Published:Updated:

பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!

பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!

வாசகர் இறையனுபவம்...

பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!

வாசகர் இறையனுபவம்...

Published:Updated:
பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!

னக்குக் குரு தசை தொடங்கியபோது, மகான்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடுமாறு அறிவுறுத்தினார்கள் ஜோதிடர்கள். அதில் எனக்குப் பெரிதாக விருப்பம் இல்லா விட்டாலும், `சரி... போய்தான் பார்ப்போமே' என்று தீர்மானித்து,  ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகளின் கோயிலுக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் வழிகேட்டு, பாம்பன் ஸ்வாமிகளின் திருக் கோயிலை அடைந்தேன். அப்போது, ஆலய வாசலில் அண்டா நிறைய லட்டுகளை வைத்துப் பிரசாதமாக விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒருவர். கமகமவென்று எழுந்த வாசனையால் அப்போதே பிரசாத லட்டுவை வாங்கலாமா என்ற ஆசை எழுந்தது. ஆனாலும் தரிசனம் முடிந்தபிறகு பிரசாதம் வாங்குவதே முறை என்ற எண்ணத்தில் ஆவலை அடக்கிக்கொண்டேன்.

பிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்!

தொடர்ந்து, பாம்பன் ஸ்வாமிகள் அதிஷ்டானம், முருகன் சந்நிதி என ஆலயம் முழுவதும் வலம் வந்து முழுமையாக தரிசித்தபிறகு, வெளியே வந்தேன். என் அதிர்ஷ்டம் லட்டு தீர்ந்து போயிருந்தது! பிரசாதம் பெறுவதற்குக்கூட எனக்குக் கொடுத்துவைக்கவில்லையே என்ற வருத்தத்தோடு, அங்குள்ள மண்டபத்துக்குச் சென்று அமர்ந்தேன்.

மண்டபத்தில் வழிபாட்டு பஜனை நடந்துகொண்டிருந்தது. கண்ணை மூடியபடி ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் சென்று அமைதியாக அமர்ந் தேன். நான் அமர்ந்ததை அவரால் கவனித்திருக்கவே முடியாது. ஆனால் ஆச்சரியம் பாருங்கள், பாடிக்கொண்டே அவர் கையை பின்னாடி நீட்டி என்னிடம் ஒரு லட்டைக் கொடுத்தார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் விரும்பியது இவருக்கு எப்படித் தெரியும், அதுவும் இவருக்குப் பின்னால்  நான் வந்து அமர்ந்ததை எப்படி அறிந்துகொண்டார் என்று எண்ணி வியந்தேன். சிறு விஷயம்தான் என்றாலும் அதன்பொருட்டும் இந்த அடியேனின் மனம் வருந்தக் கூடாது என்று அருளிய பாம்பன் ஸ்வாமிகளின் திருவருளை எண்ணிச் சிலிர்த்தேன்.

அன்றிலிருந்து பாம்பன் ஸ்வாமிகளை ஞானகுருவாக வரித்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் கோயிலுக்குச் சென்று வருகிறேன். நான் வேண்டியதையெல்லாம் கொடுத்து என்னை வாழ்வித்து வருகிறார் அந்த ஞான வள்ளல். குருவே சரணம்!

- அண்ணா அன்பழகன், சென்னை - 78

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!