Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

யில் தவம் செய்த காரணத்தால் மயூரகிரி, மயூரவனம் என்றெல்லாம் அழைக்கப்படுகிற குன்றக்குடி தலத்தில் தாத்தாவும் பேரனும் நின்றுகொண்டிருந்தார்கள். முருகப்பெருமானே தனது மயில் கல்லாகும்படி சாபம் கொடுத்ததையும், அந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் தந்ததையும் பேரனிடம் விவரித்திருந்தார் தாத்தா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுல பல தத்துவங்கள் அடங்கியிருக்குடா கண்ணா! முருகப்பெருமானோட வாகனம் மயில். ஆனா, மயில் தன்னோட வாகனமாச்சேனு எந்தப் பாகுபாடும் பார்க்கலை, கந்தபிரான். யார் தப்பு பண்ணினாலும் தண்டனை உண்டுங்கறதை, கடவுள் இங்கே சொல்லாம சொல்றார். ஆக, கடவுள் என்பவர் பாரபட்சம் பார்க்காதவர்; வேண்டியவன், வேண்டாதவன்னு எந்த வித்தியாசமும் கிடையாது அவர்கிட்டே!

அதோடு, எப்பேர்ப்பட்ட இடத்துல இருந்தாலும், எப்பேர்ப்பட்டவரா இருந்தாலும் கர்வம், ஆணவம், தலைக்கனம்னு ஏதும் இருக்கக்கூடாதுங்கறதை முருகக் கடவுள் அற்புதமா சொல்லியிருக்கார். அகந்தை இருந்தால் அழிவு நிச்சயம்னு வலியுறுத்த றார். எப்பவும் எல்லாருக்கும் தேவையான குணம் பணிவுங்கறதை ரொம்ப எளிமையா உணர்த்தறார். அதனால, மனிதர்களாகிய நாமும் அகந்தையையும் கர்வத்தையும் வளர்த்துக்காம, எல்லார்கிட்டயும் பணிவா பழகணும். புரிஞ்சுதா?'' என்று தாத்தா கேட்க, 'நல்லாப் புரிஞ்சுது தாத்தா’ என்று கண்கள் மலரச் சொன்னான் பேரன்.

##~##
''இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசண்முகநாதனை யார் யாரெல்லாம் வழிபட்டுப் பலன் பெற்றாங்கன்னு சொல்றேன்; கவனமா கேட்டுக்கோ'' என்றார் தாத்தா. பேரன் மௌனமாக, தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

''சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீஅகத்திய மாமுனி, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, கடும் தவம் இருந்து, முருகப்பெருமானின் அருளுக்குப் பாத்திரமானார். அதேபோல, விஸ்வாமித்திரரின் சாபத்தால, வசிஷ்டரின் புதல்வர்கள் ரொம்பவே பாதிப்புக்கு ஆளானாங்க. இதுல கலங்கிப் போன வசிஷ்டர், இந்தத் தலத்துக்கு வந்து, யாகங்களும் ஹோமங்களும் செஞ்சு, கந்தக் கடவுளின் அருளைப் பெற்றார். அவர் பசங்களும் சாப விமோசனம் பெற்று சந்தோஷமா வாழ்ந்தாங்க! அதுமட்டுமா? விஸ்வாமித்திரரும் இந்தத் திருத்தலத்துக்கு வந்து, முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றார்.

சிவனாரின் திருமுடியைப் பார்த்ததா பொய் சொன்ன ஸ்ரீபிரம்மா, சாபத்துக்கு ஆளானார், இல்லியா? அந்தச் சாபத்தை, குன்றக்குடி தலத்துக் குமரனை வழிபட்டுத்தான் சாப நிவர்த்தி அடைஞ்சார்னு சொல்லுது ஸ்தல புராணம்!'' என்று விவரித்த தாத்தா, மலையில் இருந்தபடியே குன்றக்குடி என்கிற அந்த அற்புதமான கிராமத்தை, அதன் அழகைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினார்.

கதை கேளு... கதை கேளு...

''அடேங்கப்பா... இவ்ளோ விஷயங்கள் இருக்கா தாத்தா, இந்தக் கோயில்ல!'' என்று விழிகள் விரிய, கைகள் ஆட்டிப் பேசினான் பேரன்.

''இன்னும் சொல்றேன் கேளு, முசின்னு ஒரு அரக்கன் அட்டகாசம் பண்ணிட்டிருந்தான். அப்போ இந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து,  முருகப்பெருமானைத் தரிசித்து, அந்த அரக்கனை அழிப்பதற்கான வரத்தைப் பெற்றான். தவிர, சூரியபகவான், நாரத முனிவர், மன்மதன்னு நிறையப் பேர் கந்தகுமாரனை வணங்கி வரம் பெற்ற திருத்தலம் இது!'' என்றார் தாத்தா.

''கலிங்க தேசத்தைச் சேர்ந்த இடும்பன் என்பவர் அசுரர் மரபுல வந்திருந்தாலும், முருகப்பெருமான் மீது மிகப் பெரிய பக்தி கொண்டவர். பாவம், அவருக்குத் தீராத வயித்து வலி! மயூரகிரிங்கற குன்றக்குடி தலத்தோட மகிமையை அறிஞ்சு இங்கே வந்தவர், சதாசர்வ காலமும் குமரக்கடவுளையே நினைச்சு வழிபட்டார். அதில் மகிழ்ந்து, அவரது வயிற்றுவலியைப் போக்கி, அவரைத் தன்னோடயே வைச்சுக்கிட்டார் முருகன். அந்த இடும்பனுக்கும் இங்கே சந்நிதி இருக்கு!'' என்றார் தாத்தா.

உடனே பேரன், ''இந்தக் காலத்துல முருகப்பெருமானின் அருள் கிடைச்சவங்க யாராவது உண்டா தாத்தா?'' என்று கேட்டான்.  

கதை கேளு... கதை கேளு...

''என்னடா கண்ணு இப்படிக் கேட்டுட்டே... சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த மருதுபாண்டிய மன்னர்களில் ஒருவருக்கு ராஜபிளவைன்னு ஒரு கட்டி வந்து ரொம்பவே இம்சை பண்ணுச்சு. அப்ப அவருக்கு நகரத்தார் ஒருத்தர், குன்றக்குடி முருகன் தலத்தில் இருந்து கொண்டு வந்த விபூதியைக் குழைச்சு அந்தக் கட்டி மீது பூசிவிட்டார். அன்னிக்கி ராத்திரி, பாலகனா வந்த முருகக் கடவுள் மயில் தோகையால் அந்தக் கட்டியை வருடிக் கொடுத்தார். அப்புறம், அதை அப்படியே எடுத்துத் தூரப் போட்டார். ராஜபிளவை போயே போச்சு! பூரண குணம்! விடிந்ததும், மற்றவர்களிடம் நடந்ததைச் சொன்னார் மன்னர். அந்தத் தலத்துக்கு வந்து, கோயிலுக்குத் திருப்பணிகளையும் திருக்குளத்தையும் செய்து கொடுத்தார். கும்பாபிஷேகத்தையும் விமரிசையா நடத்தித் தந்தார். இன்னும் நிறைய செஞ்சுருக்கார் இந்தக் கோயிலுக்கு!

அதேபோல, இந்தக் கலியுகத்துல நடந்த இன்னொரு சம்பவத்தையும் சொல்றேன் கேட்டுக்கோ. ஒருமுறை, இந்தப் பகுதி முழுவதும் கடும் வறட்சி. குமரக்கடவுளின் திருவீதியுலா வைபவம் அன்னிக்கு! சேனாபதி சுவாமிகள், பாடுவாய் முத்தப்பர்ங்கற புலவர் எல்லாருமா சேர்ந்து பாடிக்கிட்டே வந்தாங்க. மழை வேண்டித்தான் எல்லாரும் பாடினாங்க. என்ன ஆச்சரியம்..! பல வருஷங்களுக்குப் பிறகு மழை வெளுத்து வாங்கிருச்சு! போதும்போதுங்கற அளவுக்குப் பெஞ்சு, காடு-கரையெல்லாம் நிறைச்சதாம் மழை!

இன்னொரு சம்பவம்... சிருங்கேரி ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள், ராமேஸ்வரம் யாத்திரைக்குப் போனப்ப, இந்தத் தலத்துக்கு வந்து வியாச பூஜை செஞ்சார். 'வறண்டிருக்கும் இந்தச் சிவகங்கைச் சீமையின் ஏரியும் குளங்களும் கண்மாய்களும் வாய்க்கால்களும் நீரால் நிறையட்டும்’னு மனசை ஒருமுகப்படுத்தி, ஆறு ஸ்லோகங்கள் சொல்லி பூஜை செஞ்சார் சுவாமிகள். அடுத்த நிமிஷமே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சு! அந்த ஸ்லோகங்களை கோயில் கல்வெட்டில் இன்னிக்கும் பார்க்கலாம்!'' என்றபடி பேரனின் கையைப் பிடித்துக்கொண்டு, பிராகார வலம் வந்தார் தாத்தா.

எங்கு பார்த்தாலும் அரோகரா கோஷங்களை சொல்லிக் கொண்டு, பக்தர்கள் முருகப்பெருமானைக் கண்ணாரத் தரிசித்தார்கள்; சிலிர்த்தார்கள்.

- தரிசிப்போம்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism