Published:Updated:

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!
தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

இந்த இதழ் சக்தி விகடன்: https://bit.ly/2QLFcdO

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

ஒருமுறை நல்லியக்கோடனின் நாட்டைக் கைப்பற்றும் பொருட்டு முந்நூற்றுமங்கலத்தை சோழர்கள் முற்றுகையிடப் போவதாகத் தகவல் கிடைத்தது. சோழர்களின் படைவலிமையுடன் ஒப்பிடும்போது, நல்லியக் கோடனின் படை வலிமை மிகக் குறைவு. ஆனாலும், நல்லியக்கோடனின் மனதில் சற்றும் கலக்கமோ அச்சமோ இல்லை. காரணம், கந்தக் கடவுளிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி! அனுதினமும்தான் வழிபடும் முன்னூற்று மங்கலம் ஆடவல்லீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை மனம் நெகிழ, கண்களில் கண்ணீர் கசிந்துருகப் பிரார்த்தனை செய்தான்.

அன்று இரவு அவன் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ``நாளை இரவு குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்தெடுத்து வந்து, என் சந்நிதியில் வைத்து வழிபடுவாயாக. விடிந்ததும் அவற்றையே ஆயுதங்களாகக் கொண்டு தைரியமாகப் போர் செய். நான் வேல் படையாக இருந்து உன்னை வெற்றிபெறச் செய்வேன்’’ என்று அருளினார். மன்னனும் அப்படியே செய்தான். மறுநாள் போர்க்களத்துக்குச் சென்றான். போர்க்களத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு தாமரைகள் மலர, அந்தக் கணத்தில் ஒரு விந்தை நிகழ்ந்தது. 

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

மலர்ந்த தாமரைகளுக்குள் இருந்த வண்டுகள் பறந்து சென்று எதிரிப் படையினரின் யானைகளின் காதுகளில் புகுந்தன. வண்டின் குடைச்சல் தாங்காமல் மதம் பிடித்துவிட்ட யானைகள் பின்னால் திரும்பித் தலைதெறிக்க ஓடத் தொடங்க, எதிரிகளின் சைன்னியம் நிலைகுலைந்தது; எதிரிப்படை வீரர்கள் சிதறி ஓடினார்கள். மட்டுமன்றி நல்லியக்கோடன் எய்த அம்புகள் யாவும் முருகப்பெருமானின் கை வேல்களாக மாறி எதிரிகளை அழித்தன. இப்படிப் புராண - சரித்திர காலங்களில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் வேல் நிகழ்த்தும் அற்புதங்கள் பல உண்டு...

- முற்காலம் தொட்டு தற்காலம் வரையிலும் உதாரணங்களை அடுக்கி, 'வேலிருக்க வினையில்லை' என்ற முருக அடியவர்களின் உறுதியான உளப்பூர்வமான நம்பிக்கையை 'தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!' என்ற முதன்மைக் கட்டுரையாக வடித்திருக்கிறார் எஸ்.கண்ணன்கோபாலன். 

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

குறிஞ்சி நிலத்தெய்வமான குமரன், வேலூர் மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த பல தலங்களில் குடிகொண்டுள்ளான். அவற்றில் ஒரு திருத்தலம், வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள பாலமதி. இங்கு கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் உள்ள பாலமதி மலைக்குன்றில் குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயம் உள்ளது.

`பாலமதி என்ற திருநாமம் இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. பால என்றால் குழந்தை; மதி என்றால் சந்திரன், சந்திரன் குழந்தையாக வழிபட்ட தலமாக இருக்கலாம். பால என்று வடமொழியில் உச்சரித்தால் நெற்றி (கபாலம்). நெற்றியில் பிறையை அணிந்த முருகன் என்றும் பொருள் கொள்ளலாம்' என்பது அவர்களின் விளக்கம். இந்த முருகனை வணங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை...

- பாலமதி குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தின் சிறப்புகளையும் மேன்மைகளையும் அனுபவபூர்மாகக் காட்டுகிறது 'தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!' எனும் சிறப்புக் கட்டுரை. 

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே... மேற்குமலைத்தொடரின், ஒரு சிதறலாகத் திகழ்கிறது தோரணமலை. முருகன் குடிகொண்டிருக்க, அவனது அருள்சாந்நித்தியம் தழைத்தோங்கித் திகழும் இந்த மலைப்பகுதியே, ஒருகாலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது என்கிறார் சித்தர் ஆராய்ச்சியாளர் காமராஜ்...

அடிவாரத்திலிருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். மேலே குகைக்கோயிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் தோரணமலை முருகன். இங்கு வந்து இந்த அழகனை மனதாரப் பிரார்த்தித்து வழிபட்டால், தடைப்பட்ட மற்றும் தள்ளிப் போகும் திருமணங்கள் நடக்கும்; புத்திரபாக்கியம், வேலை, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பல பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை...

- தோரணமலையில் நேரடியாகச் சென்று வந்த சிறப்பான அனுபவத்தை நல்குகிறது 'தைப்பூச தரிசனம்! - சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்!' எனும் சிறப்புக் கட்டுரை.

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

``ஒரு மாணவிக்குப் பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இருந்து வந்தது. அவளுக்குப் பகல் நேரங்களில் ஓரளவுக்குப் பார்வை தெரியும். ஆனால், இருட்டிய பிறகு நடப்பதற்கே கஷ்டப்படுவாள். ஸ்டேஜில் நடனமாட வேண்டி வரும்போது, அவளை மட்டும் ஆடப்போகிற அரங்கத்துக்கு முன்னரே ஒரு தடவை அழைத்துக்கொண்டு போய் பயிற்சி கொடுத்துவிடுவேன். தற்போது ஹையர் ஸ்டடீஸ் செய்து கொண்டிருக்கிறாள். அவளை செக்கப் செய்த கண் மருத்துவர், அவள் அபிநயங்களைக் கூர்மையாகப் பார்த்து நாட்டியம் கற்றுக்கொண்டதால்தான், பார்வை வேகமாகக் குறையாமல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். 

இன்னொரு மாணவிக்கு டிஸ்லெக்ஸியா பிராப்ளம். அதனால், அவளால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவாள். தொடர்ந்து சில வருடங்கள் பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பிறகு, அவளுக்கு கான்சன்ட்ரேஷன் அதிகமாகி, பட்டப்படிப்பு  வரை முடித்துவிட்டு, தற்போது வேலைபார்த்துக்கொண்டிருக்கிறாள்’’ என்றவர் குரலில் பெருமையும் மகிழ்வும்.

- பதினேழு வருடங்களாக பத்மாலயா என்கிற நாட்டியப் பள்ளியை நடத்தி வரும் பத்மலஷ்மி தன் அனுபவங்களுடன் 'நாயகி' தீம் குறித்து விவரிக்கிறது 'நாயகி... நர்த்தகி!' எனும் கட்டுரைப் பகிர்வு.

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

``ஒருநாள் அதிகாலை. கங்கைநதி தீரம். ரிஷிகேஷ் அருகே புராணி ஜாடி என்ற இடம். அங்கே ஓலைக்குடில் ஒன்றில் இளந்துறவிகள் இருவர் அங்குத் தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர், தேநீர் தயாரிக்க வேண்டி மண்ணெண்ணெய் ஸ்டவ்வைப் பற்றவைத்தார். எதிர்பாராதவிதமாக அது குபீரென்று வெடிக்க, கண நேரத்தில் மொத்த குடிலும் பற்றி எரியத்தொடங்கியது. 

இந்த இதழ் சக்தி விகடன்: https://bit.ly/2QLFcdO

சற்றுத்தொலைவிலிருந்த சந்நியாசிகள் சிலர், இவர்களுக்கு உதவி செய்வதற்காக ஓடி வந்தனர். அதற்குள், இளந்துறவிகள் இருவரும் நெருப்பிலிருந்து வெளியே பாய்ந்தனர். இருவரில் ஒருவர் பதற்றத்துடன் நின்றிருக்க, இன்னொருவரோ இதழில் புன்னகையுடன் எரியும் குடிலை உற்றுநோக்கிய வண்ணம் நின்றிருந்தார். குடிலுக்குள்ளிருந்த அவர் உடைமைகள் யாவும் எரிந்து நாசமாயின. அவர் பல ஆண்டுகளாகச் சேர்த்து வைத்திருந்த - கண்ணெனக் காத்து வந்த அரிய சம்ஸ்கிருத, வேத - வேந்தாந்த நூல்கள் யாவும் மிச்சமின்றி எரிந்துபோயின. 

ஆனாலும், அந்த இளந்துறவி சிரித்தபடியே யாவற்றையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் எந்த மாற்றமோ பாதிப்போ தெரியவில்லை. இழப்பதற்கும் ஏதுமின்றி, வருத்தப்படவும் ஏதுமின்றி, நடப்பதை ரசித்துக்கொண்டிருந்த அந்த இளந்துறவி யார் தெரியுமா?

பின்னாளில் உலகுக்கே ஞான ஒளியூட்டிய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிதான அவர்!

- மனமது செம்மையானால் கிடைக்கும் மகத்துவங்களுக்கு அளவேது? சரி... மனம் செம்மையாக என்னென்ன தேவை?  குருமார்களின் வழிகாட்டல் தேவை; மகான்களின் நல்லாசிகள் தேவை. அப்படியான பெரும்பேறு கோவை மாநகர் அன்பர்களுக்கு நிகழ்ச்சி ஒன்றின் மூலம் வாய்த்தது. அந்த நிகழ்ச்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறது 'மலர்ந்தன மனப் பூக்கள்!' எனும் கட்டுரை.

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

ஒருவரது வாழ்க்கை சகல செல்வங்களுடனும் மகிழ்ச்சியாக அமைய, அவரின் ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனப்படும் 10-ம் இடத்துக்கு உரிய கிரகமும் அந்த இடமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 10-ம் இடத்துக்கும் அந்த ஸ்தானத்துக்கு உரிய கிரகத்துக்கும் அசுபர்களின் சேர்க்கை, பார்வை ஏற்பட்டிருந்தால் உத்தியோகம், தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படாது. குறிப்பாக ஜீவன ஸ்தானத்துக்கு உரிய கிரகம், 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கக் கூடாது. இவ்வகைகளில் ஜீவனஸ்தானம் பலம் குன்றி திகழ்ந்தால், குறிப்பிட்ட பரிகாரத்தின் மூலம் நிவர்த்தி பெறலாம். அதன்படி, 12 ராசிகளுக்கும் உரிய எளிய பரிகாரங்களையும் நமக்கு எடுத்துச் சொல்கிறது 'தொழில் யோகம் எளிய பரிகாரங்கள்!' எனும் ஜோதிட வழிகாட்டுதல்.

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

''...கல்வெட்டுகளின் அருமை தெரியாமல், அவற்றைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் ஒரு கோயிலில்..."

"...நாமக்கல் மாவட்டம், மூனுசாவடி என்ற ஊரில் அமைந்திருக்கிறது ஒரு சிவாலயம். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயமாம் அது. தற்போது, அந்தக் கோயில் சிதிலமடைந்திருந்தாலும், ஒரு காலத்தில் மிகப் பிரமாண்டமாக இருந்திருக்கவேண்டும். அந்தக் கோயிலுக்கான கல்வெட்டுகள்தான், ஏகே சமுத்திரம் என்ற ஊரிலுள்ள ஒரு விநாயகர் கோயிலில் வேலியாகவும் பின்னர் படிக்கட்டுகளாகவும் பயன்படுத்தப்பட்டதாம்..."

- கல்வெட்டுகள் மூலம்தான் குறிப்பிட்ட கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள்-சொத்துகள் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தச் சொத்துகளை வேறு எவரும் அபகரித்துக்கொள்ளாமல் இருக்கவும் கல்வெட்டுகள் துணைசெய்யும்... - இந்த இதழில் 'படிக்கட்டுகளான கல்வெட்டுகள்!' நாரதர் உலாவில் திரட்டப்பட்டதும் சொல்லப்பட்டதுமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை. 

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

திடீரென அந்தத் தண்ணீருக்குள் வெள்ளி முளைத்ததைப் போன்று பளீரென அடித்தது வெளிச்சம். மக்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக அந்தக் காட்சியைப் பார்த்தார்கள். வெள்ளத்துக்கு நடுவில் பிரகாசித்த அந்த ஒளி மெள்ள மெள்ள மக்களை நோக்கி நகர்ந்து வந்தது. சில இளைஞர்கள் தைரியமாகத் தண்ணீருக்குள் இறங்கினர். ஒளி வந்த திசை நோக்கி நீந்திச் சென்றனர். பிரகாசித்த பொருளை எடுக்க முயற்சி செய்தனர். வேறு சிலரும் உதவிக்கு வர, அந்தப் பொருளை மேட்டுக்குக் கொண்டு வந்தார்கள். அது ஓர் அம்மன் கற்சிலை. 

மக்கள் பக்தியுடன் வழிபட்டார்கள். சில மணி நேரங்களில் மழையின் வேகம் குறைந்தது.  வெள்ளம் படிப்படியாக வடியத் தொடங்கியது. அம்மன் கிராமத்தின் காவல் தெய்வமாகிப் போனாள். மழையேறி வந்ததால் `மழையேறி அம்மன்' என்று இந்த அன்னைக்குப் பெயர். பிற்காலத்தில் `மழை',  `மலை'யாகத் திரிந்துவிட்டது...

- கிராமக் கோயில்களில் மண் சுதைகளே தெய்வ உருவாக வைக்கப்படுவதன் பின்னால் ஒரு மரபு இருக்கிறது... சுவாரஸ்ய சடங்குகளும், நம்பிக்கைகளும், கொண்டாட்டங்களும்தான் கிராமத்து வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன... இதை ஓர் உதாரணத்துடன் சொல்கிறது 'மண்... மக்கள்... தெய்வங்கள்!' தொடரில் 'மழையேறி வந்தாள்...' எனும் பகுதி. 

தைப்பூச சிறப்புகளுடன் 6 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 9 பரவசப் பகுதிகள்!

மழை கொடுத்த மேகம்: வடலூர் அருகில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் திடீரென தண்ணீர் பஞ்சம். எங்கும் வறட்சி... மரம், செடி-கொடிகள் அனைத்தும் நாசமாயின. கால்நடைகளும் துன்புற்றன. கலங்கிக் கதறிய மக்கள், வள்ளலாரிடம் வந்து முறையிட்டனர். மனம் பதைத்த வள்ளலார், அவர்களின் ஊருக்குச் சென்றார். ஆறு குடம் தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றச் சொன்னார்.

எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஆறு குடங்களில் நீரைக் கொண்டு வந்து, அப்படியே செய்தனர். அவ்வளவுதான்... சிறிது நேரத்தில் கருமேகங்கள் திரண்டன; பெருமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. மக்கள் மகிழ்ந்தனர்...

- இதுமட்டுமா... 'வாழையடி வாழையாய்...', 'திருடனுக்கும் அருள்செய்தவர்' மற்றும் 'பசிப்பிணி நீங்குக!' ஆகிய உப தலைப்புகளில் பகிரப்பட்ட 'வள்ளலார் மகிமை'யை வாசிக்கும்போதே வியப்பு மேலிடலாம். 

இந்த வார சக்தி விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2QMolaQ