Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிக்கொண்டே இருக்கிற வாழ்க்கையில், நிற்பதற்கும் இளைப்பாறுவதற்கும் எங்கே இருக்கிறது நேரம் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

''அட, அதை ஏங்க கேக்கறீங்க? ஒருநாள்கூட ஓய்வுங்கறதே இல்லை. ஞாயித்துக்கிழமைகூட எதுனா வேலை வந்துடுது. அக்கடான்னு இருக்கலாம்னா, அதுக்கு ஒரு அரை நாள்கூடக் கிடைக்க மாட்டேங்குது'' என்று புலம்புகிற அன்பர்களைப் பார்த்திருக்கிறேன்.

உதிரி பாகங்கள் தயாரிக்கிற மிகப் பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிற அன்பர் ஒருவர் என்னிடம் வந்தார். ''மும்பைலேருந்து காலை ஃபிளைட்ல சென்னைக்கு வந்துட்டு, அங்கே சென்னைல மீட்டிங்கை முடிச்சிட்டு, சாயந்திரமே நாகர்கோவிலுக்குப் போய் அங்கே ஒரு மீட்டிங்கையும் முடிச்சுட்டு, அப்படியே மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை, திருப்பூர்னு... ஒரு ரவுண்டு அடிச்சாச்சு!

அதையெல்லாம் முடிச்சுட்டு அப்படியே பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம்னு அடுத்த ரவுண்டு போகணும். இதுல ஓய்வு எடுக்கறதுக்கு நேரமே இல்லீங்க சுவாமி!’ எனத் தவிப்பும் ஏக்கமுமாகச் சொன்னார் அவர்.

வேலை நிமித்தமாக இப்படி ஓடிக்கொண்டே இருப்பவர்களைப் பார்த்து, 'என்னப்பா... கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டு ஓடுறியே..!’ என்று விளையாட்டாகச் சொல்வார்கள். ஓரளவேனும் ஓய்வு எடுத்துக்கொண்டால்தான் ஓடியாடி வேலை செய்வதற்கான தெம்பு உடலில் பரவிச் சுறுசுறுப்பாக்கும்.

ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் ஆகியவை உடலில் ஒழுங்காக வேலை செய்யவேண்டும். அதாவது, சீராக இயங்க வேண்டும். அப்படி ஒழுங்காக, சீராக இயங்குவதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

பொதுவாகவே ரத்த ஓட்டத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு, உணவில் ஏறியிருக்கிற புளிப்புத் தன்மையே காரணம். உணவுப் பொருளை காலம் கடந்து வைத்திருப்பது இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஊசிப்போகிற நிலையில், பொசபொசவென ஆகி, லேசாக நுரை சேர்ந்து, சற்றே புளிப்பேறிக் கிடக்கிறது.

வாழ்க வளமுடன்!

அந்தப் புளிப்பு உணவை உள்ளுக்குள் உணவாக்கிக் கொள்ள... வயிறு முழுவதும் புளிப்புத் தன்மை படர்ந்து, பரவுகிறது. இதையே உப்புசம் என்கிறோம். வயிறு உப்புசமான நிலையில் இருக்க... சாப்பிடுகிற சத்தான உணவுகூட, புளிப்புத் தன்மைக்குக் கட்டுண்டுவிடும். சத்துக்குப் பதிலாக உடல் முழுவதும் அயர்ச்சியும் சோர்வும் பரவும்படி செய்துவிடும்.

அயர்ச்சியும் சோர்வும் சேர்ந்து தூக்கத்தில் ஆழ்த்துவதுதான் முறையானது. ஆனால், உப்புசத்தால் உண்டாகிற அயர்ச்சியும் சோர்வும் நம் தூக்கத்தையே விரட்டிவிடும். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிற இம்சையை அனுபவிக்க நேரும். இந்த நிலையில் காலையில் எழுந்திருக்கும்போது, 'இன்னும் கொஞ்சம் தூங்கினா நல்லாருக்கும்’ என்று உள்மனம் நம்மிடம் கட்டளையிடும்; பரிதாபமாகக் கெஞ்சும்.

உணவை ஜீரணித்துக் கொள்வதற்கு, உடலில் ஏற்கெனவே ஒரு புளிப்பு உற்பத்தியாகிறது. அதற்கு 'ஹரிதகிதா அமிலம்’ என்று பெயர். புளிப்பேறிய வயிறுடன் இருக்கும்போது, கொஞ்சம் அதிகமாக உணவைச் சாப்பிட்டால், புளிப்பு படர்ந்த வயிறு என்னாவது? ஏற்கெனவே உற்பத்தியாகி தயாராக இருக்கிற ஹரிதகிதா அமிலத்தின் நிலை என்ன? வயிறு பெருத்து, உடல் தளர்ந்து, நடையில் இருந்த மிடுக்கு காணாமல் போய், ஒருநாளின் வேலையே பாதிக்கப்படுகிற நிலை வந்துவிடும்.

பிறகு, 'முன்னெல்லாம் கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டு ஓடினவன், இப்ப அப்படியே துவண்டு போயிட்டாம்பா’ என்பார்கள். 'என்னப்பா ஆச்சு?’ என்று அக்கறையும் கரிசனமும் பொங்க எவரேனும் கேட்டால், 'ப்ச்... வயசாயிட்டே இருக்கு இல்லீங்களா?’ என்று சம்பந்தப்பட்டவர் பதில் தருவார்.

உண்மையில், உணவு குறித்த விழிப்பு உணர்வு பெரும்பாலானோரிடம் இல்லை. அந்த விழிப்பு உணர்வு இருந்தால்தான், இரவில் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடியும்.

வயிறு என்பது எப்போதும் நிறைந்தே இருக்கவேண்டும் எனச் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி வயிறு நிறைய உணவு உண்டால்தான் உடலில் தெம்பு கூடியிருக்கும் என்று பலரும் ஒரு தவறான கருத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க வளமுடன்!

உணவின் அளவு என்பது வேறு; சத்தான உணவு என்பது வேறு. இதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். குவாலிட்டி என்பது வேறு; குவான்டிட்டி என்பது வேறு!

'அட, என்ன கண்ணு... வளர்ற புள்ள இப்படியா கொஞ்சமாச் சாப்பிடுறது?’ என்று வீடுகளில் அம்மாக்களும் பாட்டிகளும் சேர்ந்து குழந்தைகளுக்கு உணவை அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால், சத்தான உணவைத் தருகிறார்களா என்பதுதான் முக்கியம்.

வயிறு என்பதை ஒரு பானையாக நினைத்துக்கொண்டு, அதில் தண்ணீர் நிரப்புவதைப் போல் உணவை அடைத்துக்கொண்டு வாழ நேர்ந்தால், ஒரு கட்டத்தில் வயிறே பெரிய பானை போலாகிவிடும். தொப்பையும் தொந்தியுமாக இருந்துகொண்டு, நடக்கவோ நிற்கவோ, உட்காரவோ ஓடவோ முடியாமல் மிகவும் சிரமப்பட்டு உடலைத் தூக்கிக்கொண்டு பயணிக்கிற நிலை மிகக் கொடுமையானது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது, தற்காலத்தில் கிடைக்கிற உணவு நஞ்சாகாதா, என்ன? மிதமான உணவே சுகமானது; சாத்விகமானது; இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கக்கூடியது.

ஆழ்ந்த உறக்கம் என்பது மிக அற்புதமான ஓய்வு. இந்த ஓய்வும் உறக்கமும் ஒருநாள் இருந்துவிட்டால் போதும்... அந்த ஒரு வாரம் முழுவதும் அருமையாகவும் சிறப்பாகவும் வேலை செய்யமுடியும்.

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். உண்மையான உணவின் அருமையை, ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.

இதுவரை, வெறும் ஓய்வு பற்றியும் தூக்கம் குறித்தும் சொன்னேன். நல்ல உணவு, அதிலும் மிதமான அளவு கொண்ட உணவு... அதன் மூலம் கிடைக்கிற தூக்கம் மற்றும் ஓய்வு, நமது உடலைத் தக்கையாக்கி, பரபரவென வேலை பார்க்கச் செய்யும்.

ஆனால், ஓய்வு என்பது அது மட்டும்தானா? மனம் மற்றும் புத்திக்கு ஓய்வு வேண்டாமா? உடல் 30 கி.மீட்டர் ஓடினால், மனம் 300 கி.மீட்டர் வேகத்தில் அல்லவா ஓடும்? எனவே, மனதுக்கும் புத்திக்குமான ஓய்வு என்பது ரொம்பவே அவசியம், இல்லையா?!

என்ன... மனசுக்கான ஓய்வைத் தேடித்தானே மனவளக் கலைப் பயிற்சிக்கே வந்திருக்கிறோம், என்கிறீர்களா?

அதுவும் சரிதான்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism