Published:Updated:

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

ஸ்ரீதயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்...ஸ்ரீஜகதாத்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

ஸ்ரீதயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்...ஸ்ரீஜகதாத்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்

Published:Updated:
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

நீல வானைப் பார்க்கிறீர்கள், மின்னும் நட்சத்திரங்கள், பறவைகள், மலைகள் ஆகியவற் றைப் பார்க்கிறீர்கள். அவற்றைப் பற்றி புகார் ஏதும் நீங்கள் கூறுவதில்லை. நீங்கள் சந்தோஷமாகவே இருக்கின்றீர்கள். 

அதேபோல், ஆற்றங்கரையோரம் பாறைகளைப் பார்க்கிறீர்கள்.நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காக அவை ஏதும் செய்வதில்லைதான். ஆனாலும் நீங்கள் சந்தோசப்படுகிறீர்கள். ஏனெனில், அவற்றை அவை இருப்பதைப்போலவே ஏற்றுக் கொள்கிறீர்கள்.

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

அதேபோல் நதி, கடற்கரை, பசுஞ் சோலைகள் என்று இயற்கை எழில் மிகுந்த இடங்களை நீங்கள் தேடிப் போகிறீர்கள். ஏனெனில், அவை உங்களை அதிருப்திக்கு ஆளாக்குவதில்லை. அதேநேரம் உங்களைக் கோபப்படுத்தப்போவதுமில்லை. அவை உங்களை சந்தோஷப்படுத்த முயற்சி செய்யாதபட்சத்திலும் அவற்றை எந்த விருப்பும் வெறுப்புமின்றி அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள்.

இப்படிச் சிலநேரங்களில் நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்பவராக இருக்கிறீர்கள். ஆனால், உங்களை அதிருப்திக்குள்ளாக்கும் நபர்கள் மத்தியி லும் எப்போதோ அதிருப்திக்கு ஆளாக்கியவர் எதிரிலும் வரும்போதும் சாதாரணமாகவே இருந்துவிடுவீர்களா?

இப்போது, சற்றுமுன் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தீர்களே, அந்த மன நிலைக்குத் திரும்ப வேண்டும். நட்சத்திரங்களை ரசித்தீர்கள் அல்லவா? அப்படியே, உங்களை அதிருப்திக்கு ஆளாக்கிய நபரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மட்டுமின்றி, இந்தத்  தர்ம சங்கடமான சூழ்நிலையின் மாற்றத்துக்காகவும் அந்த நபர் மாறவேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனையும் செய்யலாம். முன்னதாக, அந்த சிடுமூஞ்சி மனிதரை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த முறையில் மட்டுமே நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

அடுத்தவர்களை உங்கள் விருப்பப்படி வளைக்கவோ அல்லது நிமிர்த்தவோ முயலாமல், அப்படியே ஏற்றுக்கொண்டு விடுங்கள். பிறகு பாருங்கள்... நீங்கள் முற்றிலும் சுதந்திரமானவர். இப்போது உங்களால் அன்பைக் கண்டுபிடித்துவிட முடியும்... அன்பின் வடிவம் நீங்கள்தான்.

இவ்வாறு ஏற்றுக்கொள்ளும் தன்மையை உளவியல்பூர்வமாக நீங்கள் பயிற்சி செய்யும்போது, உங்கள் ஆளுமை வளர்ச்சி அடைகிறது. இதைத்தான் யோக சாதனை என்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

உங்கள் வாழ்வில் உங்களைப் பதறச் செய்த மனிதர்களையும் சம்பவங் களையும் நினைத்துப் பாருங்கள். அவை வெறும் நினைவுகள் மட்டுமல்ல, உங்களை உடைந்து போகவைத்த எதிர் விளைவுகள். எதிர்வினைப் புரிவதை நீங்கள் திட்டமிட்டுச் செய்வதில்லை. திட்டமிட்டு உங்களால் கோபப்பட முடியாது. கோபம் என்பது செயலல்ல. அது, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எதிர்வினையே!

கோபம் போன்ற எதிர்வினைகள் உங்கள் ஆளுமைகளாக இல்லாத போதிலும், நீங்கள் எச்சரிக்கையுடன் இல்லாதபோது ஏற்பட்ட வெளிப் பாடாக இருந்தபோதிலும் அவை உங்களின் ஆளுமையாக மாறிவிடு கின்றன. உங்கள் மனதில் கசப்பான கடந்த கால அனுபவங்கள் பதிந்து விடுகின்றன.

காரணம் என்னவெனில், நீங்கள் அவற்றை உண்மை போலவே ஒப்புக் கொண்டுவிட்டதும், திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து வருந்துவதும்தான்.

இப்போது நீங்கள் அமைதியாகத்  தியானத்தில் அமருங்கள்.

உங்களைக் காயப்படுத்தியவர்களை, அவமானப்படும்படி நடந்து கொண் டவர்களை, உங்களுக்குக் கோபக் காரர் என்ற பெயரை ஏற்படுத்தி விட்டவர்களை மனதுக்குள் கொண்டு வாருங்கள். அவர்களை அவர்களாகவே இருக்கவையுங்கள். பொறுமையோடு உங்களைச் சுதந்திரமானவராக உணருங்கள். உங்கள் மனதில் தேங்கிக்கிடக்கும் நினைவுகளின் சுமை களிலிருந்து விடுதலை பெறுங்கள்.

மீண்டும் நினைவுபடுத்திக் கொள் ளுங்கள்... நீலவானம், நட்சத்திரம், ஆற்றங்கரையோரம்..!

வேதாந்தம் என்பது ஒருவரின் உண்மைத்தன்மையை கற்றுக் கொடுப் பது. அது ஒரு சுயவிசாரம்; தற்சோதனை.

உண்மையை அங்கீகரிக்கவும், முழுத்தன்மைக்கு சொந்தக்காரர்கள் ஆக்கவும் ஒரு முன்தயாரிப்பு, பயிற்சி தேவைப்படுகிறது. இந்தப் பக்குவம் இல்லாத அன்பர்களுக்கு, வேதாந்தம் என்பது புரியாத கணக்கு பாடம்தான்.

எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

ஸ்ரீஜகதாத்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்

தான் என்பது அன்பின் முழுமையாக இருக்கும்பட்சத்தில், அதைத் தேடும் நீங்களும் அன்பானவராகவும், அனைத்தையும் - அனைவரையும் பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்பவரா கவும்தானே இருக்கவேண்டும்?!

அத்தகைய மனநிலையைப் பெற நாம் சில மதிப்பீடுகளைக் கற்றுக்கொண்டாக வேண்டும். அனைவரையும் ஏற்றுக்கொள்ளுதல் என்ற பக்குவம் ஒரு அரிச்சுவடி போன்ற பாடம். அது ஒரு கலை.

கோபம் ஏன் வருகிறது என்றால், நீங்கள் உலகத்தை உங்கள் விருப்பத்துக்கு மாற்ற நினைப்பதால்தான். கோபம் தற்செயலான ஒரு எதிர்வினை என்று பார்த்தோம். கோபம் மாற்றங்களைக் கொண்டுவருவதில்லை. மாறாக நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்கிறது. 

உங்களைப் பற்றி தவறான விமர்சனத்தை ஒருவர் முன்வைப்பாரெனில், உடனே அவருடன் மோதிப்  போராடி, உண்மையை விளங்கவைக்க முயற்சி செய்வீர்கள். உங்களுக்கும் அவருக்கும் மத்தியில் உண்மை யின் பொருள் எந்த மாற்றமுமின்றி இருக்கவே செய்கிறது. ஆக, இந்த உலகம் எப்படி நடந்து கொண்டாலும் கவலை வேண்டாம். இவ்வாறாக ஏற்றுக்கொள்ளும் தன்மை என்ற மதிப்பீட்டை நீங்கள் பின்பற்றுவீர்கள் எனில், நீங்கள் ஏற்கெனவே சுதந்திரமானவர்தான் என்பது உங்களுக்குப் புரியவரும்.

ஒருவரின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. நான் மற்றவர்களுக்குச் சுதந்திரம் தந்தாக வேண்டும். அது ஒன்றே நான் சுதந்திரமாக இருக்க வழி.

நான் யார் வம்புக்கும்  போகாமல் சாதுவாக இருந்தாலும் பிரச்னை இருக்கிறது. என் காவி உடை கூட சிலருக்கு உறுத்தலாக இருக்கிறது. மற்றவர்கள் என்னைப்பற்றி எந்தக் கருத்தும் கொண்டிருக்கலாம். அது அவரவர் சுதந்திரம். அது உண்மையிலிருந்து கூட மாறுபட்டு இருக்கலாம். ஆனால், நான் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில் என் சுதந்திரம்  இருக்கிறது. அதில் தீர்வும் இருக்கிறது.

மேலும், நடுநிலையான அன்பு மனம் உடையவனாக நான் இருப்பதில்தான் ஆனந்தமும் இருக்கின்றது!

 படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism