Published:Updated:

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba
``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba

பேராசை, மனிதர்களை பல வாய்ப்புகளைக் காட்டி ஈர்க்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வைப்பதே அதன் திட்டம். அதனால்தான் பாபா 'எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்' என்று உபதேசம் செய்துகொண்டேயிருந்தார். உலகில் எல்லோரையும் அலைக்கழிக்கும் பேராசையை தன் பக்தர்கள் பக்கம் வரவிடாதபடி காத்தார். 

உலகில், பாதுகாப்பாகத் தெரியும் வழிகளின் முடிவில் அபாயம் மறைந்திருக்கும். அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிபவை பலவற்றின் மறுபக்கத்தில் குரூரமும் பயங்கரமும் நிறைந்திருக்கும். வெளிப்புறமாகக் கண்டு அறியமுடியாத பல சூழ்ச்சிகளிலும் சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளும் அபாயம் அனைவருக்கும் எப்போதும் இருக்கிறது. ஆனால், பாபாவுடைய பக்தர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. `சாயி எப்போதும் நம்மோடு இருக்கிறார்' என்கிற நம்பிக்கைதான் அவர்களை வழிநடத்துகிறது. 

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba

பாபாவின் பக்தர்கள் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அது சாயிநாதனுக்குப் பிரியமானதா என்பதை அறிந்துகொள்ள முயல்கிறார்கள். அச்செயல், பாபாவுக்குப் பிரியமில்லாதவை என்றால் அது எவ்வளவு லாபமானதாகத் தெரிந்தாலும் அவர்கள் அதைச் செய்வதில்லை. பாபா எப்போதும் நமக்குள்ளேயே இருப்பதால், நம் செயல்கள் சரியா தவறா என்பதை அவர் தம் பக்தர்களுக்கு உள்ளுணர்வின் மூலமே வெளிப்படுத்திவிடுவார். சாயிநாதனின் காலத்தில் வாழ்ந்த பக்தர்களுக்கு அவரிடம் நேரிடையாகத் தங்கள் விருப்பங்களைச் சொல்லி அவரின் வழிகாட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்கள். அவர் காட்டிய வழியில் சென்றவர்கள் பலனடைந்த பல நிகழ்வுகளை `சாயி சத்சரிதம்' முழுவதும் காண்கிறோம். அப்படி ஒரு நிகழ்வுதான் அஹமத் நகரைச் சேர்ந்த `தாமு சேட்',  தன் வியாபாரம் தொடர்பாக பாபாவின் விருப்பத்தைக் கேட்டது. 

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba

தாமு சேட் பாபாவின் பக்தர். போதுமான செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். சில நாள்களாக தாமு சேட்டிற்கு பஞ்சு வியாபாரத்தில் இறங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவரது புதிய நண்பர்கள். `சில லட்சங்களைப் பஞ்சுவியாபாரத்தில் முதலீடு செய்தால் பருவ மழைக்குப் பின் பல லட்சங்கள் லாபமடைந்துவிடலாம்' என்று அவருக்கு ஆசைகாட்டினர். தாமுவுக்கும் அது சரி என்றே தோன்றியது. புதிய இந்த முயற்சியில் இறங்குமுன்பு பாபாவின் ஆசீர்வாதத்தையும் அவரின் கருத்தையும் பெற வேண்டும் என்று நினைத்தார். உடனே, ஷீரடியில் பாபாவுடன் இருக்கும் ஷாமாக்குக் கடிதம் எழுதினார். கடிதம் ஷாமாவிடம் வந்து சேர்ந்தது.
ஓய்வு நேரத்தில் ஷாமா பாபாவுக்குக் கடிதங்களைப் படித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது,

``பாபா, அஹமத்நகர் தாமு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்" என்றார். பாபா சலிப்போடு, ``இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழத்தெரியாத சேட், என்ன எழுதியிருக்கிறான், படி" என்றார்.

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba

ஷாமாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தான் அந்தக் கடிதத்தை ஏற்கெனவே வாசித்திருந்ததால், அதில் உள்ளதை அறிந்திருக்கிறோம். ஆனால் பாபாவோ, கடிதத்தை வாசிக்கும் முன்பாகவே அதன் உள்பொருளை அறிந்துகொண்டதுபோலக் கருத்துச் சொன்னது ஆச்சர்யமூட்டியது.

``பாபா, இது என்ன விளையாட்டு? நீங்கள் சகலமும் அறிவீர்கள். பிறகு நான் ஏன் படித்து நேரத்தை வீணடிப்பானேன்..." என்றார். 

பாபா புன்னகையோடு, ``பரவாயில்லை, நான் தற்செயலாகச் சொல்வதையெல்லாம் பொருட்படுத்தாதே, நீ தொடர்ந்து படி" என்றார். 

ஷாமா தொடர்ந்து வாசித்து, தாமு புதிதாக வியாபாரத்தில் இறங்கும் முயற்சியை பாபாவுக்குத் தெரிவித்தார். அதை சாயியோ கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் கேட்டுவிட்டு, ``உள்ளதைக் கொண்டு உளம் நிறைய வாழச் சொல்" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். 

ஷாமா, இந்த விஷயத்தைக் கடிதம் மூலம் தாமுவுக்குத் தெரிவித்தார். பல லட்சம் சம்பாதிக்கும் கனவுகளில் மிதந்துகொண்டிருந்த தாமுவுக்கு இது இடியாக இருந்தது. 

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba

எப்போதும் நமக்குப் பிடித்தவற்றை தெய்வம் வழங்கிவிடவேண்டும். மறுத்தால் உடனே, ஒரு சிறு வருத்தம் உள்ளூர உருவாகிவிடும். 
`பாபாவிடம் ஆசீர்வாதம் கேட்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். அவரிடம்போய் வணிகம் தொடர்பாக ஆலோசனை கேட்பானேன்' என்று தாமு தனக்குத் தானே வருந்திக்கொண்டார்.

குழந்தைக்கு இனிப்பின் மீது ஆசை. அதைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. ஏற்கெனவே அது அதிகமான இனிப்புகளைத் தின்றுவிட்டதால், அதன் தாய் அதை மறுக்கிறாள். மறுத்ததோடு மட்டுமல்லாது, ஏற்கெனவே தின்ற இனிப்பினால் வயிற்றில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று கசப்பான மருந்தையும் தருகிறாள். கசப்பைச் சுவைத்த குழந்தை அழுகிறது. அழும் கணங்களில் தாயையும் அது வெறுக்கிறது. ஆனால் இவை அனைத்தும் குழந்தையின் நன்மைக்காக அல்லவா...

ஆனால் தாமு இத்தகைய பக்குவத்தைப் பெறாமல் குழந்தையைப் போலவே இருந்தார். கடிதம் மூலம் கேட்ட அதே கேள்வியை தாமு நேரிலும் சென்று கேட்கத் துணிந்தார். ஷீரடி சென்று பாபாவின் முன்பாக தன் ஆசையைச் சொன்னார். பாபாவோ, ஷாமாவிடம் சொன்னதுபோலவே, `இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ், தாமு' என்று சொன்னார். 

``சரி பாபா, பஞ்சு வேண்டாம், தானியங்களையாவது வாங்கி விற்கலாமா..." என்று கேட்டார்.

``எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்" - பக்தருக்கு பாபா உணர்த்திய பாடம்! #SaiBaba

பேராசை மனிதர்களைப் பல வாய்ப்புகளைக் காட்டி ஈர்க்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வைப்பதே அதன் திட்டம். அதனால்தான் பாபா `எப்போதும் பேராசை இல்லாதவர்களாக இருங்கள்' என்று உபதேசம் செய்துகொண்டேயிருந்தார். உலகில் எல்லோரையும் அலைக்கழிக்கும் பேராசையைத் தன் பக்தர்கள் பக்கம் வரவிடாதபடிக் காத்தார். 

தாமு பேராசையால் துன்பமுறுவதைக் கண்டு வருந்தி, அவரைக் கடிந்துகொண்டார். தாமுவுக்கு பாபாவின் சொல்லை மீறி நடக்கப் பிடிக்கவில்லை. தன் வணிக ஆசையைக் கொஞ்ச காலத்துக்குத் தள்ளிவைத்தார். பருவ மழைக் காலமும் முடிந்தது. எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் பஞ்சு வணிகமும், தானிய வணிகமும் மதிப்பிழந்தது. விலை மிகவும் குறைந்து அதில் முதலீடு செய்தவர்கள் நஷ்டமடைந்தனர். தாமுவோ, தன்னைத் தடுத்தாட்கொண்ட பாபாவின் கருணையை எண்ணிக் கண்ணீரோடு அவரைத் துதித்துக்கொண்டிருந்தார். தாமுவை மட்டுமல்ல, இப்போதும் பாபா தன் பக்தர்கள் ஆபத்தை நோக்கிப் போவதை அறிந்து அவர்களைத் தடுத்துக் காக்கிறார்.
 

மேலும் ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு