Published:Updated:

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

கதை கேளு... கதை கேளு...

Published:Updated:
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்தச் சிறிய மலையில், மேற்கு நோக்கி அமைந்துள்ள அற்புதமான ஆலயம் அது. மலையைக் குடைந்து படிகள் அமைத்திருக்கிறார்கள். அந்தப் படிகளில் ஏறிக்கொண்டே, ''இந்த மலையில இருக்கிற கோயில் குடைவரையாகச் செய்யப் பட்டது. அதாவது, மலையைக் குடைந்து செய்யப்பட்டது. அப்படிப் பண்றது லேசுப்பட்ட காரியமில்லை, தெரிஞ்சுக்கோ!'' என்று சொல்லிய தாத்தா மூச்சு வாங்கியபடி, அகலமான படி ஒன்றில் சற்று நேரம் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார். பேரன் இளரத்தம் அல்லவா? விறுவிறுவென படிகளில் ஏறியும் இறங்கியும் குஷியான விளையாட்டுப் போல எந்தச் சிரமமும் இன்றி படிகளில் ஏறிச் சென்றான். அந்த மலை, தான்தோன்றிமலை.

உச்சியை நெருங்க நெருங்க, காற்று தலை கோதி, முகத்தை வருடியது. திரும்பி ஊரைப் பார்க்க, மலையின் பிரமாண்டமும் ஊரின் நேர்த்தியும் விஸ்தாரமாகத் தெரிந்தது.  கரூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான்தோன்றி மலைக்கு மினிபஸ்கள் நிறையவே இயங்குகின்றன. அந்தப் பேருந்தில் ஏறினால், மலையடிவாரத்துக்கு அருகிலேயே இறங்கிக்கொள்ளலாம்.

''ஆதிகாலத்துல, பகவான் எழுந்தருளியிருக்கிற கருவறையை மட்டும் குடைவரையாகக் கட்டியிருந்தாங்க. அப்புறம்... அர்த்த மண்டபம், நுழைவு மண்டபம் எல்லாம் எப்பவும் போலக் கட்டி, விரிவுபடுத்தியிருக்காங்க. இங்கே கருவறைல இருக்கற ஸ்வாமி பேரு... ஸ்ரீகல்யாணவெங்கடரமண பெருமாள். ரொம்ப அழகா இருப்பார்!'' என்று தாத்தா சொல்ல, பேரன் 'உம்’ கொட்டிக்கொண்டே வந்தான்.

##~##
''ஒருகாலத்துல கண்ணும் கருத்துமா பூஜைகள் பண்ற அர்ச்சகர் ஒருத்தர் இங்கே இருந்தார். எப்பவும் பெருமாளையே நினைச்சுக்கிட்டிருப்பார். பெருமாளுக்கு விதம்விதமா அலங்காரம் பண்ணி ரசிப்பார். ஒருமுறை, அர்ச்சகரோட உறவுக்காரர் ஒருத்தர் இறந்துட்டார். அதுக்காக அவர் வெளியூர் போகவேண்டியிருந்தது. அப்ப தன் பையனை அனுப்பி, வழக்கம்போல பூஜைகளைப் பண்ணும்படி சொன்னார். அவன் உன்னை மாதிரி சின்னப் பையன்.

ஸ்ரீகல்யாணவெங்கடரமண பெருமாளுக்குத் தினமும் நிலைமாலை சார்த்தறது வழக்கம். அன்னிக்கு அவ்ளோ பெரிய மாலையை பக்தர் ஒருத்தர் எடுத்துட்டு வந்து, அந்தப் பையன்கிட்ட கொடுத்தார். பாவம் அவன்... அவ்ளோ பெரிய நிலைமாலையைத் தூக்கமுடியாம தூக்கினதே பெரிய விஷயம்! பெரிய பெரிய தூண்களோட இருக்கிற அந்த உசரமான மேடைல பிரமாண்டமா இருக்கார் பெருமாள். அவன் என்ன பண்ணுவான், பாவம்! அந்த மாலையை ரெண்டு கைகளாலயும் பிடிச்சுக்கிட்டு, அப்படியே நெஞ்சுக் கூட்டுல முட்டுக்கொடுத்துத் தூக்கிப் பெருமாளுக்கு சார்த்த முயற்சி பண்றான். முடியலை. கண்ணுல ஜலம் தாரைதாரையா கொட்றது அவனுக்கு!

ஒருகட்டத்துல, அழுதுக்கிட்டே ''வெங்கட்ரமண தேவுடு... கொஞ்சம் குனிஞ்சுக்கோ! நான் மாலை போடணும்''னு பெருமாளைப் பார்த்துச் சொன்னான். என்ன ஆச்சரியம்..! உடனே பெருமாள் சட்டுன்னு குனிஞ்சு, அவன் முகத்துக்கிட்ட தன் சிரசைக் கொண்டு வந்தார். அந்தப் பையனும் ரொம்ப மகிழ்ச்சியோட அந்தப் பெரிய நிலைமாலையை பெருமா ளுக்குச் சார்த்தினான். அப்படிப்பட்ட கருணைத் தெய்வம் இந்தப் பெருமாள். இவரை நீயும் நல்லா வேண்டிக்கோ! 'கல்வியையும் ஞானத்தையும் எனக்குக் கொடுப்பா, பெருமாளே!’ன்னு பிரார்த் தனை பண்ணிக்கோ. நிச்சயம் நிறைவேத்தித் தருவார்!'' என்று தாத்தா சொல்லவும், கண்கள் மூடி, கைகூப்பிப் பிரார்த்தித்தான் பேரன்.

நான்கு திருக்கரங்களுடன், நின்ற கோலத்தில், திருமார்பில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியபடி சேவை சாதிக்கிற ஸ்ரீகல்யாண வெங்கடரமண பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியரு அழகு!

கதை கேளு... கதை கேளு...

''ரொம்பவே வரப்பிரசாதி இந்தப் பெருமாள்! 'என் குறையைப் போக்கிடு பெருமாளே... உனக்கு காணிக்கை செலுத்தறேன்’னு வேண்டிட்டு வந்தால் போதும்... அப்படியே அனுகூலப்படுத்திக் கொடுத்துடுவார். இவரை குலதெய்வமாகக் கொண்டவங்களும், இஷ்ட தெய்வமாகக் கொண்டவங்களும் அதிகம். இவரோட பக்தர்கள், உலகத்துல எங்கே இருந்தாலும், இங்கே வந்து குழந்தைங்களுக்கு முடி இறக்கறது, காது குத்தறதுன்னு சடங்குகளைச் செஞ்சு வழிபடுறாங்க. இந்தப் பெருமாளுக்குத் திருக்கல்யாண உத்ஸவம் செஞ்சு வேண்டிக்கிட்டா, சீக்கிரமே கல்யணாமாகும்னு ஒரு ஐதீகம்.

இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? இந்தக் கோயில் பெருமாளுக்கு செம்மாளி சமர்ப்பணம் பண்றது முக்கியமான பிரார்த்தனை!'' என்றார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு...

''செம்மாளியா? அப்படீன்னா என்ன தாத்தா?'' என்று கேட்டான் பேரன்.

''செம்மாளின்னா செருப்புன்னு அர்த்தம். பெருமாளுக்கு வேண்டிக்கிட்டு, செருப்பு தைச்சு இங்கே கொண்டு வந்துடுவாங்க. அதுக்கு சந்தனம், குங்குமம்லாம் வைச்சு, அலங்காரம் பண்ணி, திருநாமம் இட்டு, பூக்கள் சார்த்தி, அப்படியே ஒரு பலகையில வைச்சு, தலையில் சுமந்தபடி, உறவுக்காரர்கள் புடைசூழ, மேள-தாளம் முழங்க, மலையை வலம் வருவாங்க. இப்படி செம்மாளி நேர்த்திக்கடன் செலுத்தறதுங்கறது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதுக்கு, நிறைய விரத அனுஷ்டானங்களெல்லாம் இருக்கு.

அதுமட்டுமா? இந்தத் தான்தோன்றி மலைக்கு வந்த நெரூர் ஸ்ரீசதாசிவபிரம்மேந்திராள் சுவாமிகள், இங்கேயுள்ள குகையில தியானத்துல ஆழ்ந்து, பெருமாளை சேவிச்சிருக்கார். அவர், மந்திர ஸ்தாபனம் பண்ணி வைச்சதையும் சிலிர்ப்போட சொல்றாங்க. முக்தி அடைஞ்சிட்ட இந்த நெரூர் சுவாமிகள், வருஷம் தவறாம புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையில இங்கு வந்து, மூன்றாம் ஜாமத்துல பெருமாளை சேவிச்சுட்டுப் போறதா ஒரு நம்பிக்கை. அந்த அளவுக்கு சாந்நித்தியமான கோயில் இது!'' என்று விழிகள் விரியச் சொல்லிக் கொண்டே வந்தார் தாத்தா.

''தான்தோன்றிமலைன்னா தானே தோன்றிய மலைன்னுதானே தாத்தா அர்த்தம்?'' என்று ஒரு கேள்வியை எழுப்பினான் புத்திசாலிப் பேரன்.

''அப்படியும் சொல்லலாம்! தான்தோற்றுவித்த மலை, அதாவது பெருமாள் தோற்றுவித்த இந்த மலையானது, தாம் தோற்றுவித்த மலை எனச் சொல்லப்பட்டு, அப்புறம் அது பேச்சுவழக்கில் தான்தோன்றிமலைன்னு மருவி விட்டதாகவும் சொல்றாங்க'' என்றபடியே தாத்தா அகலமான படி ஒன்றில் வசதியாக அமர்ந்துகொள்ள, அவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான் பேரன். காற்று ஜிலுஜிலுவென்று வீசியது.

- தரிசிப்போம்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism