Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

Published:Updated:
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்யையைப் பார்த்த கௌதம முனிவருக்கு பயங்கர அதிர்ச்சி! தனது மனைவியான அவள், தேவர்கள் தலைவன் இந்திரனின் கரங்களில் இருப்பதைக் கண்டுதான் அப்படியரு நிலைக்கு ஆளானார். கோபம் கொப்பளிக்க, மனைவி அகல்யையைக் கல்லாகும்படி சபித்தார் முனிவர். இந்திரனுக்கும் உடம்பெல்லாம் புண்களாகும்படி சாபம் கொடுத்தார்.

ராமாயணத்தின் முதல் பாகத்திலேயே, அதாவது பால காண்டத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமரின் இளமைக் காலம், கல்விப் பயிற்சி பற்றிச் சொல்கிறபோது, இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

மகரிஷி விசுவாமித்திரர், சிறுவன் ஸ்ரீராமரைக் அழைத்துக்கொண்டு கௌதமரின் குடிலுக்குப் போகிறார். கல்லாகிப்போன அகல்யையைக் காண்பிக்கிறார். பட்சிகள், மிருகங்களின் எச்சம் எல்லாம் அதன்மீது படர்ந்து பாழாகிக் காணப்படுகிறது. விசுவாமித்திரர் ஸ்ரீராமரிடம் அகல்யையின் சிலையைக் காலால் தொட்டு, அவளுக்கு விடுதலை தருமாறு கேட்டுக்கொள்கிறார். அவள் அப்போதுதான் தனது கணவர் கௌதமரை மீண்டும் அடைய முடியும் என்று காரணம் சொல்கிறார்.

ராமாயணத்தில் பல வடிவங்களில் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. சிலவற்றில் அகல்யை மீதுதான் தவறு என்றும், அவளுடைய நடத்தையில்தான் தவறு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் சிலவற்றில், கௌதம முனிவர் உருவில் இந்திரன் வந்ததை அவனுடைய மோசடி நடவடிக்கையாக கூறப்பட்டிருக்கிறது. இன்னும் சில வடிவங்களில், கௌதமரால் கொடுமைக்கு ஆளான அகல்யை, இந்திரனின் கரங்களில் அன்பைக் கண்டாள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.  

வானம் தொடுவோம்!

ஆனால், இந்தக் கதைகளைச் சொல்லும் எல்லோருமே, ஸ்ரீராமர் அகல்யையை ஏன் மன்னித்தார் என்று எழுதத் திணறித் திண்டாடுகிறார்கள். தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட அகல்யையை ஸ்ரீராமர் மன்னித்தது சரியே என்று எழுத அவர்கள் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்?

தொழிலில்கூட இப்போதும் தான் சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாதவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் நம்பகத்தன்மை இல்லாதவர்கள் என்று நமக்குத் தெரியும். அவர்களின் செயலை நியாயப்படுத்தும் விதமாகவும் சிலர் நடந்துகொள்வது உண்டு.  அகல்யை அப்படியே கல்லாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவதா, அல்லது அவளை மன்னித்து, சாப விமோசனம் தருவதா என்று முடிவு செய்தாக வேண்டும். அந்தத் தண்டனையும் சரியானதாக- போதுமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

வானம் தொடுவோம்!

கம்பெனி கெஸ்ட் ஹவுஸின் நிர்வாகி பணத்தைச் சுருட்டுகிறார் என்று சுந்தருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால், அதற்கான சாட்சியங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. என்றாலும், தில்லுமுல்லு நடக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்திருந்தது. அதனால், கெஸ்ட் ஹவுஸ் நிர்வாகி முரளியை விடுமுறையில் போகச் சொன்னார் சுந்தர். அவருடைய விடுமுறைக் காலத்தில் ஜெயராம் என்பவர் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில் செலவு வெகுவாகக் குறைந்தது. சேவையின் தரமும் உயர்ந்தது. பலரும் முரளியைத் திறமையற்றவர் என்றார்கள். ஆடிட்டர்களோ முரளி ஒரு மோசடிப் பேர்வழி என்றார்கள். ஆனால் முரளி தான் நிரபராதி என்று வாதிட்டார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, முரளியின் வேண்டுகோளுக்கு இரங்கி, சுந்தர் அவரை மீண்டும் கெஸ்ட் ஹவுஸ் நிர்வாகியாக நியமித்தார். எல்லோரும் முரளி அப்பாவி அல்லது அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார் என்றுதான் எண்ணினார்கள்.  

சுந்தரிடம் இதுபற்றிச் சிலர் கேட்டபோது, 'உண்மையிலேயே என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், முரளிக்கு அந்த ஆறு மாதத் தண்டனையே நரகமாக இருந்திருக்கும். அவர் தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டார். அவர் ஏதுமறியாத அப்பாவி என்றால், தன்னைத் திறமைசாலியாக மாற்றிக்கொள்ள இந்த காலகட்டத்தில் நிச்சயம் முயற்சி செய்திருப்பார். எவரும் முழுக்க முழுக்க ஒழுங்கானவர்கள் கிடையாது. நாம் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். நாம் பிறரை மன்னிக்கவில்லை என்றால், கடுமையான முடிவு எடுக்கிற, நாம் சொல்வதே சரி என்று வீம்பு பிடிக்கிற நிறுவனமாகத்தான் கருதப்படுவோம். நமக்குப் பிறர் மீது கருணை என்பதே கிடையாது என்ற பெயரை எடுத்துவிடுவோம். அந்த மாதிரியான ஒரு கெடுபிடி நிறுவனத்தை உருவாக்க நான் விரும்பவில்லை!' என்றார்.

ஒருவேளை, கருணை காண்பிப்பதும்கூட பிறருக்கு ஒரு படிப்பினையாக அமையலாம். அதைத்தான் விசுவாமித்திரர் இளம் ராமபிரானுக்கு எடுத்துக் காட்டினார். அதைப் பார்த்து நாமும் மன்னிக்கக் கற்றுக்கொள்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism