதிகம் பெற்ற இந்த ஆலயத்தில் ஈசன் சோமநாதேஸ்வரராக அருள்கிறார். இங்கு வந்து வழிபட்டால் சூரியனின் நல்லாசி பெறலாம்; அவரின் திருவருளால் சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள்...

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

- இதுபோல் நம் விருப்பத்தை நிறைவேற்ற வகை செய்யும் தை மாத தரிசனத்துக்குரிய சிறப்புக் கோயில்களைப் பட்டியலிட்டுள்ளது 'விருப்பத்தை நிறைவேற்றும் தை மாத தரிசனம்...' எனும் சிறப்புக் கட்டுரை.

காசி மற்றும் ராமேஸ்வரத்துக்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது இலங்கையின் நகுலேஸ்வரம். இங்கே வந்து தலத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டுச் சென்றால், அனைத்துவித தோஷங்களும் நீங்கிப் பலன் பெறலாம்  என்பது நம்பிக்கை. இதேபோல, சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து நீராடி வணங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. சனிதோஷம்  நீங்க, காலசர்ப்பதோஷம் நீங்க, பித்ருக்கள் சாபம்  நீங்க, தீர்த்தமாடி வழிபடுவது நல்ல பலனைத் தரும். மகப்பேறு வரம் பெறவும் உகந்த தலம் இது.

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!


 
இங்கு வேண்டிக்கொண்டு, அந்த வரப்பலனால் குழந்தை பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தத்துக் கொடுத்து, பின் காணிக்கை செலுத்திக் குழந்தையைத் திரும்பப் பெற்றுக்கொள்வது, இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கமாகும். எண்ணற்ற  சைவப் பெருமக்கள் தங்கள் பித்ரு கடன்களைக் கீரிமலைத் தீர்த்தத்தில் செலுத்தி வருகின்றனர். அதன்பின் ஆலயம்சென்று மோட்ச தீபம் ஏற்றி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை, நிறைவு செய்கின்றனர். விஜயநகர மன்னரால் காசியிலிருந்து அழைத்து வரப்பட்ட அந்தணர் வழியில் வந்த, நகுலேஸ்வர ஆதீன பரம்பரையினர், இவ்வாலயத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.

- இந்தப் பரிகாரத் தலத்தின் முழு வரலாறு மட்டுமின்றி வரம் பெற்று வருவதற்குரிய தேவையான வழிகாட்டுதலையும் வழங்குகிறது 'இந்தியாவுக்கு ராமேஸ்வரம்... இலங்கைக்கு நகுலேஸ்வரம்!' எனும் திருத்தலக் கட்டுரை.

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

கொற்றவை: பெரும்பாலும், மகிஷனை வதம் செய்யும் கோலத்திலேயே கொற்றவையை நாம் தரிசித்திருப்போம். இங்கே, சற்று வித்தியாசமாக... மகிஷனை வதம் செய்த மகிழ்ச்சியில், ஒரு காலை சிம்மத்தின் மீதும் மறுகாலை தரையிலும் ஊன்றி எழில் கோலம் காட்டுகிறாள் கொற்றவை!

- பகை மன்னனையும் வியந்துப் போற்றி வணங்கச் செய்த பெருமைக்குரியது, காஞ்சி கயிலாசநாதர் கோயில். அதுமட்டுமல்லாமல், அவன் தன் நாட்டிலும் அப்படி ஓர் ஆலயத்தை எழுப்பத் தூண்டிய திருக்கோயில் இது. பட்டடக்கல் விரூபாட்சர் கோயில், எல்லோரா கயிலாசநாதர் கோயில், தஞ்சை பெரியகோயில் ஆகியவற்றுக்கு அடிப்படையாக - முன்மாதிரியாக அமைந்த திருக்கோயிலும்கூட... இக்கோயில் வரலாற்றுச் சிறப்புகளையும் கலைப் பெருமைகளையும் படங்களுடன் வியத்தகு முறையில் விவரிக்கிறது 'கலைப் பொக்கிஷம் காஞ்சி கயிலாயம்!' எனும் சிறப்புக் கட்டுரை. 

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

லக்னத்திலிருந்து 6-ம் இடம் என்பது ருண - ரோக - சத்ருஸ்தானம் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்குப் பொருளாதார ரீதியாக சரிவு ஏற்படுவதுடன், பெருத்த கடன்களையும் உண்டாக்கும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் மூலம் கடன்களிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் 12 ராசியினருக்கும் உரிய பரிகாரங்களைப் பட்டியலிட்டுள்ளது `கடன் தீர்க்கும் பரிகாரங்கள்!' எனும் ஜோதிட வழிகாட்டுதல்.

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

வீடு வாழ்வின் வரம். அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்க, அதன் கட்டமைப்பும் அறைகளின் அமைப்பும் மிகச் சரியாக அமைய வேண்டும். குறிப்பாக பூஜையறை. உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தை பூஜை அறையாக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம். அதனால் புண்ணியங்கள் பெருகும். பூஜை அறை வடகிழக்கில் எனில், மற்ற அறைகள் எந்தெந்த திசைகளில் அமையப்வேண்டும்? விரிவாக அறிய வழிவகுக்கிறது 'அறைகளும் திசைகளும்!' எனும் ஜோதிட சிறப்புக் கட்டுரை. 

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

"...அவளுக்கு அவருடைய செய்கையால் மான கஷ்டம் முதலிய குறைகள் வரும். அதற்காகப் பெண்கள் வருந்தக் கூடாது. நமது ஒரு மனது; அது அவர் மனது என்று அனுசரித்து வருபவள்தான் பதிவிரதை. அவர் நல்ல பதியாக இருந்தால் நம் பதிவிரதத்தைக் காட்ட முடியாது. 

'பரமேஸ்வரன் இப்படிக் கொடுத்துப் பார்க்கிறார்' என்று சந்தோஷமாக இருக்க வேண்டும். அவமானம், கஷ்டமெல்லாம் கொஞ்சம் காலம்தான் இருக்கும். `இருக்கட்டும். அவர் மனதுதான் நம் மனது. நமக்கென்று வேறு இல்லை' என்று இருந்துவிட்டால் அதிகப் புண்ணியம் உண்டாகிறது. அவமானம் முதலியவற்றுக்குப் பயந்துகொண்டு விரோதித்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் இகத்தில் லாபமிருக்கலாம். ஆனால், நஷ்டம் அதிகம். சித்த விருத்தியையே அர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். பதி நன்றாக இருந்தால், அவர் நன்றாக இருக்கிறார் என்பதற்காக அன்பாக இருப்பது பாதி விரத்தியம் ஆகாது."

இப்படி, மணமான பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தர்க்கரீதியாக விளக்கியிருக்கிறார் மகா பெரியவா. அதே அருளுரையில் மகான் மேலும் தொடர்ந்ததை 'பதியே பரமேஸ்வரன்!' எனும் மகா பெரியவா தொடர் பகுதியில் வாசியுங்கள். 

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

`எருது ஒன்றின் மீது ஒரு கொசு நீண்ட நேரமாக அமர்ந்திருந்ததாம். எருது கண்டுகொள்ளாமல் போகவே, கொசு கோபித்துக்கொண்டு, 'நீண்ட நேரமாக அமர்ந்திருந்தேன், உங்களுக்கு அது பெரும் தொந்தரவாக இருந்திருக்கக்கூடும். எனவே, நான் கிளம்புகிறேன்' என்று சொன்னதாம். 

அப்போதுதான் கொசுவைக் கண்ட எருது 'நீங்கள் வந்ததையே இப்போதுதான் அறிந்தேன், ஒன்றும் கவலையில்லை. நீங்கள் குடும்ப சகிதமாகக்கூட வந்து என்மீது அமர்ந்துகொள்ளலாம். அதனால் பாதகமில்லை' என்றதாம் எருது. அந்தக் கொசு அளவே உங்களுடைய கவலைகள் இருக்க வேண்டும். எருதைப் போன்ற வலிமையான நெஞ்சம் உங்களுக்கு வேண்டும். ஆயிரம் முறைகள் வீழ்ந்தாலும் லட்சியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் இலக்குகள் பொதுநலமாக இருந்தால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்...

- ஜனவரி-12 சுவாமி விவேகானந்தர் அவதார தினம். இதையொட்டிய `ஞானச் சூரியன்!' எனும் சிறப்புப் பகிர்வு தரும் செய்திகள்தான் ஏராளம். 

வழி பிறக்க வழிகாட்டும் சக்தி விகடன்: 4 நிமிட வாசிப்பில் 8 கட்டுரைத் துளிகள்!

> பால அனுமன், யோக அனுமன், தீர அனுமன், பஜன அனுமன், வீர அனுமன், தியான அனுமன், பக்த அனுமன், பவ்ய அனுமன், சஞ்ஜீவி அனுமன் ஆகிய நவ அனுமன் திருவடிவங்களுக்கும் சேர்த்து திண்டுக்கல் ராம் நகரில் ஓர் ஆலயம் உள்ளது. சகல திசைகளையும் நோக்கி அமைந்திருக்கும் இந்த அனுமன் வடிவங்களை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

> சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீற்றிருக்கும் வராக ஆஞ்சநேயர்,  வராக முகத்துடன் வடக்கு நோக்கி அருளுகிறார். இவரை வழிபட்டால், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

> தருமபுரி ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில், ஒன்றரை அடி உயரமே கொண்ட அனுமன், அஞ்சலி ஹஸ்தராக கிழக்கு  நோக்கி சேவை சாதிக்கிறார். தேனபிஷேகம் செய்து இவரை வழிபட்டால், சங்கடங்கள் நீங்கி வாழ்க்கை இனிக்கும் என்பது நம்பிக்கை.

- அஞ்சனையின் மைந்தன் என்பதால் ஆஞ்சநேயர். வாயுவின் அருளால் பிறந்தவர் என்பதால் மாருதி - வாயு புத்திரன் ஆகிய பெயர்களைப் பெற்ற அனுமனின் சிறப்புகளையும் அல்லல்கள் நீங்கவல்ல வழிபாடுகளையும் எடுத்துச் சொல்கிறது 'வாயு மைந்தனே... ராம தூதனே!' எனும் சிறப்புக் கட்டுரை.