Published:Updated:

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!
`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!

த்வைதம் என்றால் 'இரண்டு அல்ல' என்று பொருள். 'பரமாத்மா - ஜீவாத்மா என்று இரண்டு இல்லை... எல்லா ஜீவாத்மாக்களுக்குள்ளும் உறைபவன் அந்த பரமாத்மாவே' என்பதுதான் அத்வைதத்தின் சாரம். வேதத்தின் மையமாக விளங்கும் ருத்ரம் இதை மிகவும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஈசன் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட ஒரு திருவிளையாடலே சோமாசி மாற நாயனாருக்கு அருளிய திருவிளையாடல்.

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!

பிறப்பால் பேதமில்லை என்பதுதான் அத்வைதம் விளக்கும் வாழ்க்கை நெறி. ஆனால் காலப்போக்கில் அது மறைந்து வர்ணங்களும் சாதிகளும் தோன்றி மக்கள் வாழ்வைப் பிளவுபடுத்தத் தொடங்கிவிட்டது. கருணையின் வடிவான ஈசனோ, மக்களுக்கு உண்மையை

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!

உணர்த்தப் பல தருணங்களில் நேரில் தோன்றி அறிவுறுத்தினார். சகல ஞானங்களும் கைவரப்பெற்ற ஆதி சங்கரருக்கு, 'மனிதர்களுக்குள் வர்ண பேதம் இல்லை' என்பதை நேரில் தோன்றி விவாதித்து அருளினார். அதேபோன்று ஈசன் நடத்திய மற்றொரு திருவிளையாடலே சோமாசி மாற நாயனாருக்கு அருளியதும்.

சோமாசி மாற நாயனார், திருவாரூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அந்தண குலத்தில் தோன்றிய சோமாசி, உலக நன்மைக்கான வேள்விகளை மட்டுமே செய்பவர். அவர் மனதில் 'சோம யாகம் செய்யவேண்டும்' என்கிற ஆசை இருந்தது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை ஈசனே வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு  ஏற்பட்டது. 

சுந்தரர், திருவாரூர் தியாகராயப் பெருமானிடம் நட்பு பாராட்டி பழகுபவர் என்பதைச் சோமாசி அறிவார். அவர் பாதம் பணித்தால் ஈசனை அணுகமுடியும் என்ற எண்ணத்தில், சுந்தரரின் நட்பைப் பெற முயன்றார். தினமும் அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் தருவார். அவரும் கீரையை சமைத்துப் போட,  "தினமும் உனக்கு இந்தக் கீரையைத் தருபவர் யார் ?" என்று கேட்டார் சுந்தரர்.

அப்போது பரவை நாச்சியார் சோமாசி மாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மனம் கசிந்த சுந்தரர், "உங்களுக்கு வேண்டுவது என்ன?" என்று கேட்டார். சோமாசி மாற நாயனாரும் 'தான் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை அந்த ஈசனே வந்து பெற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும்' என்னும் தன் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலை மனக்கண்ணில் கண்ட சுந்தரரும், " அவ்வாறே நடைபெறும் " என்று உறுதியளித்தார். வேள்வி செய்யும் நாளும் வந்தது.

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!

யாகம் நிறைவுபெறும் தறுவாய். அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டும். எல்லோரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது, பறை ஒலிக்கிற சத்தம் கேட்டது. எல்லோரும் தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன், பறையை இசைத்தபடி வந்துகொண்டிருக்கிறார். அவர் தோளில் இறந்த மானின் உடல் கிடக்கிறது. கைகளில் நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வருகிறார். அவருடன் அவர் மனைவியும் வருகிறாள். அவள் தலையில் மதுக்குடம் ஒன்றைச் சுமந்திருந்தாள். அதோடு, தன் முதுகில் இருபிள்ளைகளையும் கட்டிக்கொண்டுள்ளாள். நாய்கள் முன்னோக்கி ஓட, அதைப் பற்றியவாறே அந்த வேடன் ஓடி வருகிறார்.
 ருத்ரம், இறைவனைப் பற்றிக்குறிப்பிடும்போது, அவன் இந்த உலகின் எல்லாமுமாக இருக்கிறான் என்று குறிப்பிடுகிறது. ருத்ரத்தின் நான்காவது அனுவாகத்தின் இறுதி வரிகள், 

"ம்ருத்யுப் ய; ஃசவினிப்ய்ஃச்சவோ நமோ நம (ஃச்)
ஃசவப்ய; ஃச்வபதிப்யஃச்ச வோ நம " என்கின்றது. 

இதன் பொருள்... 'வேடர்களாகவும், நாய்க்கழுத்தில் கயிற்றைப் போட்டுப் பிடித்துக்கொண்டு இருக்கிறவரும், நாய்களின் தலைவராகவும் இருக்கிற ஈசனே  உமக்கு நமஸ்காரம்' என்று பொருள். இந்த உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. அனைவரும் இறை ரூபம் என்பதுதான் அதன் உள்பொருள்.

ருத்ரத்தை வேதத்தின் ஒரு பாகமாக தினமும் பாராயணம் செய்பவர்கள் அதன் மறைபொருளை உணரவில்லை. சோமாசி மாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடினர். ஆனால் சோமாசி மாற நாயனாரோ, அதை அறிந்திருந்தார். 

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!

அத்வைதத்தின் அரும்பொருள் அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் 'விநாயகனும் முருகனும்' என்றும் தெளிந்தார்.   

அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் போனார். அவரை நோக்கி நீட்டினார். சுற்றியிருந்தவர்கள் எல்லாம், 'என்ன பைத்தியக்காரத்தனம்... பரமனுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை இந்தப் பாவிக்குத் தருகிறாரே?' என்று வைதனர். ஆனால் சோமாசியோ பக்தியோடு பணிந்துகொண்டு அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் தந்தார். வேடன் அந்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும், விநாயகர் மற்றும் முருகப் பெருமானோடும் காட்சி கொடுத்தார் ஈசன். அந்தக் காட்சியை அந்த ஊரே கண்டு மகிழ்ந்தது. சோமாசிக்குக் காட்சிகொடுத்ததால் அவருக்கு ,'காட்சிகொடுத்த நாயகர்' என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் கோவில்திருமாளம். திருவாரூருக்கு அருகில் இருக்கிறது இந்த ஊர். இங்கு ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இன்று (8.6.19) மதியம் 12 மணிக்கு, பறையடித்து அவிர்ப்பாகம் ஏற்க வரும் உற்சவம் நடைபெறும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு