Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ம
கராசனம் எனும் பயிற்சியை நாங்கள் செய்யலாமா?’ என்று சேலத்தில் இருந்து வந்திருந்த பெண்மணி என்னிடம் கேட்டார்.

மகராசனம் ஆண்களுக்கு மட்டுமேயான பிரத்தியேகப் பயிற்சி அல்ல என்று விவரித்தேன். ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும்கூட இந்தப் பயிற்சியைச் செய்யலாம் என்று சொன்னேன். வயதானவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொண்டால், அவர்களுக்குள் இருக்கிற வயோதிகம் சற்றே குறையும்; உடலில் மெருகேறும் என விவரித்தேன்.

வயோதிகத்திலும் திடகாத்திரமாக இருப்பதற்கு மகராசனம் ரொம்பவே உதவும் என்று சொன்னதும், அந்தப் பெண்மணி முகத்தில் சட்டென்று பிரகாசம். அவரின் தாயார் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.

அப்போது கூடியிருந்த அன்பர்கள் அனைவருக்குமாக மகராசனத்தின் பலன்களை விவரித்தேன்.

மகராசனப் பயிற்சியை செவ்வனே செய்தால், சுரப்பிகளின் பணிகள் தங்கு தடையின்றி ஒழுங்குக்கு வரும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் ஆகியவை சீரடைந்து சரிவர இயங்கத் துவங்கும்.

வயோதிக காலத்தில் வருகிற மூட்டு வலி, முதுகெலும்பில் வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். இளம்பெண்கள் இந்தப் பயிற்சியை கண்ணும் கருத்துமாகச் செய்தால், அவர்கள் பின்னாளில் திருமணமாகி, கர்ப்பமுறும்போது, சுகப்பிரசவம் நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதேபோல், ஆண்களாகட்டும் பெண்களாட்டும்... அவர்களுக்குப் பிரச்னையாக இருக்கிற மலட்டுத் தன்மையானது மகராசனப் பயிற்சியால் விரைவில் நீங்கிவிடும். சுரப்பிகளும் ரத்த ஓட்டமும் நன்றாக இருந்தாலே எந்த வியாதிகளும் உள்ளே இல்லாமல் தலைதெறிக்க ஓடத்துவங்கிவிடும் என விவரித்தேன்.

மீண்டும் சொல்கிறேன்... முதல் வகுப்பில் இருந்து படிப்பைத் துவங்குவோம். எட்டாவது, ஒன்பதாவது படிக்கிறபோதே மகனையும் மகளையும் பத்தாவது வகுப்பில் தேறி வருவதற்காக, அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறுவதற்காக முன்முனைப்புடன் செயல்படுவோம்; குழந்தைகளையும் அப்படியே செயல்படவைப்போம்.

மனவளக் கலை எனும் பயிற்சிக்குள் சின்னச் சின்னதாகப் பல பயிற்சிகள் இதுவரை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பயிற்சிகளை ஆரம்பக் கட்டத்தில் செய்து வந்திருப்பீர்கள். அடுத்தடுத்த கட்டத்துக்கு நகருகிற விதமாக, கிட்டத்தட்ட பத்தாவது பரீட்சை மாதிரியான அதிக கவனத்துடன் கவனித்துக் கையாளவேண்டிய பயிற்சிதான் மகராசனம் எனும் பயிற்சி!

சரி... எஸ்.எஸ்.எல்.சி. எனும் மகராசனப் பயிற்சியின் அடுத்த கட்டத்தைப் பார்ப்போமா?

முதலில் வானம் பார்த்து மல்லாக்கப் படுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கைகளும் சின்முத்திரை காட்டியபடி வழக்கம் போலவே இருக்கட்டும். கால்களை நீட்டிக்கொண்டு, இறுக்கமாக வைத்திருக்காமல், கொஞ்சம் தளர்த்தியபடியே வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்காக, தளர்த்துகிறேன் பேர்வழி என்று கால்களை மடக்கிக் கொள்ள வேண்டாம். ஏனென்றால், இந்தப் பயிற்சியின் முக்கியமே அடுத்த கட்டமாக கால்களை மடக்கிக் கொள்வதுதான்!

சரி... நன்றாகக் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு, சின்முத்திரையில் கைகளை வைத்துக் கொண்டாகிவிட்டதா?  அப்படியே ஒரு நிமிடம் வரை ஓய்வெடுங்கள். அடுத்து, உங்கள் வலது காலையும் வலது கையையும் அப்படியே மடக்குங்கள். அதாவது, வலது காலும் வலது கையும் தரையில் பட்டுக் கொண்டிருப்பதில் இருந்து விலகியிருக்கட்டும். மேலும் வலது காலை மடக்குகிறபோது, கொஞ்சம் அந்தக் காலை மட்டுமே மடக்கித் தூக்கி வைத்திருப்பது போன்ற பாவனையில் இருக்க வேண்டும்.

இப்போது வலது கையையும் வலது காலையும், முன்னும் பின்னுமாக நீள்வட்டத்தில் சுழற்றுங்கள். கிட்டத்தட்ட, நம் குழந்தைகள் தரையில் புரண்டு கை காலைத் தூக்கி உதைத்துக் கொண்டு அலறிக் கதறுவார்களே... அதுமாதிரி ஒருபக்கக் காலையும் கையையும் வீசிச் சுழற்றுங்கள். அப்போது உங்கள் குதிகால் தரையில் படாமலேயே இருக்கட்டும். தலையானது தரையிலேயே இருக்கட்டும். இப்படியாகப் பத்து முறை செய்யுங்கள்.  

பிறகு ஒரு நிமிட ஓய்வு. இதையடுத்து வலது காலையும் கையையும் நீட்டிக் கொள்ளுங்கள். முன்பு போலவே இடது காலையும் இடது கையையும் லேசாக மடக்கிக்கொண்டு, நீள்வட்டமாகச் சுழற்றுங்கள். குழந்தைகள் உதைத்தபடி அழுவதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உள்ளுக்குள் சிரித்தபடி, மிகவும் சந்தோஷமாக, மிகுந்த திருப்தியுடன் செய்யுங்கள்.

இந்த இடது கால்- இடது கைப் பயிற்சியையும் பத்து முறை செய்துவிட்டு, ஒரு நிமிடம் ஓய்வெடுத்துக் கொண்டு, பிறகு எழுந்திருங்கள்!

வாழ்க வளமுடன்!

சரி, இனி அடுத்த நிலைப் பயிற்சிக்குச் செல்வோமா?  

வலது கால் - வலது கை, இடது கால் - இடது கை என்று தனித்தனியே செய்த பயிற்சியை இப்போது ஒன்றாகச் சேர்த்துச் செய்யவேண்டும். அதாவது, உங்களின் இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் ஒரே நீள்வட்டப் பாதையில் சுழற்ற வேண்டும்.

அப்படிச் சுழற்றுகிறபோது

நிச்சயமாக உங்களுக்குச் சிரிப்பு வரும். ஏனென்றால், குழந்தை மண்ணில் புரண்டு, கை- காலை உதைத்துக் கொண்டு அழுவது போன்ற பாவனை என்று சொன்னேனே... அதை இந்த நிலைப் பயிற்சியின்போதுதான் முழுமையாக உணர்வீர்கள்.

முதலில் இரண்டு முறை சும்மாவேனும் கை- கால்களைச் சுழற்றுங்கள். என்ன, சிரிப்பு வருகிறதா? வரட்டும். அந்தச் சிரிப்பு, உங்களின் பால்யத்தை, குழந்தைத்தனத்தை உங்களுக்கு நினைவுபடுத்தும்.

இந்த உலகில் எந்தப் பிரச்னை குறித்தும் அலட்டிக் கொள்ளாதவர்கள் குழந்தைகள்தான்!

அவர்கள் தங்கள் உலகில் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறார்கள். கவலையும் துயரமும் மனிதன் வளர வளரத்தான் அவனுள் குடியேறுகின்றன.

மனத்தின் அனைத்து சிக்கல்களையும் குழப்பங்களையும் புறந்தள்ளுகிற தருணம், நாமே குழந்தையாகிற தருணம்தான். எனவே, மிகுந்த ஈடுபாட்டுடன் நாம் இந்தப் பயிற்சியைச் செய்யும் வேளையில், மொத்த சோகங்களும் நம்மை விட்டு விலகி நின்று, நம்மைக் குழப்பத்துடன் வேடிக்கை பார்க்கும்.

பிறகு, நாம் இந்தப் பயிற்சியில் ஆழ்ந்து இறங்கிவிட்டால், 'ஓகோ...  இனி இந்த இடம் நமக்கு லாயக்குப்படாது’ என்று முடிவு செய்து, நம்மை விட்டுத் துயரங்கள் மொத்தமாகவே அகன்று ஓடிவிடும்.

இந்தப் பயிற்சி மொத்தத்தையும் செய்து முடித்துவிட்டால், மகராசனத்தின் இரண்டாம் பகுதிக்குச் செல்லலாம்.

அதற்கு முன்னதாக, எழுந்து நின்று, ஒரு நாலடி நடந்து பாருங்கள். உங்கள் கால்களின் கனம் மொத்தமும் காணாமல் போயிருப்பதை உணர்வீர்கள்.

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism