Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

ன்னார்குடியில், உத்ஸவரை உளமாரத் தரிசித்தனர் தாத்தாவும் பேரனும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''கண்ணா... மன்னார்குடி ஹரித்ரா நதிக்கரையில் கோப்பிரளயர், கோபிலர்னு இரண்டு முனிவர்களுக்கும் கிருஷ்ணாவதாரத்தின் 32 காட்சிகளையும் கண்ணபிரான் காட்டியருளினார் இல்லையா... அதுல 32-வது காட்சிதான் இந்த ராஜகோபால ஸ்வாமி திருமேனி. எத்தனை அழகா இருக்கார், பாரேன்!'' என்று பெருமிதத்துடன் தாத்தா சொல்ல... பேரனும் உத்ஸவரை உற்றுப் பார்த்து, 'ஆமாம் தாத்தா’ என்று சொல்லி ஆமோதித்தான்.

''இங்கே இன்னொரு தனிச்சிறப்பு என்ன தெரியுமோ? பெருமாள் சந்நிதிக்கு முன்னாடி பலிபீடம், துவஜஸ்தம்பம்... அப்புறம் கருடாழ்வார் சந்நிதி இருக்கும். அதுமட்டுமில்லாம செங்கமலத் தாயார் சந்நிதிக்கு எதிர்ல, கருடனோட மனைவி சுபர்ணிக்கும் சந்நிதி இருக்கு. கருடனுக்கு சுபர்ணன்னு பேரு உண்டு. அவன் மனைவி பேரு, சுபர்ணி!'' என்று தாத்தா சொல்ல... விறுவிறுவென தாயார் சந்நிதிக்கு ஓடிப் போய்ப் பார்த்தான் பேரன்.

''தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்துல, அசுரர்கள் தோத்துப் போனாங்க. இதுல கோபமான பிருகு முனிவரோட மனைவி தேவர்களைச் சபித்தாள். இது தெரிஞ்ச திருமால், தன் சக்ராயுதத்தை ஏவி அவள் தலையைத் துண்டிச்சார். உடனே பிருகு முனிவர், 'என் மனைவியைக் கொன்றவன், அரசை இழந்து, மனைவியை இழந்து காட்டில் திரிவான்’ எனச் சாபம் கொடுத்தார். பரப்பிரம்மத்தை எந்தச் சாபம் என்ன செய்து விட முடியும்? அந்தச் சாபம் பிருகு முனிவர்கிட்டயே திரும்பிடுச்சு. பரம்பொருளைச் சபிச்சுட்டமேன்னு வருந்தின பிருகு முனிவர், சத்தியலோக முனிவர்கள்கிட்ட ஆலோசனை கேட்டார். 'செண்பகாரண்யத்துக்குப் போய், திருமகளை நினைச்சு தவம் பண்ணுங்க. அவளையே மகளாகப் பெறணும்னு வரம் கேளுங்க. அப்புறம் அந்த மகளை மகாவிஷ்ணுவுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அவரைச் சரண் அடையுங்க’னு அவங்க ஆலோசனை சொன்னாங்க. அப்படியே செய்தார் பிருகு முனிவர்.

அதன்படி, தலத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள செந்தாமரைப் பொய்கையில், திருமகள் அவதரிச் சாள். அதனாலதான் அவளுக்குச் செங்கமலத் தாயார்னு பெயர்.அப்புறம் தன் மகளா வளர்ந்த திருமகளுக்கும் திருமாலுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து சரணாகதி அடைஞ்சார் முனிவர். திருப்பாற்கடல்னு அழைக்கப்படுகிற அந்த தீர்த்தக் குளத்தைச் சேர்த்து பத்து திருக்குளங்கள் இங்கே இருக்கு'' என்று விவரித்தார் தாத்தா.  

கதை கேளு... கதை கேளு...

''ஹரித்ரா நதி, துவாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், ருக்மிணி தீர்த்தம், அக்னி குண்ட தீர்த்தம், கிருஷ்ண தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்ர தீர்த்தம், பாம்பணி ஆறு... என்ன தீர்த்தங்களோட பெயரெல் லாம் சரியா...? ஏற்கெனவே இந்தத் தீர்த்தங்கள் பற்றி சொல்லியிருக்கீங்க தாத்தா!'' என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தான் பேரன்.

''பலே, பலே! கெட்டிக்காரன்தான். இந்தக் கோயிலின் இன்னொரு பெருமை என்ன தெரியுமோ?! பிரம்மோத்ஸவம். பிரம்மாவே நடத்தின உத்ஸவம்! இந்தத் தலத்துல விஸ்வகர்மாவைக் கொண்டு, ஸ்வாம்புவ விமானத்தோட கூடிய கோயிலை அமைச்சு, அதுல ஸ்வாமியின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செஞ்சாராம் பிரம்மா. அதுமட்டுமா? பங்குனி ரோகிணியில், தேர்த்

திருவிழாவோடு 18 நாள் பிரம்மோத்ஸவத்தை சீரும் சிறப்புமா பிரம்மாவே நடத்தி னார். மத்த க்ஷேத்திரங்கள்ல பத்து நாள் விழாவா நடக்கற பிரம்மோத்ஸவம், இங்கே 18 நாள் விழாவா நடக்கறது. 18 அத்தியாயங்கள் கொண்ட கீதையை உபதேசிச்சவனுக்கு 18 நாள் விழா நடக்கறது, பொருத்தம்தான்... இல்லியா?!'' என்றார் தாத்தா.

''கோயில் ஒரு பாதி; குளம் ஒரு பாதின்னு சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கு மன்னார்குடி தலம். அதேபோல, மதிலும் ரொம்பவே கம்பீரம். மன்னார்குடி மதில் அழகுன்னு ஒரு சொலவடையே உண்டு. கிருத யுகத்துல பிரம்மாவும், திரேதா யுகத்துல திருமகள், பிருகு முனிவர் ஆகியோரும், துவாபர யுகத்தில் அக்னி தேவனும், கலியுகத்தில் குலோத்துங்கன், அச்சுதப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர், ஸ்ரீமணவாள மாமுனிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகப் பிரம்மம்னு பலரும் வழிபட்ட திருத்தலம் இது! இதனால இங்கேயுள்ள பெருமாளை 'யுகம் கண்ட பெருமாள்’னு பெருமையாச் சொல்வாங்க.

சௌராஷ்டிர மன்னன் ராஜ சேகரன், தன் மகள் சுவர்ண சிகாமணிக்கு குழந்தை இல்லாததால, இங்கு வந்து சந்தான கிருஷ்ண விக்கிரகத்தை, அவள் மடியில வைச்சு, முகுந்தாஷ்டகம் பாடச் சொல்ல... அவளுக்கு பிள்ளை பாக்கியம் கிடைச்சுது. அதனாலதான் இன்னிக்கும் சந்தான கிருஷ்ணனை மடியில வைச்சு, முகுந்தாஷ்டகம் சொல்ற பிரார்த்தனை நடந்துண்டிருக்கு!'' என்று தாத்தா சொல்ல... அந்த அழகிய சந்தான கிருஷ்ண விக்கிரகத்தில் சொக்கிப் போனான் பேரன்.  

- தரிசிப்போம்
படங்கள்:  ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism