Published:Updated:

வாழ்க,வளமுடன் !

வாழ்க,வளமுடன் !

வாழ்க,வளமுடன் !

வாழ்க,வளமுடன் !

Published:Updated:
வாழ்க,வளமுடன் !
வாழ்க,வளமுடன் !

ந்த உலகம் மிகவும் விசித்திரமானது. அது தன்னைத் தானே அடிக்கடி மாற்றிக்கொள்ளக் கூடியது. அப்படி மாற்றிக்கொள்வதில் விருப்பமுள்ள மனிதர்களால் சூழ்ந்ததுதானே, இந்த உலகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் வயதில், பெற்றோரிடம், 'இனி அரை நிஜார் போடமாட்டேன். முழுக்கால் சட்டைதான் வேண்டும்’ என்று டிராயரைத் தூக்கி எறிவார்கள் பையன்கள். இதில் கோபித்துக்கொள்ளும் அப்பாவோ அம்மாவோ, அவனது முதுகில் சுள்ளென்று அடிப்பார்கள். பிறகு, வளரும் தன் மகனைக் கண்டு வியந்து, அவனது ஆசையைப் பூர்த்தி செய்வார்கள்; அந்த முழுக்கால் சட்டையைப் போட்டுக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தியபடி பெருமிதமாக வலம் வருவான், பையன்!

ஆனால், விசித்திர மனிதர்களால் சூழ்ந்ததாயிற்றே உலகம்! காலப்போக்கில் வளர்ந்து, வேலை கிடைத்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்றுக்கொண்ட நிலையில், இன்றைக்கு அவர்கள் அரை நிஜாரில், டிராயரில் வலம் வருகின்றனர். இதற்கு, 'பர்முடாஸ்’ என்றும், 'ஷார்ட்ஸ்’ என்றும் பெயர் வைத்துள்ளனர்.

கேட்டால், 'தொப்பையைக் குறைக்க ஜாகிங் செல்கிறேன்’, 'சர்க்கரையின் அளவைக் குறைக்க வாக்கிங் செல்கிறேன்’, 'உடம்பு இளைக்கத் தினமும் ஸ்கிப்பிங் செய்வதற்கு, பர்முடாஸ்தான் ஏற்ற ஆடையாக இருக்கிறது’ என்றெல்லாம் காரணம் சொல்கின்றனர்.

ஒரு விஷயம்... உடற்பயிற்சி மிக மிக அவசியம்தான். ஆனால், தற்போதைய சூழலில், உடற்பயிற்சி என்பதை நோய் தீர்க்கும் வழியாகவே பார்க்கின்றனர். அப்படி உடற்பயிற்சிகளில் அக்கறைகொண்டு செயல்படுவதாகக் காட்டிக்கொள்பவர்கள் பெரும்பாலும் 40 பிளஸ் வயதுக்காரர்களே!

##~##
இனிய அன்பர்களே..! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். உடற் பயிற்சியை எட்டு வயதிலிருந்தே மேற்கொள்ளலாம். அப்படி எட்டு, பத்து வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால், நாற்பதுகளில், டிராயரும் பனியனுமாக, அதிகாலையில் தெருவே அதிரும்படி ஜாகிங் செய்யவோ, வாக்கிங் போகவோ தேவை இருக்காது.

இளம் பருவத்தில் மனதாலும் உடலாலும் நமக்குள் ஏற்படுகிற மாற்றங்கள்தான், ஆயுள் பரியந்தம் வரை நம்முடன் இருந்து, நம்மைச் சீர்படுத்துகின்றன; வளப்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

நாற்பதுகளில், நம் உத்தியோக உயர்வுக்காக ஏதேனும் தேர்வு எழுத வேண்டியிருக்கலாம். அதற்காகப் படித்து, மனனம் செய்யவேண்டி வரலாம். அப்படி மனனம் செய்து, தேர்வெழுதி, வெற்றியும் பெற்று, வேலையில் உயர்வும் அதிகாரமும்கூடக் கிடைக்கப்பெறலாம். ஆனால், ஐந்து அல்லது ஏழு வருடங்கள் கழித்து, நாம் மனனம் செய்து, தேர்வு எழுதி வெற்றி பெற்ற விஷயங்கள் என்னென்ன என்பதை ஒன்றுவிடாமல் ஒப்பித்துவிடமுடியுமா என்றால், முடியாது என்றே பலரும் பதில் சொல்வார்கள். 'எங்கே அதெல்லாம் ஞாபகத்துல இருக்கு?! ஏதோ படிச்சோமா, பதவி உயர்வு கிடைச்சுதாங்கறதுக்குள்ளேயே போதும் போதும்னு ஆயிடுச்சு. பதவி உயர்வு கிடைச்சதும், வேலைப் பளு, அலுவலகத்துல பாலிடிக்ஸ்னு ஏகப்பட்டதை சமாளிக்கறதுலயே இந்த அஞ்சாறு வருஷமும் ஓடிப் போச்சு! பதவியைத் தக்க வைச்சுக்கறதுக் காகவே மிச்ச சொச்ச சர்வீஸும் ஓடிடும்போல!'' என்று அலுத்துக் கொள்கிற அன்பர்களைப் பார்த்திருக்கிறேன்.

