Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில மண்ணு என்பார்கள் பெரியவர்கள். திருமந்திர நகர் எனப்படும் தூத்துக்குடி முத்துநகர் பக்தர்கள், சிவபெருமானையும் விஷ்ணுவையும் இருவேறு தெய்வங்களாப் பாக்கலை. சைவத்தையும் வைணவத்தையும் தங்களோட கண்களைப் போல பாவிச்சாங்க! அதனாலதான் ஸ்ரீசங்கரராமேஸ்வரர் கோயிலை ஒட்டியே ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலும் அமைஞ்சிருக்கு.'' என்று சொல்லிக் கொண்டே தாத்தா, பெருமாள் கோயில் வாசலை அடைந்தார். பிரமிப்பு விலகாமல், கோயிலையே வெறித்தபடி சேர்ந்து வந்தான் பேரன்.

''மதுரைல என்ன நதி ஓடுறதுன்னு தெரியுமா? வைகை நதி. இதுல 'வை’ அப்படீன்னா, வைகுண்டத்தையும்... 'கை’ அப்படீங்கறது கயிலாசத்தையும் குறிக்கும்னு விளையாட்டாச் சொல்வாங்க! அதனாலதான் கயிலாயபதியான சிவபெருமான் திருமணத்துக்கு வைகுண்டநாதரான அழகர் வைகை ஆற்றில் இறங்கறார்.

'பனிக்கடலில் பள்ளி கோளைப்
பழகவிட்டு ஓடிவந்து என்
மனக்கடலில் வாழ வல்ல
மாய மணாள நம்பி!
தனிக் கடலே! தனிச் சுடரே!
தனி உலகே! என்றென்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்தாக்கினாயே’
ன்னு

பெரியாழ்வார் பாடினதைச் சொல்லிருக்கேனே... ஞாபகம் இருக்கா? அதுமாதிரி, திருப்பாற்கடலில் பள்ளி கொள்வதை மறந்துட்டு, நம் மனக்கடலில் இருப்பதற்காக இறங்கி வந்தான் வைகுந்தவாசன். எங்கே வந்தான்? இதோ... இந்தத் திருமந்திர நகருக்கு வந்தான்!'' என்று தாத்தா சொல்லச் சொல்ல... மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்ட பேரன், ''இந்தக் கோயில் வந்த கதை சொல்லேன் தாத்தா'' என்றான்.

''வைகுண்டத்தில் இருப்பது மாதிரியே ஸ்ரீதேவி பூதேவியோட, ஐந்து தலை ஆதிசேஷன் குடை விரிக்க, அற்புதமாக் காட்சி தர்றார் பெருமாள். மூலவரோட திருநாமம் - ஸ்ரீவைகுண்டபதி பெருமாள். உத்ஸவர் - ஸ்ரீசுந்தர்ராஜ பெருமாள்.

சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி, இந்த வைகுண்டபதி ஸ்வாமியோட திருவிக்கிரகம், புலி பாஞ்சான் அப்படீங்கற கிராமத்துல, புத்துக்குள்ளே இருந்ததாம். அந்தப் பகுதியில, யாதவர்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவாங்க. அப்ப மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு, அங்கே இருந்த புத்துக்கு அருகில் சென்று, பால் சொரிந்துவிட்டுப் போகுமாம்! இதைப் பார்த்துட்டு ஆவேசமான அந்த யாதவர், பசுவை அடித்து துன்புறுத்தினார்.

கதை கேளு... கதை கேளு...

அதேநேரம், குறுநில மன்னனான சங்கரராம பாண்டியனோட கனவில் வந்த பெருமாள், இந்த விஷயங்களைச் சொல்ல... விடிந்ததும் அங்கே ஓட்டமும் நடையுமா ஓடி வந்த ராஜா, புத்துக்குள் இருந்த பெருமாளின் விக்கிரகத் திருமேனியை எடுத்து, நெடுஞ்சாண்கிடையா விழுந்து நமஸ்கரிச்சார். பிறகு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி, வழிபட்டு வந்தார்.

இதையடுத்து பல காலங்கள் கழிச்சு, அந்நியர்கள் சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களுக்குள் நுழைந்து, கொள்ளையடிச்சாங்க. அந்தக் கூட்டம், மதுரையம்பதிக்கும் வந்துட்டதைத் தெரிஞ்சுக்கிட்ட புலி பாஞ்சான் கிராம மக்கள், தூத்துக்குடியில் அந்தணர்கள் அதிகம் வசித்த புது கிராமம் பகுதிக்கு ஸ்ரீவைகுண்டபதி பெருமாளை எடுத்துட்டுப் போய், கோயில் கட்டி வழிபட்டாங்க!

##~##
அந்த இடம்... ஸ்ரீசங்கரராமேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமானது. பிறகு ரொம்பவே மேடான பகுதின்னு சொல்லி அந்த இடத்தை நிராகரிச்ச பக்தர்கள், புது கிராமத்துலேருந்து பெருமாளை எடுத்துட்டு வந்து, சிவனாரின் கோயிலுக்குப் பக்கத்துலயே பிரதிஷ்டை செஞ்சு, கோயில் கட்டினாங்க! அப்புறமா, தாயாருக்கும் ஸ்ரீஆண்டாளுக்கும் ஸ்ரீஅனுமனுக்கும் தனித்தனிச் சந்நிதி கட்டினாங்க. இங்கேயுள்ள ஸ்ரீஅனுமன், சுமார் முப்பதடி உயரத்துல, விஸ்வரூப தரிசனம் தர்ற அழகே அழகு!'' என்று சிலாகித்துச் சொல்லும் தாத்தாவையும் கோயிலையும் பார்த்துப் பூரித்துப் போயிருந்தான் பேரன்.  

''இதோ... கொடிமரத்துக்குப் பக்கத்துல இருக்கிற கருடாழ்வார் சந்நிதில ஒரு விஷயம்... நீராஞ்சனம்னு ஒரு வழிபாடு இங்கே பிரசித்தம். அதாவது கருடாழ்வாருக்கு முன்னால, வாழை இலைல அரிசி வைச்சு, அதன் மேல் தேங்காய் மூடியை வைச்சு, அதுல நெய்விட்டு தீபமேற்றி வழிபடுறதுதான் நீராஞ்சன வழிபாடு! இந்த வழிபாட்டைச் செஞ்சு, யார் வேண்டிக்கிட்டாலும், அந்தப் பிரார்த்தனை உடனே நிறைவேறிடும்’னு கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் சொன்னார்.

அதுமட்டுமா? தஞ்சாவூர்ல அஞ்சு கருட சேவை ரொம்பவே விசேஷம். 12 கருட சேவை கும்பகோணத்திலும் சீர்காழிக்குப் பக்கத்துல 11 கருட சேவையும் ரொம்பப் பிரசித்தம். அதேபோல, ஸ்ரீவரதராஜபெருமாள், ஸ்ரீரங்கநாத பெருமாள், ஸ்ரீஜெகநாத பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள்னு நாலு பெருமாளும் இந்தக் கோயில்ல உள்ள பெருமாளோடு கருட சேவையில காட்சி தர்றதை ரசிக்க, இரண்டு கண் போதாது!

கதை கேளு... கதை கேளு...

த்ரேதா யுகத்துல ஸ்ரீரங்கநாதப் பெருமாளும், க்ருத யுகத்துல ஸ்ரீதேவராஜன் எனப்படுகிற ஸ்ரீவரதராஜ பெருமாளும், துவாபர யுகத்துல ஸ்ரீஜெகந்நாத மூர்த்தியும் கலியுகத்தில், திருமலையப்பனாகிய திருவேங்கடமுடையானும் வழிபடு கடவுளர்களாக உள்ளனர்னு ஒரு ஸ்லோகம் சொல்லுமே..! நான்கு யுகக் கடவுளரும் ஆதிமூர்த்தியான வைகுண்டநாதரும் அஞ்சு கருட சேவையில தரிசனம் தருவது ரொம்பவே பொருத்தமானது. புரட்டாசி 4-வது சனிக்கிழமைல விமரிசையா நடக்கும், இந்த விழா!'' என்ற தாத்தாவிடம், ''வேற விழாக்களும் சிறப்பா நடக்கறதா இங்கே?'' எனக் கேட்டான் பேரன்.

''ஆமாம்... வைகாசி பிரம்மோத்ஸவம், ஆடிப் பூர உத்ஸவம், ஆவணி கோகுலாஷ்டமின்னு மாதந்தோறும் விசேஷத்துக்குக் குறைவே இல்லை. மார்கழி மாசத்தை சொல்லவா வேணும்?! முப்பது நாளும் முத்தாய்ப்பான வழிபாடுகள்தான்; கொண்டாட்டங்கள்தான். அத்தனை விசேஷமானவர் இந்தப் பெருமாள்.

ஸ்ரீவைகுண்டபதி பெருமாளை மனசார வழிபட்டா... கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்பாங்க! நீயும் வேண்டிக்கோ... நினைச்சது நடக்கட்டும்!'' என்று கோவிந்த நாமத்தைச் சொல்லியபடி... பெருமாளின் சந்நிதி நோக்கி... விறுவிறுவென நடந்தார் தாத்தா. பேரனும்தான்!

- தரிசிப்போம்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism