Published:Updated:

வாழ்வில் ஒளிசேர்க்கும் சூரிய வழிபாடு - நாளை ரதசப்தமி

வாழ்வில் ஒளிசேர்க்கும் சூரிய வழிபாடு - நாளை ரதசப்தமி
வாழ்வில் ஒளிசேர்க்கும் சூரிய வழிபாடு - நாளை ரதசப்தமி

நாளை ரதசப்தமி. சூரியனை வணங்கிப் புனித நீராட வேண்டிய நாள்.


தை மாதத்தின் முதல் நாளில் உத்தராயனப் புண்ணியகாலம் தொடங்குகிறது. தை மாதத்தின் முதல் நாள்  மகரசங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதி புண்ணிய பலன்கள் தரக்கூடிய நாளாகக் கூறப்படுகிறது. பீஷ்மர் தனது விருப்பப்படி மரணத்தைத் தழுவிய நாள் இது என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் ஏழு எருக்க இலையைத் தலையில் வைத்துக்குளித்தால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.

 
ரத சப்தமி அன்று திருப்பதியில் ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதே போல சென்னையில் உள்ள திவ்யதேசங்களுள் ஒன்றான திருநீர்மலை ரங்கநாதன் கோயிலிலும் ரதசப்தமி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திருப்பதி போலவே பெருமாள் இங்கும் ரதசப்தமி அன்று நாள் முழுவதும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.  

நாளைக் காலை 6.00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் 8 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும், 10 மணிக்கு கருட சேவையும் 12 மணிக்கு சேஷ வாகனத்திலும் மதியம் 1 மணிக்கு திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைபெறும். 

மாலை 3 மணிக்கு குதிரை வாகனத்திலும் 5 மணிக்கு சிம்ம வாகனத்திலும் 7 மணிக்கு சந்திர பிரபையிலும் எழுந்தருளி பெருமாள் சேவை சாதிப்பார்.