Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

கராசனத்தின் இரண்டாம் பகுதியைப் பார்ப்போமா? முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்குமான அடிப்படை வித்தியாசம் ஒன்று உண்டு. முதல் பகுதியில், மல்லாக்கப் படுத்துக்கொண்டு, பயிற்சி செய்தோம் அல்லவா? இந்த இரண்டாம் பகுதியில், குப்புறப் படுத்துக்கொண்டு பயிற்சி செய்யப் போகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் முகம், மூக்கு ஆகியவை தரையில் படும்படியாகவும், கால் விரல்கள் தரையைத் தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும். கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளுங்கள்.

நம் உடலில் இருந்து சுமார் 45 டிகிரி கோணத்தில் முதல் பகுதியில் வைத்திருந்தது போலவே, இரண்டு பக்கமும் கைகளை உடலில் இருந்து தள்ளி வைத்திருங்கள். குதிகால்களும் பெருவிரல்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். அதேபோல், வலது உள்ளங்கை தரையில் படும்படியாகவும், இடது உள்ளங்கை மேல்நோக்கி இருக்கும்படியாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன... தயாராகிவிட்டீர்கள்தானே?

இவையெல்லாம் பயிற்சி செய்வதற்கான முதல் நிலை. அடுத்து, தலையை மெள்ள வலது புறமாகத் திருப்புங்கள். அப்போது உங்களின் இடது கன்னம் முழுவதுமாகத் தரையில் படும்படி இருக்கட்டும். அப்படி தலையைத் திருப்புகிறபோதும், இடது கன்னத்தைத் தரையில் படும்படி வைக்கிறபோதும் கை- கால்களோ, இடுப்போ அசைவற்றிருக்க வேண்டும் என்பது முக்கியம். அதையடுத்து தலையை இடது பக்கமாகத் திருப்புங்கள். உங்களின் வலது கன்னம் தரையில் படும்படி வைத்திருங்கள்.

இப்போது, தலையை இடது பக்கம் திருப்பும்போது, உடலையும் மெள்ள இடது பக்கமாகத் திருப்புங்கள். கால்களை மடக்க வேண்டாம்; கைகள் எந்த நிலையில் உள்ளனவோ, அப்படியே இருக்கட்டும். அதேபோல், தலையை வலது பக்கமாகத் திருப்புங்கள். உடலையும் அப்படியே வலது பக்கம் திருப்புங்கள். இடது கன்னம் தரையில் படும்படி இருக்கட்டும்.

##~##
இப்போது, இடது பக்கமாக தலையைத் திருப்பும்போது, வலது கன்னம் தரையில் பதிந்திருக்க, இடது உள்ளங்கையைத் தரையில் அழுத்தமாகப் பதித்துக் கொள்ளுங்கள். வலது உள்ளங்கையை மேல் நோக்கி இருக்கும்படி, அதாவது புறங்கை தரையில் படும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி... தலையை இடதும் வலதுமாகக் கொண்டு செல்லும் இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யுங்கள்.

இதில கவனமாகப் பார்க்க வேண்டியது என்ன தெரியுமா? மகராசனத்தின் முதல் பகுதியில், இடது பக்கம் திருப்பினால் வலது பக்கத்தில் உடலைத் திருப்பினோம். ஆனால், இந்தப் பயிற்சிகளில் தலை எந்தப் பக்கம் திரும்புகிறதோ, அந்தப் பக்கத்தில் உள்ளங்கையைத் தரையில் படும்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதேபோல், இந்தப் பயிற்சிகளில்... தோள்பட்டை தரையில் இருந்து உயராதபடி கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வலது பக்கம் தலை திருப்பும்போது இடது கன்னம் தரையில் படும்படியாகவும், இடது பக்கமாகத் தலையைத் திருப்புகிறபோது வலது பக்கக் கன்னம் தரையில் படும்படியாகவும் வைத்துக்கொள்ளவும் மறந்துவிடாதீர்கள்.

இந்தப் பயிற்சிகளை தினமும் காலையிலும் மாலையில் எவர் தொடர்ந்து செய்து வருகிறாரோ... அவர்களுக்கு முழங்கால் வலியோ மூட்டு வலியோ எட்டிக் கூடப் பார்க்காது. 'குளிக்கும் போது சடக்குன்னு திரும்பிட்டேன். கழுத்துப் பிடிச்சுக்கிச்சு. வண்டி ஓட்டும்போது பள்ளத்துல வண்டியை விட்டதுல, இடுப்புப் பிடிச்சுக்கிச்சு’ என்பதற்கல்லாம் வேலையே இருக்காது.

ஏனெனில், உடலை ஒரு ரப்பர் போல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருப்புகிற வித்தையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தால், எந்தத் தொந்தரவும் வந்து நம்மைத் தாக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

எனக்குத் தெரிந்து, சர்க்கரை வியாதியால் அவதிப்பட்ட மதுரை அன்பர் ஒருவர், இந்தப் பயிற்சியை சரிவரச் செய்து வந்தார். மூன்றே மாதங்களில், அவரின் சர்க்கரை அளவு குறைந்து சீராக இருப்பதாக பூரிப்புடன் தெரிவித்தார்.

இப்படித்தான் திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த 45 வயதுப் பெண்மணி, 'பத்து நிமிடம் நின்றுகொண்டு, சமையற்கட்டில் காபி போட்டு வந்தாலே, கால்கள் வலிக்கத் துவங்கி விடுகின்றன’ என்று புலம்பினார். அவருக்கு மகராசனப் பயிற்சியை அளித்தேன். அதையடுத்து, இரண்டு மாதங்கள் தொடர்ந்து பயிற்சிகளை வீட்டிலேயே செய்தவர், 'என்ன ஆச்சரியம்! என் கால் வலி போயே போச்சு! சமீபத்தில் பர்வதமலைக்கு ஏறிச் சென்று, ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நன்றி சுவாமி’ என்று கடிதம் எழுதியிருந்தார்.

வாழ்க வளமுடன்!

கைகளும் கால்களும் வலுவானவைதான். அவற்றுக்கு உரிய முறையில் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தால், அவற்றின் வலுவானது கூடிக் கொண்டேதான் இருக்கும்; ஒருபோதும் குறையாது!

உடலின் நரம்புகளுக்கும் எலும்புகளுக்கும் போதுமான உணவு தருவதற்கு இணையானதுதான், உடற்பயிற்சி என்பதும்! ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி உழைத்துக் காசாகவும் பணமாகவும், வீடாகவும் வாசலாகவும், நகையாகவும் காராகவும் சேர்த்துச் சேர்த்து வைத்து மகிழ்கிறோம். அப்படிச் சேர்த்ததையே வாழ்ந்ததன் அடையாளமாகச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறோம். ஆனால், முக்கால்வாசி பேர், உடலை மறந்துவிட்டு கடுமையாக உழைத்துச் சேர்த்து, வயோதிகத்தில் அந்தக் காசையும் பணத்தையும், மருத்துவத்துக்காகவும் மருந்துகளுக்காகவும் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை வருத்தத்துக்குரிய விஷயம்!

'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்கிற உவமை இதற்குப் பொருந்தும்தான்! ஆனால், கண்களைக் கெடாமல் பார்த்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்? கால்களில் விலை உயர்ந்த ஷூ அணிந்துகொள்கிறோம்; இடுப்பில் மிக அழகான, தோலில் செய்யப்பட்ட பெல்ட்டை கட்டிக் கொள்கிறோம். விரல்களில் மோதிரங்களையும், கை மணிக்கட்டில் பிரேஸ்லெட்டையும்  அணிந்து அழகு பார்க்கிறோம். கழுத்தில் கனமான அல்லது ஒல்லியான, நமக்குப் பிடித்த தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொள்கிறோம். ஆனால், யாராவது குதிகால் எலும்பையோ, இடுப்பு எலும்பையோ, கழுத்து எலும்பையோ கவனிக்கிறோமா? சின்ன நல விசாரிப்புகளையாவது செய்கிறோமா?

காலின் எலும்பு பலமாக இருந்தால்தான் நிற்கவும் நடக்கவும்  முடியும். இடுப்பு எலும்பு உரமாக இருந்தால்தான் கூன் போடாமல் நிமிர்ந்திருக்க முடியும். கழுத்து எலும்பு வளமுடன் இருந்தால்தான் மூன்று திசைகளிலும் நன்றாகத் திருப்பி, உலகையும் மனிதர்களையும் பார்க்க முடியும். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு இடத்தில் சிக்கல் என்றாலும் கூட, நம் நடையும் நாம் நிற்பதும் பார்ப்பதும் மாறிவிடும் என்பதை உணரமுடிகிறதுதானே, உங்களால்!

வஜ்ராசனம் என்கிற இந்த இரண்டாம் பகுதியின் பயிற்சிகளை நீங்கள் கூர்ந்து, கவனித்துச் செய்யத் துவங்கினால், உங்கள் நடையில் தோற்றத்திலும் ஒரு கம்பீரம் கிடைக்கும்!

கம்பீரம் என்பது இளமையின் இன்னொரு பெயர்; என்ன, சரிதானே?!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism