Published:Updated:

மந்தார இலையின் வாசம்.. 15-ம் நூற்றாண்டின் ருசி! - கம கம காஞ்சிபுரம் கோயில் இட்லி #MyVikatan

JAYAVEL B
மந்தார இலையின் வாசம்.. 15-ம் நூற்றாண்டின் ருசி! - கம கம காஞ்சிபுரம் கோயில் இட்லி #MyVikatan
மந்தார இலையின் வாசம்.. 15-ம் நூற்றாண்டின் ருசி! - கம கம காஞ்சிபுரம் கோயில் இட்லி #MyVikatan

பெரும்பாலான தமிழர்களின் ஃபேவரைட் உணவு இட்லி! சாம்பார் இட்லி, ரவை இட்லி, தாளித்த இட்லி, குஷ்பூ இட்லி எனப் பல பரிமாணங்களில் பரவிக்கிடக்கிறது. 15-ம் நூற்றாண்டின் பழைமை மாறாமல் அப்படியே இருப்பது காஞ்சிபுரம் கோயில் இட்லி

மந்தார இலையின் வாசம்.. 15-ம் நூற்றாண்டின் ருசி! - கம கம காஞ்சிபுரம் கோயில் இட்லி #MyVikatan


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் இட்லி மிகவும் பிரசித்திபெற்றது. தாயார் சந்நிதிக்கு எதிராக உள்ள 15-ம் நூற்றாண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் முறைகளும், விநியோகம் செய்யும் முறைகளும் உள்ளன. கிருஷ்ணரின் எட்டு பக்தர்களின் ஒருவரான வல்லபாச்சாரியார்தான் முதன்முதலாக இட்லியை வரதராஜருக்கு நைவேத்தியம் செய்திருக்கிறார்.

மந்தார இலையின் வாசம்.. 15-ம் நூற்றாண்டின் ருசி! - கம கம காஞ்சிபுரம் கோயில் இட்லி #MyVikatan


 

பச்சரிசி, உளுந்து, மிளகு, சுக்கு, நெய், சீரகம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்து செய்யும் இந்த இட்லியை மூங்கிலால் ஆன குடலையில் மந்தார இலைகளைக் கொண்டு வேகவைக்கிறார்கள். காய்ந்த மந்தார இலையின் வாசனை இட்லியில் மணக்கும். 15-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் காரத்துக்கு மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போதுவரை கோயில் இட்லிக்கு மிளகாய் பயன்படுத்தாமல் மிளகை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். கோயிலில் செய்யும் இட்லியை விறகினால் மட்டுமே வேக வைக்கிறார்கள். 

மந்தார இலையின் வாசம்.. 15-ம் நூற்றாண்டின் ருசி! - கம கம காஞ்சிபுரம் கோயில் இட்லி #MyVikatan


 

வரததாஜப் பெருமாள் கோயில் பகுதியில் உள்ள சில குடும்பத்தினர் ஆர்டரின் பேரில் கோயில் இட்லி செய்து கொடுக்கிறார்கள். காஞ்சிபுரம் பகுதிகளில் நடைபெறும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு கோயில் இட்லி பரிமாறப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடாது என்கிறார்கள். சிலர் வெளிநாடுகளுக்குக் கூட காஞ்சிபுரம் இட்லியை பார்சல் செய்து அனுப்பி வைக்கிறார்கள்.