Published:Updated:

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!
அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தால், நிச்சயம் மழை பொழியும்; கோடையின் வெம்மை தணியும்; குடிநீர்ப் பிரச்னைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

`நீரின்றி அமையாது உலகு’ என்பது குறள் மொழி. இறைவன் ஜீவ ராசிகளைப் படைப்பதற்கு முன்பாகவே, தண்ணீரைத்தான் படைத்தார். தண்ணீரும் காற்றும் இருந்தால்தான் உயிர்கள் வாழ முடியும். ஆனால், இன்று அந்தத் தண்ணீர்தான் தமிழகத்தின் தலையாய பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. விரைவில் மழை பெய்தால்தான் ஓரளவு தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளிக்க முடியும். ஆனால், இயற்கையின் கொடையாய் இந்த மண்ணில் மழை விழுவதும் பயிர் செழிப்பதும் நம் கையில் இல்லையே. அது தெய்வ சங்கல்பம் அல்லவா!

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!

அவ்வகையில் அடியார்களும் அருளாளர்களும் ஆங்காங்கே மழை வேண்டி வருண ஜபம், விசேஷ ஹோமங்கள் எனச் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். திக்கற்றவர்க்குத் தெய்வம்தானே துணை!

அந்தத் தெய்வம், தன் பிள்ளைகள் தவிப்பதைப் பொறுக்குமா..?  அவர்களுக்கான நல்விளைவுகளை நோக்கிக் காலத்தை நகர்த்தும். விதியை மாற்றி எழுதும். அதற்கான காரியங்களைத் தாமே செய்யத் தொடங்கும். அப்படித்தான், தற்போதைய வறட்சியான சூழலை மாற்ற தெய்வம் தீர்மானித்துவிட்டதுபோலும். 

சென்னையில் வசித்துவருகிறார் அந்தப் பெண்மணி. ஶ்ரீராகவேந்திர ஸ்வாமியின் தீவிர பக்தையான அவர், சென்னையில் மழையே இல்லையே என்று வருந்தி, அதன்பொருட்டு ராகவேந்திரரை மனமுருகி வேண்டிக் கொண்டாராம். ஶ்ரீராகவேந்திர ஸ்வாமியின் அருளால், அவருக்குச் சூட்சுமமாகச் சில குறிப்புகளைச் சுட்டிக்காட்டப்பட்டன.

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!

ஆஞ்சநேயர் சிலை ஒன்றும், வயிற்றுக்குள் ஒரு குழந்தை உருள்வது போலவும் இரண்டு காட்சிகளைக் கண்டார் அந்தப் பக்தை. காட்சியில் தென்பட்ட ஆஞ்சநேயர் தலையின் மேல் ஒரு குதிரை முகமும் இருந்தது. இந்தக் குறிப்புகள் மூலம் ஶ்ரீராகவேந்திரர் என்ன உணர்த்த வருகிறார் என்பது அந்தப் பக்தைக்குத் தெரியவில்லை.

ஆனால், அடுத்த சில நாள்களிலேயே அவரைச் சந்திக்க வந்த வேறோர் அன்பர் மூலம் காட்சிகளுக்கான விளக்கம் கிடைத்தது பக்தைக்கு. ஆம்! அந்த அன்பர், தாம் பிருந்தாவனத்துக்கு அருகிலுள்ள இபாராமபுரம் எனும் தலத்துக்குச் சென்றுவந்ததையும், அங்கு வாழ்ந்து பல அற்புதங்கள் புரிந்த கிருஷ்ணாச்சார் என்ற மகானின் மகிமைகள் குறித்தும் விவரித்தபோதுதான், சூட்சுமக் காட்சிகளுக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டார் பக்தை. அதன் மூலம் ஶ்ரீராகவேந்திரர் அளித்த உத்தரவையும் புரிந்துகொண்டார். விளைவு... மிக அற்புதமான சிறப்பு வைபவம் ஒன்று ஏற்பாடாகியுள்ளது. அதுபற்றி அறியும்முன், மகான் ஶ்ரீகிருஷ்ணாச்சார் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம்.

புண்ணிய பூமியாம் மந்த்ராலயத்துக்கு அருகிலுள்ளது இபாராமபுரம். தற்போது அந்த ஊரை இப்ராஹிம்புரம் என்று அழைக்கிறார்கள். அங்கு கிருஷ்ணாச்சார் என்ற மகான் இருந்தார். பெரும் தனவந்தஶ்ரீராகத் திகழ்ந்த அவர், ஶ்ரீராகவேந்திரர் மீது அளவற்ற பக்திகொண்டிருந்தார். ஶ்ரீராகவேந்திரருக்கு அர்ச்சனை செய்த அட்சதையைக் கொண்டே பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார், கிருஷ்ணாச்சார். அதேபோல்,  அடுத்து நடக்கப்போவதையும் முன்கூட்டியே கூறியருள்வாராம்.

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!

கிருஷ்ணாச்சாரை எல்லோரும் `இபாராம்புரம் அப்பாவாரு' என்றே அழைப்பார்கள். ஒருமுறை மைசூரை ஆட்சி செய்து வந்த மும்முடி உடையார் என்ற அரசர், கிருஷ்ணாச்சாரை மைசூருக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். கிருஷ்ணாச்சாரும் அரண்மனைக்கு வந்தார். அவரிடம் மும்முடி உடையார், `இந்தப் பிறவியில் நான் ராஜாவாக இருப்பதற்கு என்ன காரணம்’ என்று கேட்டார். 

அதற்கு கிருஷ்ணாச்சார், `நீ சென்ற பிறவியில் திருப்பதி பெருமாளின் நிர்மால்யங்களைச் சேகரித்து எடுத்துக்கொண்டுபோய் சேர்க்கும் சேவைசெய்தாய். அப்போது ஒருநாள் பெருமாளின் ராஜமுத்திரை மோதிரம் நிர்மால்யத்துடன் சேர்ந்து வந்துவிட்டது. அதை ஒரு விநாடி நீ உன் விரலில் போட்டு அழகு பார்த்தாய். பின்னர் அதைப் பத்திரமாக திருப்பித் தந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு ராஜாவாகப் பிறக்கும் யோகம் ஏற்பட்டது’ என்றார். பூர்வஜன்ம புண்ணியத்தை அறிந்து மகிழ்ந்த அந்த அரசன், அந்த மகானுக்குக் காணிக்கை தர விரும்பினான்.
`‘உங்கள் அரண்மனையில் யானைகளைக் கட்டும் இடத்தில் தோண்டினால், ஒரு பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்கிரகம் கிடைக்கும். அதை எனக்குக் கொடுங்கள்’’ என்று கேட்டார் கிருஷ்ணாச்சார். 

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!

அதன்படியே குறிப்பிட்ட இடத்தைத் தோண்டியபோது, சுமார் அரையடி உயரமுள்ள அந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்கிரகம் ஒன்று கிடைத்தது. பொதுவாக, பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்கிரகத்தின் ஐந்து முகங்களும் நம்மைப் பார்ப்பதுபோல் இருக்கும். நடுவில் ஆஞ்சநேயர்  திருமுகம் இருக்கும். ஆனால், இந்தச் சிலையில் நான்கு முகங்களுக்கு மேலே உச்சியில் திகழ்ந்தது ஹயக்ரீவ திருமுகம். 
சென்னை பக்தைக்கு, காட்சியாகக் கிடைத்ததும் இதேபோன்ற திருவுருவமே! 

ஒருமுறை, மகான் கிருஷ்ணாச்சாரை தரிசிக்க வந்த ஒரு தம்பதி, தங்களுக்குக் குழந்தை இல்லாதது பற்றிக் கூறினர். அவர்களுக்கு ஶ்ரீராகவேந்திரரின் அட்சதையைப் பிரசாதமாகக் கொடுத்த கிருஷ்ணாச்சார், ``கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்று ஆசிகூறி அனுப்பிவைத்தார்.

சில நாள்களிலேயே அந்தப் பெண்மணி கருவுற்றார். ஆனால், நான்காவது மாதத்திலேயே கரு சிதைந்து பிண்டமாக வெளிவந்துவிட்டது. வருத்தத்துடன் அந்தப் பிண்டத்தைப் புதைக்க நினைத்த தம்பதியிடம், மூதாட்டி ஒருவர் `‘இந்தக் குழந்தை மகானின் வாக்கால் பிறந்தது. மகான்களின் வாக்கு எப்போதுமே பொய்யாகாது. நீங்கள் இந்தப் பிண்டத்தை எடுத்துக்கொண்டுபோய் மகான் கிருஷ்ணாச்சாரிடம் கொடுங்கள். அவர் இந்தப் பிண்டத்துக்கு உயிர் கொடுக்கக்கூடும்’’ என்றார்.

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!

அதேபோல் பிண்டத்தை ஒரு பானையில் போட்டு எடுத்துக்கொண்டு போய் கிருஷ்ணாச்சாரிடம் கொடுத்தனர். அவர் அந்தப் பானையை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பிவிட்டார். தினமும், தான் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும் பாலில் சில துளிகளை அந்தப் பானையில் விடுவார். அதன் பலனாக விரைவில் அந்தப் பிண்டம் மறுபடி குழந்தையாய் உருப்பெற்று உயிர்பெற்றதாம்.
இந்த அற்புதமே, வயிற்றில் குழந்தை உருள்வதைப் போன்ற காட்சியாய் சென்னை பக்தைக்குத் தெரிந்தது போலும்.
ஆக, `இப்படியான அற்புதங்களுக்குச் சொந்தமான அந்த ஆஞ்சநேய மூர்த்தியைச் சென்னைக்கு எழுந்தருளச் செய்து இளநீர், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மழை பெய்யும்’ என்பதையே ஶ்ரீராகவேந்திர ஸ்வாமி குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார் அந்தப் பக்தை. ஸ்வாமியின் உத்தரவை நிறைவேற்றவும் சித்தமானார் அவர்.
ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் ஒரு லீலையை பஞ்சமுக ஆஞ்சநேயர் நிகழ்த்தியிருக்கிறார். கிருஷ்ணாச்சார் காலத்திலேயே நடந்த அற்புதம் அது. 

ஓர் ஊரில் நீண்டகாலமாக மழையே இல்லாமல் இருந்தது. ஊர்மக்கள் கிருஷ்ணாச்சாரிடம் வந்து பிரார்த்தித்தனர். கிருஷ்ணாச்சார் பஞ்சமுக ஆஞ்சநேயரின் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்குப் போய் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். அதன் பலனாக மழை பெய்து ஊர் மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. 

அதுமட்டுமல்ல, அந்த ஊரில் மற்றுமோர் அற்புதமும் நிகழ்ந்தது. தங்கள் ஊருக்கு வருகை தந்து மழையை வரவழைத்த கிருஷ்ணாச்சாருக்கு ஏதேனும் காணிக்கை தர விரும்பினர் ஊர்மக்கள். கிருஷ்ணாச்சார் அந்த ஊர் அக்ரஹாரத்திலுள்ள கல்லினால் வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர் விக்கிரகத்தைக் கேட்டார். ஊர் மக்கள் அவர் வந்தால் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினர். கிருஷ்ணாச்சாரும் அழைத்தார். உடனே அந்த ஆஞ்சநேயர் விக்கிரகம் அவருக்குப் பின்னாலேயே வந்துவிட்டது. அந்த விக்கிரகமும் இபாராமபுரம் அப்பாவாரு மடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

விரைவில், அற்புதமான அந்த ஆஞ்சநேய ஸ்வாமியை சென்னைக்கு எழுந்தருளச் செய்து வழிபடுவதற்கான முயற்சிகள் தொடங்கின. 

அற்புதங்கள் நிகழ்த்திய அனுமன் விக்கிரகம் சென்னையில்! மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை!


பொதுவாக அப்பாவாரு மடத்திலிருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயரை வெளியில் எடுத்துச் செல்வதில்லை. இருந்தாலும், சென்னை பக்தைக்கு ஶ்ரீராகவேந்திரரின் உத்தரவு கிடைத்த தகவலை அறிந்ததும், அப்பாவாரு மடத்தின் நிர்வாகிகள் பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்கிரகத்தைச் சென்னையில் எழுந்தருளச் செய்யச் சம்மதித்தனர். அது சென்னை மக்கள் செய்த பெரும் பாக்கியமே!

வரும் 15-ம் தேதி சனிக்கிழமை அன்று, சென்னை - சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீராகவேந்திரர் மடத்தில் எழுந்தருள்கிறார் அப்பாவாரு மடம் பஞ்சமுக ஆஞ்சநேயர். (இந்த மடத்தில்தான் பஞ்சமுக ஆஞ்சநேயரை எழுந்தருளச் செய்யவேண்டும் என்பதுவும் ஶ்ரீராகவேந்திரரின் ஆக்ஞையே). அன்று காலை 6 மணி முதல் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன (முகவரி: ஶ்ரீராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனம், 22, ராமர் வீதி, தேவராஜன் நகர், சாலிகிராமம், சென்னை  -93).

‘‘பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தால், நிச்சயம் மழை பொழியும்; கோடையின் வெம்மை தணியும்; குடிநீர்ப் பிரச்னைகள் நீங்கும். அதுமட்டுமல்ல பிண்டத்துக்கு உயிர்கொடுத்த வல்லமை கொண்ட - அந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால், குழந்தைபாக்கியம் கிடைப்பதுடன், சகலவிதமான நோய்களும் நீங்கும்’’ என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள், பக்தர்கள். 

வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த அற்புத வைபவத்தில் நாமும் கலந்துகொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பணிவோம். மழை வேண்டி அவரை வழிபட்டு வரம் பெறுவோம்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு