Published:Updated:

திருவாடுதுறை ஆதீன முதல்வர் குருபூஜை - பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி பத்துநாள் நடைபெறுகிறது

திருநந்திதேவர் தோற்றுவித்த  திருக்கயிலாயப் பரம்பரையில்  திருவாவடுதுறையின் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமசிவாய மூர்த்திகளின் மகரத் தலைநாள் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று நடைபெறும். இதையொட்டி திருவாடுதுறை ஆதீனத்தில் 10 நாள் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. 

PC:  thiruvavaduthuraiadheenam.com

பிப்ரவரி 2-ம் தேதி காலை 7 மணிக்குக் கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். அன்று மாலையில் 2017 - 2018 ஆம் ஆண்டில்  திருமறை  நேர்முகப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு குருமகா சந்நிதானம் சான்றிதழ்கள் வழங்குகிறார். மாலையில் தொடங்கும் விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். எஸ். ராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன் மற்றும் ஆதீனத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
பத்து நாள் விழாவின் போது சைவத் திருத்தொண்டாற்றிய அன்பர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றனர்.  பத்துநாள்களும் சொற்பொழிவாளர்களின் ஆன்மிகச் சிறப்புரைகளும் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாள் இரவிலும் பொம்மலாட்டம், இசை நிகழ்ச்சி போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.