Published:Updated:

``இறைவன் தரும் எதுவும் பிரசாதமே..!’’ `மனம் மலரட்டும்’ சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

"இறைவன் தரும் எதுவும் பிரசாதமே. பிரசாதம் என்பது ஒரு பொருள் அல்ல, அதை நோக்கிய நம் அணுகுமுறை. ஒரு சர்க்கரை நோயாளியிடம் அவரது நண்பர் ஒரு லட்டை நீட்டினால் உடனே அவர், 'அதை வேண்டாம்' என்று மறுத்துவி்டுவார். ஆனால் நண்பர், 'அது திருப்பதி பிரசாதம்' என்று கூறியவுடன் அவரது லட்டு பற்றிய அணுகுமுறை அடியோடு மாறிவிடும். அதை, அவர் ஏற்றுக்கொள்வார்."

``இறைவன் தரும் எதுவும் பிரசாதமே..!’’ `மனம் மலரட்டும்’ சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி
``இறைவன் தரும் எதுவும் பிரசாதமே..!’’ `மனம் மலரட்டும்’ சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

க்தி விகடன் மற்றும் தயாலயா வேதாந்த ஆய்வு நிறுவனம் இணைந்து வழங்கும் ‘வேதாந்தா 24*7’ எனும் தமிழ் வேதாந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சி கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தில் நடைபெற்றது. பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீரிய சிந்தனைகளை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்ச்சி வாராவாரம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம், ‘மனம் மலரட்டும்’ எனும் தலைப்பில் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்கள் பூஜ்யஸ்ரீ சுவாமிகளின் கருத்துகளைத் தொகுத்து வழங்கினார். விழா தொடக்கத்தில் சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்கினார். 

``இறைவன் தரும் எதுவும் பிரசாதமே..!’’ `மனம் மலரட்டும்’ சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

“ `Preparation of mind’ எனப்படும் `மனதைத் தயார்படுத்துதல்’ எனும் அடிப்படை நோக்கத்துக்காகவே `மனம் மலரட்டும்’ எனும் தலைப்பு அவசியமாகிறது. வேதாந்தம் ஒரு புளிப்பான மாம்பழமாகவே சித்திரிக்கப்படுகிறது. பல சமயங்களில் அது வயதானவர்களுக்கான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் பல்வேறு பண்பாட்டு ஊடுருவல்கள் நிகழ்ந்தன. அவை, இந்தியப் பண்பாட்டுச் சூழலில் நிகழ்ந்திருக்கும் பண்பாட்டு மாற்றங்கள் என்பது ஆராயத்தக்கது. அந்த வகையில் ஆன்மிகம் என்பது தன் சுய அடையாளத்தை இழக்கும் நிலை எற்பட்டுவிட்டது. அதனாலேயே ஆன்மிகம் என்பது பால்ய வயதினருக்கானது அல்ல என்றும், இறந்த பின் கிடைக்கும் சொர்க்க முக்திக்காக மட்டுமே என்றும் போலியான பிம்பம் உருவாகக் காரணமாக அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டின் நடப்பு சூழ்நிலையைப் பார்த்தால், கடவுள் மறுப்பு கொள்கைகளும் விழுமியங்களைப் பின்பற்ற மறுத்தலும் அகங்காரத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. சுய மரியாதை எனும் சொல் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 

``இறைவன் தரும் எதுவும் பிரசாதமே..!’’ `மனம் மலரட்டும்’ சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

சூரியன் எனும் எரியும் கோள்கூட ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பிளாக் ஹோல் (Black hole) எனப்படும் கருந்துளை ஆகிவிடுகிறது. சூரியனும்கூட ஒருநாள் அழியத்தான் போகிறது. இவ்வுலகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மாறிக்கொண்டு இருக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் நாம் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆத்மா மட்டுமே அழியாதது. அகிலக்கோடி அண்டங்கள் அடங்கிய இந்த ஜகம் அழிவுக்கு ஆட்பட்டதுதான்; மாற்றத்துக்கு ஆட்பட்டதுதான். இந்த ஜகத்தினுடைய ஈஸ்வரன் அழிவுக்கு ஆட்படாதவன். அழியக்கூடியது செடி கொடிகள், மா மரங்கள் முதலியவை.

ஒரு தடவை நான் கைலாஷ் சென்றிருந்தபோது, அது பாலைவனம் போல் மணலாக இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கைலாஷ் கடலாக இருந்ததாகக் கூறினார்கள். மலை கடலாகவும் கடல் மலையாகவும் மாறுகிறது என்றால் ஒவ்வொரு நொடியும் சதா இந்த உலகம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. 

இந்த சரீரம் மாறிக்கொண்டே இருக்கிறது. 

'நான்' என்ற சொல்லுக்கு நாம் தவறான அடையாளத்தைத் கொடுத்திருக்கிறோம். இருப்பதெல்லாம் இறைவனே என்பது பூஜ்யஸ்ரீ சுவாமியின் வாக்கு. இருப்பதெல்லாம் இறைவன்தான். வேதாந்தம் என்பது ஒருவருக்கு உண்மைத்தன்மையைக் கற்றுக்கொடுப்பது. அத்தகு மனநிலையைப் பெற நாம் சில மதிப்பீடுகளைக் கற்றுக்கொண்டாக வேண்டும். அனைவரையும் `ஏற்றுக்கொள்ளுதல்’ (Accomodation) என்ற பக்குவம் வேண்டும்.

``இறைவன் தரும் எதுவும் பிரசாதமே..!’’ `மனம் மலரட்டும்’ சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

இறைவன் தரும் எதுவும் பிரசாதமே. பிரசாதம் என்பது ஒரு பொருள் அல்ல, அதை நோக்கிய நம் அணுகுமுறை. ஒரு சர்க்கரை நோயாளியிடம் அவரின் நண்பர் ஒரு லட்டை நீட்டினால் உடனே அவர், `அதை வேண்டாம்’ என்று மறுத்துவி்டுவார். ஆனால் நண்பர், `அது திருப்பதி பிரசாதம்’ என்று கூறியவுடன் அவரது லட்டு பற்றிய அணுகுமுறை அடியோடு மாறிவிடும். அதை, அவர் ஏற்றுக்கொள்வார். இறைவனே உங்களுக்குச் செயலின் பலனைக் கொடுப்பவர் என்று நீங்கள் புரிந்துகொண்டது எவ்வித பலனையும் இறைவனால் தரப்பட்ட பிரசாதமாக ஏற்றுக்கொள்வீர்கள். வேதாந்தம் உங்களை இத்தகைய பக்குவம் உடையவராக உருவாக்குகிறது; மாற்றுகிறது” என்றார் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி

மனம் மலர, சிந்தை மகிழத் தொடர்ந்து நிகழவுள்ளது இந்த அற்புத வைபவம்! ஆம், வரும் 28.4.2019 ஞாயிறன்று, ஆனைக்கட்டி, ஆர்ஷவித்யா குருகுலத்தில், `சாதனமும் சாத்தியமும்’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது, மனம் மலரட்டும் வைபவம். வாருங்கள்... உங்கள் மனமும் வாழ்வும் மலரட்டும்!