Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

Published:Updated:
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புனித மரத்திலிருந்து புதிதாகத் தேர் செய்யப்படும்போது, அந்த மரத்துக்கும், தேரைச் செதுக்க உதவும் கருவிகளுக்கும் பூஜை செய்யப்படுகிறது. வீடுகளிலேயேகூட, சடங்குகளின்போது மணி, சங்கு, குடம், செம்பு, விளக்கு எல்லாவற்றுக்கும் ஸ்தோத்திரங்கள் சொல்லி மரியாதை செய்வார்கள்.

ஆக, பூஜையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளும் வணங்கத் தகுந்ததாகக் கருதப்படுகிறது. அதனால், இந்துக்கள் பலவற்றையும் வணங்குபவர்கள் என்பதா? (கடவுள்) ஒருவரை மட்டுமே வணங்குபவர்கள் என்பதா?

19-ஆம் நூற்றாண்டில், வேத மந்திரங்களை முதன்முதலில் மொழிபெயர்க்க முற்பட்டபோது, கீழ்த்திசை அறிஞர்கள் அந்தக் கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவந்தது. வேதத்தின் ஒவ்வொரு ஸ்லோகமும் கிரேக்கர்கள் போல வெவ்வேறு கடவுளை வேண்டுவதாக அமைந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு தடவை கடவுளை வேண்டும்போதும், குறிப்பிட்ட ஒருவரைத்தான் தனிப் பெரும் தெய்வமாகக் கருதுகிற மாதிரி தோன்றியது. இது அவர்களை வெகுவாகக் குழப்பியது.

'இந்துக்கள் ஒரே கடவுளை வணங்கினாலும், பிற கடவுளர்கள் இருப்பதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் ஒரு கடவுளை அவ்வப்போது மாற்றி, இன்னொரு கடவுளைத் தனிப்பெரும் கடவுளாகக் கருதினார்கள்’ என்கிறார் மாக்ஸ் முல்லர். சொல்லப்போனால், குறிப்பிட்ட சந்தர்ப்பம்தான், எந்தக் கடவுள் தனிப்பெரும் கடவுள் என்பதை அப்போதைக்கப்போது தீர்மானிக்கிறது. வறட்சிக் காலத்தில் மழை தரும் இந்திரன் மதிக்கப்படுகிறான்; குளிர் காலத்தில் வெப்பம் தரும் சூரியன் வணங்கப்படுகிறான்; கோடையில், காற்றுத் தேவன் வழிபடப்படுகிறான்.

தொழிலிலும் அப்படித்தான்! அங்கே நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்தாம். ஆனால், நம் தேவைக்கு ஏற்றவாறு அவர்களுடைய முக்கியத்துவம் கூடுகிறது; குறைகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைதான் அதைத் தீர்மானிக்கிறது.

சிவகுமார், கார்களுக்கு வேண்டிய உதிரிபாகங்கள் சிலவற்றைத் தயாரிக்கும் சிறு தொழில் அதிபர். வியாபாரம் நன்றாக நடந்து வந்தது. வாரத்தின் ஒவ்வொரு நாளையும் அவர் ஒவ்வொரு துறைக்கு ஒதுக்கி, தொழிலில் கவனம் செலுத்திவந்தார்.  

அதாவது... திங்கள் விற்பனைக்கு என்றால், செவ்வாய் போக்குவரத்து பிரச்னைகளுக்கு. புதன்- உற்பத்தி தொடர்பான விஷயங்களுக்கு. வியாழன்- நிதி விவகாரங்களுக்கு. வெள்ளிக்கிழமை- மனிதவளத் துறைக்கு என்றால், சனிக்கிழமை பொது நிர்வாகத்துக்கும், கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும்! - இப்படியாக, அவர் தமது நாட்களை தன்னுடைய தொழிலுக்காக வகை பிரித்து ஒதுக்கியிருந்தார்.

வானம் தொடுவோம்!

'ஏன் அப்படி ஒதுக்கியிருக்கிறீர்கள்?’ என்று அவருடைய செயலாளர் கேட்டபோது, 'ஒவ்வொருவரும் என் வியாபார வெற்றிக்கு உதவுகிறார்கள். அதனால் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு துறைக்கு சில மணி நேரம் ஒதுக்குகிறேன். அவர்கள் எல்லோரையுமே நான் சமமாக மதிப்பதால், யார் பணி உயர்ந்தது, யார் பணி தாழ்ந்தது என்ற எண்ணம் உருவாவதில்லை.   ஒவ்வொருவரும் அவரவருடைய துறையில் எனக்கு முக்கியமானவர்களே! என்னுடைய வியாபாரம் எல்லோரையுமே நம்பித்தான் நடக்கிறது' என்றார்.

சிவகுமாரின் நிலைப்பாடு இப்படியென்றால், அவரது போட்டியாளர் ராகேஷ், வேறு உத்தியைக் கையாளுவார். அவருக்கு வாடிக்கையாளர்கள்தான் கடவுள். எனவே, நிறுவனத்தில் உள்ள அத்தனை பேரும் வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்யும் வகையில் உழைக்க வேண்டும். இதனால் அவரது வாடிக்கையாளர்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்கள். வருமானமும் நிரந்தரமாக இருக்கிறது.  

சிவகுமார், ராகேஷ் இருவருமே வியாபார விஷயத்தில் சரியாகத்தான் நடந்துகொள்கிறார்கள். இருவருமே லாபம் ஈட்டுகிறார்கள். ஆனால், தங்கள் துறைகளைக் கையாள்வதில் இருவருடைய அணுகுமுறையுமே வெவ்வேறானவை.  

சிவகுமார் விஷயத்தில் கடவுள்கள் நிறைய இருந்தாலும், சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.   ராகேஷ§க்கோ ஒரே கடவுள்தான் சுப்ரீம். அவர்தான் வாடிக்கையாளர்.

சிவகுமார், ராகேஷ் இருவருக்கும் இரண்டு அணுகுமுறைகள் இருந்தாலும், இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. இதுதான் நாம் அறியவேண்டிய தெளிவான உண்மை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism