Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

கனோ அல்லது மகளோ, நண்பர்களோ அல்லது உறவினர்களோ பாட்டுப் போட்டியில் அல்லது பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றால் என்ன செய்வோம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்கு நெருங்கியவர்களோ வேண்டப்பட்டவர்களோ, தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாலோ அல்லது தோல்வி அடைந்துவிட்டாலோ அந்த சந்தோஷத்தையும் வருத்தத்தையும் தாங்கியிருப்பவர்களிடம் என்ன விதமாக நடந்து கொள்வோம்?

##~##
முதலில் அவர்களை அருகில் அழைப்போம். சின்னதாகக் கைகுலுக்குவோம். 'பிரமாதம்’ என்று தோள் தொட்டுப் பாராட்டுவோம். பிரமிக்கிற அளவுக்கு அசத்தலாகச் செயல்பட்டார்கள் என்றால், 'அடடா... கலக்கிட்டியேப்பா...’ என்று கன்னம் வருடி, தோளை இறுகப் பற்றிக் கொள்வோம். இன்னும் சிறப்புறச் செய்திருக்கிறார்கள் எனும்போது, கைகுலுக்கி, கன்னம் கிள்ளி, தோளை இறுகப் பிடித்து பிறகு தளர்த்திவிட்டு, முதுகை நீவிவிட்டு, நெஞ்சில் தட்டென்று லேசாகத் தட்டி, உச்சந்தலையில் கைவைத்து ஆசீர்வதிப்பது போல், அன்பு பாராட்டுவோம். நம் ஒவ்வொரு தொடுதலிலும் நம் கைகளில் இருந்து அவர்களின் உடலுக்கு அன்பு வழிந்தோடும்; பாசம் இழையோடும்; ஸ்நேகிதம் உறவாடும்!

ஸ்பரிசம் என்பது சாதாரண விஷயமில்லை. அதுவொரு தூண்டுதல். உணர்வுகளையும் சிந்தனைகளையும் நல்ல அதிர்வுகளையும் தூண்டிவிடுகிற அற்புதச் செயல்! ஒரு சின்ன தீக்குச்சியைக் கொண்டு, ஒரு மிகப்பிரமாண்டமான கார்த்திகை தீபத்தை ஏற்றுவது மாதிரி, மிகப்பெரிய ஞானிகள், மிகப் பிரமாண்டமான பரவெளியை அடைவதற்கு, இந்தவொரு சின்ன தொடுதலே ஆரம்பமாக இருந்திருக்கிறது. குருவின் தொடுதலில், மிக நீண்ட ஆழத்துக்குச் சென்று, இறையருளைத் தரிசித்த எண்ணற்ற மகான்கள் வாழ்ந்த தேசம் இது!

அப்படியரு ஸ்பரிசத்தை, நாம் நம்மிடம் செய்திருக்கிறோமா? நம் உடலின் பாகங்களை, கைகளைக் கொண்டு, தடவிக் கொடுத்திருக்கிறோமா? நீவி விட்டிருக்கிறோமா? வருடிக் கொடுத்திருக்கிறோமா?

'அதான்... தினமும் குளிக்கும்போது, உடம்புக்கு சோப்புப் போட்டுத் தேய்ச்சுக் குளிக்கிறேனே...’ என்று சிலர் பதில் சொல்லலாம். இந்த அவசர யுகத்தில், குளிக்கிறார்கள் சரி... சரியாக நீராடுபவர்கள் எத்தனை பேர், சொல்லுங்கள்?!

வாழ்க வளமுடன்!

நம் உடலைத் தேய்த்துவிட்டுக் கொள்கிற மசாஜ் எனும் பயிற்சியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வயிற்றுப் பகுதியையும் நுரையீரல் பகுதியையும் எப்படிக் கைகளால் மசாஜ் செய்து விடுவது என்பதைப் பார்த்தோம். அடுத்து... அடுத்த பயிற்சியைப் பார்ப்போமா?

வழக்கம் போல், விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். உடலைத் தளர்வாக வைத்துக்கொண்டு, கை- கால்களை நன்றாக, நேராக நீட்டிக் கொள்ளுங்கள். தலைப் பகுதி இந்தப் பக்கமும் இல்லாமல் அந்தப் பக்கமும் சாயாமல் நேர்க்கோட்டில் இருக்கட்டும்.

இப்போது, வலது கையின் பெருவிரலை அதாவது கட்டைவிரலை வலது செவியின் துவாரத்துக்குள்ளும் இடது கையின் பெருவிரலை இடது செவியின் துவாரத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது மற்ற விரல்களை உள்ளங்கையில் பதியும்படி வைத்துக் கொண்டு, இரண்டு பக்க கட்டை விரல்களால் காதுகளின் துவாரத்தை மூடுவது போல் வைத்திருங்கள்.

இப்போது கட்டை விரலை, வலச் சுழலாக மூன்று முறையும் பிறகு இடச்சுழலாக மூன்று முறையும் சுற்றுங்கள். பிறகு மீண்டும் வலச் சுழலாக மூன்று முறை சுற்றுங்கள். காது துவாரத்துக்குள் விரல் விட்டுக் கொள்ளவேண்டும் என்கிறார்களே... என்று காதுக்குள் விரலை முரட்டுத் தனமாகத் திணிக்காதீர்கள். அதேநேரம், 'அய்யய்யோ... காதுக்குள்ளே விரலை விட்டா எதுனா ஆயிருமோ...’ என்று பட்டும்படாமலும் விரலை காதில் வைத்துக் கொள்ளாமல், அந்தத் துவாரத்தை காற்றுப் புகவும் இடமின்றி அடைத்தபடி வைத்திருக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள்! பிறகு, இரண்டு காது மடல்களையும் அந்தந்த கை விரல்களால் அழுத்திவிடுங்கள். அதாவது காதுமடலானது, கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே இருக்கட்டும். துவாரத்தில் இருக்கிற கட்டைவிரலும் காது மடலுக்குப் பின்னே இருக்கிற ஆள்காட்டி விரலும் கொண்டு, மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் மடலை நன்றாக அழுத்திவிடுங்கள். இந்தப் பயிற்சியை தினமும் செய்யலாம். அப்படிச் செய்தால், மூளையின் நரம்புகள் யாவும் சீராகத் துவங்கிவிடும். எவ்வளவு சிந்தித்தாலும் எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டாலும் மூளையும் அதன் நரம்பு மண்டலங்களும் அயர்ச்சி அடையவே செய்யாது!

வாழ்க வளமுடன்!

அடுத்து, வழக்கம் போல் மல்லாந்தபடி படுத்துக் கொள்ளுங்கள். இந்த முறை, உங்களின் கட்டைவிரல் எனப்படும் பெருவிரல்களை... இரண்டு பக்க நெற்றிப்பொட்டிலும் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற விரல்கள் விரித்தபடியே இருக்கட்டும். அதாவது, குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுகிறபோது, மாடு பற்றிய விஷயத்தை அல்லது கொம்பு தொடர்பான விஷயத்தைக் கதையாகச் சொல்கிறபோது, கட்டைவிரல் இரண்டையும் நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டு, மற்ற விரல்களை மேல்நோக்கியபடி வைத்து, தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி, சிரிப்பு மூட்டுவோம் இல்லையா? அதேபோல கட்டைவிரல்களை இரண்டு பக்க நெற்றியிலும் வைத்துக் கொண்டு, மற்ற விரல்களை மேல்நோக்கியபடி வைத்திருங்கள். இப்போது, கட்டை விரல்களை வலச்சுழலாக  முன் புறமாக, நெற்றிப்பொட்டை அழுத்துங்கள். இப்படி மூன்று முறை அழுத்திய பிறகு, இடச்சுழல் முறையில் அழுத்துங்கள். இதையும் மூன்று முறை செய்யவேண்டும். வலது மற்றும் இடச் சுழல்களெல்லாம் முடிந்ததும் மீண்டும் ஒருமுறை, வலச்சுழலாக மூன்று முறைச் சுற்றுங்கள்.

'நேத்து நைட் தூக்கமே இல்லை. கொசுக்கடித் தொல்லை தாங்கலை’ என்று புலம்புகிறவர்கள் இங்கே அதிகம். 'கொசுக் கடிச்சதால தூங்கலை. தூங்காததால, சரியா சாப்பிட முடியலை. தூக்கமும் சாப்பாடும் நிறைவா இல்லாததால, தலையெல்லாம் ஒரே வலி’ என்று புலம்பலுடன் வேதனையைப் பகிர்பவர்கள் நிறையப் பேர்!

'வெயில்ல அலையற வேலை எனக்கு. டூவீலரை எடுத்துக்கிட்டு காலைல ஆபீஸ்லேருந்து கிளம்பினா.. எப்படியும் ஒருநாளைக்கு இருநூறு கிலோ மீட்டராவது அலைஞ்சிருப்பேன். அதனால சாயந்திரமானா பாழாப் போன தலைவலி, வந்து உயிரே போயிருது’ என்று வருத்தப்படுகிற இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு விஷயம்... நெற்றிப்பொட்டில் இந்த மசாஜைச் செய்தால்... தலைவலி என்பதே வரவே வராது. குறிப்பாக, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியில் இருந்து மிக எளிதாக தப்பித்துவிடலாம்!

என்ன... 'சுக்லாம் பரதரம்’ என்று சொல்லி, நெற்றியில் குட்டிக் கொள்வது நினைவுக்கு வருகிறதா, அன்பர்களே!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism