பிரீமியம் ஸ்டோரி
இதமான உண்மை!

ந்த அரசனுக்குப் பிறவியிலேயே ஒரு கண் இல்லை. நீதிமானாகத் திகழ்ந்த அவன் புத்திசாலியும்கூட!

ஒருமுறை, அவன் தன் உருவப்படத்தை வரைய, நாட்டிலேயே மிகச் சிறந்த மூன்று ஓவியர் களைப் பணித்திருந்தான். மிக மிகச் சிறப்பாக படம் வரைவோருக்குச் சிறப்பு வெகுமதி உண்டு என்றும் அறிவித்திருந்தான்.

##~##
ஒற்றைக் கண்ணுடன் அரசனை ஓவியமாக வரைந்தால், அவன் நிச்சயம் கோபம் கொள் வான் என்று எண்ணி, இரண்டு கண்களும் இருப்பது போன்று வரைந்தான் முதல் கலைஞன். இரண்டாவது கலைஞனோ, ஓவியம் என்பது உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால், ஒற்றைக் கண் உள்ளவனாகவே அரசனை வரைந்தான் அவன். மூன்றாவது கலைஞன் புத்திசாலி. வில்லேந்தி அம்பு எய்யும் விதமாக, மனத்தை ஒருமுகப்படுத்த ஒரு (பழுதுபட்ட) கண்ணை மூடிக்கொண்டிருப்பது போன்று சித்திரித்து மன்னனின் படத்தை வரைந்தான்.

மூன்று கலைஞர்களின் ஓவியங்களுமே சிறப்பாக இருந்தாலும், உண்மையை மென்மையாகக் கையாண்ட மூன்றாவது கலைஞனுக்கே சிறப்புப் பரிசு கிடைத்தது. உண்மையைத்தான் சொல்ல வேண்டும்; அதே நேரம், எதிராளியின் மனம் புண்படாதவாறு இதமாக அந்த உண்மையைச் சொல்ல வேண்டும் என்பது இந்தக் கதை நமக்குச் சொல்லும் நீதி!

இதமான உண்மை!

ந்திர சக்தி பெற விரும்பிய ஓர் இளைஞன், ஜென் துறவி ஒருவரைப் பார்க்கச் சென்றான். காடு- மேடுகளைக் கடந்து, பல நாட்கள் பயணித்து, கடைசியில் மந்திரச் சக்திக்குப் புகழ்பெற்ற அந்த ஜென் துறவியைச் சந்தித்தான். தனது விருப்பத்தைச் சொன்னான். 'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி’ என்ற மந்திரத்தை 108 தடவை ஜபிக்க வேண்டும் என்று உபதேசித்தார் துறவி. கூடவே ஒரு நிபந்தனையையும் விதித்தார். மந்திரம் ஜபிக்கையில் கழுதையை மட்டும் நினைக்கக்கூடாது என்பதுதான் அது!

அந்த இளைஞனுக்கு ஒரே வியப்பு. 'நான் ஏன் மந்திரம் ஜபிக்கும்போது கழுதையைப் பற்றி நினைக்கப் போகிறேன்?!’ என்று வியந்தான்.

துறவியிடம் விடைபெற்றுத் திரும்பியதும் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் மந்திரம் ஜபிக்கத் தொடங்கியதுமே அவனது மனத்தில் எழுந்த முதல் சிந்தனை கழுதையைப் பற்றித்தான்! சில மணி நேரம் கழித்து மீண்டும் முயன்றான்; அப்போதும் கழுதை வந்து மனத்தில் நின்றது. பின்பு, சில நாட்கள் கழித்து, மந்திரம் ஜபிக்கத் தொடங்கினான். உடனேயே அவனுக்குக் கழுதைதான் நினைவுக்கு வந்தது. அதன்பின் எப்போது மந்திரம் ஜபிக்க உட்கார்ந்தாலும், கழுதை நினைவில் குறுக்கிடுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

அவன் பதறியபடி மறுபடியும் ஜென் குருவிடமே சென்றான். ''வா மகனே! நீ வருவாய் என்று தெரியும்.

மனம் ஒரு குரங்கு (கழுதை?!). அதை வலுக்கட்டாயமாக ஏதேனும் ஒரு வழியில் செலுத்த முயன்றால், அதற்கு எதிர் திசையில்தான் ஓடும்!'' என்றார் துறவி.

மந்திரச் சக்தி பெற விரும்பினால் மட்டும் போதாது... முதலில் மனத்தைப் பழக்கி, அதன்பிறகுதான் சாதனை செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொண்டான் அந்த இளைஞன்.

தொகுப்பு: கே.நிருபமா, பெங்களூரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு