பகவான் ரமணர் விருபாக்ஷி குகையில் வாழ்ந்த காலத்தில், ஒருநாள் முப்பதுக்கும் அதிகமான பக்தர்கள் பகவானை தரிசிக்க வந்தனர். தரிசித்து வணங்கி ஊர் திரும்ப நினைத்தபோது, பகவானின் கருணையைப் போன்ற பெருமழை திடீரென்று பிடித்துக்கொண்டது.

மாலை முடிந்து இரவு வந்துவிட்டது. எல்லோருக்கும் நல்ல பசி. ஆனால் குகையில் எத்தனைப் பேருக்கு உணவு இருக்கும்? இத்தனை அதிதிகளுக்கு உணவிட வேண்டியிருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிகபட்சமாக மூன்றுபேர் உண்ணும் உணவு மட்டுமே அங்கு இருந்தது. பகவானோ தன் உதவியாளரை அழைத்து, அந்த உணவையே சிறு சிறு உருண்டைகளாக்கி அனைவருக்கும் தரும்படி கூறினார்.

அவ்வண்ணமே செய்ய அனைவரும் பக்தியோடு அதை வாங்கி உண்டனர். மகாபாரதத்தில் உச்சிவேளை தாண்டி, அதிதியாக வந்த துர்வாசருக்கு வழங்க ஏதுமின்றி இருக்க, சிறு பருக்கை மட்டுமே இருந்தது. எங்கே, துர்வாசரின் சாபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று பாஞ்சாலி தவித்திருக்க, கிருஷ்ணன் அங்கு வந்து அந்த சிறு பருக்கையை உண்டு கிருஷ்ணார்ப்பணம் செய்ய, அந்தக் கணத்தில் துர்வாசருக்கும் அவர் சீடர்களுக்கும் வயிறு நிறைந்ததாம்.

அதுபோல இங்கு ரமணார்ப்பணம் செய்த பக்தர்களுக்கும் ஒரு குவளைத் தண்ணீர் கூட அருந்த முடியாதபடிக்கு வயிறும் மனமும் நிரம்பியது. ரமணரின் முகத்தில் மாயக்கண்ணனின் புன்னகை தெரிந்தது.

- சைலபதி