வாழ்க,வளமுடன் !

அந்த அன்பர்கள் மட்டுமின்றி, நம் தேசத்தில் உள்ள ஒட்டுமொத்தமான வர்களும் மறக்காத ஒரு விஷயம்... பாட்டி வடை சுட்ட கதை! பால்ய வயதில் ஆசிரியை நமக்குச் சொல்லித் தந்த இந்தக் கதையை இன்னும் நாம் மறக்கவே இல்லை. பால்யத்துக்கு அத்தனை சக்தி உண்டு என்று அர்த்தமில்லை. கழுவிவிடப்பட்டிருக்கும் மொசைக் தரை போல் புத்தியும் மனமும் பளிச்சென்று இருக்க... காதால் கேட்கிற சேதிகளையும் கண்ணால் பார்க்கிற விஷயங்களையும் அப்படியே உள்வாங்கி, கல்வெட்டுகளாகப் பதிவுசெய்துகொள்வது எளிதாக இருக்கிறது சிறுவர்களுக்கு!

மனம் எப்படியோ, அப்படியே அவர்களின் உடலும்! ஆகவே, எட்டு வயதில் இருந்தே தொடங்கலாம் உடற்பயிற்சியை! 'அடடா... எனக்கு அந்த வயசுல தெரியாம போச்சே..!’ என்று ஏங்குகிற 80 வயதுக்காரர் களும் உடற்பயிற்சியில் இறங்கலாம். தப்பே இல்லை.

உடற்பயிற்சி என்பது உடலைச் செயல்படுத்திச் செய்வதுதான்! ஆனால், இந்த உடற்பயிற்சியானது, மனத்துடனும் தொடர்புகொண்டது!

அவசர உலகில், தயவுசெய்து இந்த உடற்பயிற்சிகளை அவசரம் அவசரமாகச் செய் யாதீர்கள். அசைவுகளில் வேகம் காட்டாதீர்கள். ஒவ்வொரு அசைவிலும் நிதானம் இருக்கட்டும்; அசைவு என்றாலே, கிட்டத்தட்ட நிதானம்தான், இல்லையா?!

வாழ்க,வளமுடன் !

ஆகவே, எந்த அளவுக்குப் பொறுமை யுடனும் நிதானத்துடனும் உடலை அசைக் கிறீர்களோ, அதைவிடப் பல மடங்கு பலனை நீங்கள் பெறப்போகிறீர்கள். எனவே, பூ மலருகிற மென்மையை பயிற்சியில் நடைமுறைப்படுத்துங்கள். இந்த நிதானமும் மென்மையும் உடற்பயிற்சியில் பரவப் பரவ... மனதில் நிதானம் குடிகொள்ளும்; மென்மை நிரம்பி வழியும்!

நிதானமான மனம் அல்லது நிதானமற்ற மனம்... இந்த இரண்டையும் நம் உடல்மொழி காட்டிக் கொடுத்துவிடும்; மென்மையான குணம் அல்லது மென்மையற்ற சிந்தனைகள் ஆகியவற்றை, உடல்மொழியானது ஊருக்கு வெகுவேகமாகப் பறைசாற்றிவிடும். ஆக, உடலுக்கும் மனதுக்குமான தொடர்பை, இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா?!

அடுத்தடுத்து சொல்லப்போகிற பயிற்சிகளை, தினமும் காலையில் செய்யுங்கள். வெறும் வயிற்றுடன் பயிற்சியில் ஈடுபடுங்கள். அதாவது, உணவு உட்கொண்டு நாலு மணி நேரம் கழித்தும், காபி- டீ அருந்தி அரை மணி நேரம் கழித்தும் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது!

பயிற்சி முடிந்ததும், கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம்; திரவ ஆகாரம் ஏதும் எடுத்துக் கொள்ளலாம். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு உணவு உட்கொள்ளலாம்!

இன்னொரு முக்கியமான விஷயம்... உடலின் எந்தப் பகுதியை அசைக்கிறோமோ, அசைத்துப் பயிற்சி மேற்கொள்கிறோமோ, அந்த அசைவில் மனதைச் செலுத்துங்கள்; வேறு எங்கும், எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், அந்த அசைவிலேயே மனமானது ஊன்றியிருக்கும்படி ஆழ்ந்து கவனியுங்கள்.

'அட, அதிகம் அசையுறது மனசுதானுங்களே..! பாழாப்போன மனசு, நாலாபக்கமும் தறிகெட்டு அலையுது; மனசைக் கட்டுறதுக்கு எதுனாப் பயிற்சி இருந்தா சொல்லுங்க, சுவாமி’ என்று என்னிடம் கேட்ட அன்பர்கள் ஏராளம்.

அடுத்தடுத்து சொல்லப்போகும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்; ஒருகட்டத்தில், மனதைக் கட்டுப் படுத்தும் சிறந்த பயிற்சியாளராக நீங்களே மாறியிருப்பீர்கள்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism