Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்தக் காலத்தில் மகான்களும் முனிவர் களும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து, காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்குமாக எண்ணற்ற அன்பர்கள் யாத்திரை மேற்கொண்டனர். உடுத்திய வேஷ்டியும், தோளில் ஒரு துண்டுமாகக் கிளம்பியவர்கள், ஆறு- குளங்களில் நீராடினார்கள்; அருகில் உள்ள வீடுகளில் தருகிற உணவைச் சாப்பிட்டார்கள்; மரத்தடியில் இளைப்பாறினார்கள்.

அளவான உணவு, சரியான தூக்கம், நரம்புகளுக்கும் ரத்தநாளங்களுக்கும் போதுமான வேலை என அந்த யாத்திரை அமைந்ததால், அவர்கள் நோய் நொடியின்றி இருந்தனர்; நூறு வயதைக் கடந்தும் வாழ்ந்தனர். அவர்கள், அப்படி வாழ்வதற்கு மிக முக்கியக் காரணமாக, அஸ்திவாரமாக அமைந்தது, கால்கள்தான்!

இன்றைக்கும் கூட, சபரிமலை யாத்திரை செல்பவர்களும் பழநிக்குப் பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கின்றனர். மலையேறும் தருணங்களில், 'தேக பலம் தா; பாத பலம் தா!’ என்று கோஷமிட்டபடியே மலையைக் கடக்கின்றனர்; பகவானைத் தரிசிக்கின்றனர்.

##~##
கால்கள் வலுவாக இருந்தால்தான், ஓடியாடி உழைக்க முடியும். ஓடி யாடி உழைத்தால்தான், வாழ்வில் உயரமுடியும். வாழ்க்கை உயர்ந்தால் தான், நிம்மதியும் நிச்சலனமும் மனதுள் குடிகொள்ளும். மனசு அமைதியாக ஆரவாரமின்றி இருந்தால்தான், ஒருமித்த நிலையைத் தொடமுடியும்! அந்த ஒருமித்த நிலை என்பது, தன்னைத் தான் அறிதல்; அதாவது, ராமசாமி என்பவர் தனக்குள் உற்று நோக்க, உள்ளேயிருக்கிற ராமசாமியை அறிவது. இதன் அடுத்த நிலை, ராமசாமியும் இறைவனும் வேறு வேறல்ல என்பதை உணர்ந்து, தெளிவது! ’அகம் பிரம்மாஸ்மி’ என்பதை வார்த்தையால் கேட்டால் மட்டும் போதுமா? உள்ளே ஒருமித்து, அந்த அற்புதமான இன்பத்தை அனுபவிக்க வேண்டாமா? ஆக, உள்ளுக்குள் அமிழ்ந்து போவதற்கு, ஆரம்பகட்டமாக இருந்து, ஏதோவொரு விஷயத்தில் பிள்ளையார் சுழி போடுவது, கால்கள்தான்!

முதலில், கால்களை நீட்டி உட்கார்ந்துகொள்ளுங்கள். இரண்டு பாதங்களையும் சுமார் ஒன்றரை அடி இடைவெளி யில் அகற்றி வைத்துக்கொள்ளுங்கள். பாதங்களின் விரல்கள், வெளியே பார்த்தபடி இருக்கிறதுதானே?! இப்போது இரண்டு கைகளையும் பின்பக்கமாக ஊன்றிக் கொள்ளுங்கள். அடுத்து, இரண்டு கால்களையும் உட்புற மாக, அதாவது இரண்டு கால்களின் பெருவிரல்களும் தரையைத் தொடும்படியாகவும், இரண்டு பெருவிரல்களின் முனைகளும் நேருக்குநேர் இருப்பது போலவும் கொண்டு வரவும். அடுத்து, கால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்லவும். இப்படியாக, தினமும் காலை அல்லது மாலை யில், சுமார் ஐந்து முறை பயிற்சி செய்யுங்கள்.

பயிற்சி செய்யும்போது எவருடனும் பேசாமல் மௌனமாக இருப்பது உத்தமம். 'நான் பேசற ஜாதியாச்சே...’ என்கிறீர்களா? கால்களுடன் பேசுங்கள்.

''என் இனிய கால்களே! உங்களுக்கு நன்றி. எனக்காக, என் பயணத்துக்காக, எத்தனை கடுமையாக உழைத்திருக் கிறீர்கள்? ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்றதற்காக ஒரு சோப்பு டப்பாவை எனக்குப் பரிசாகத் தந்தார்கள்; கை தட்டிக் கௌரவப்படுத்தினார்கள். அந்தப் பரிசும் பாராட்டும் உனக்கானது! இந்த வெற்றியும் கௌரவமும் எனக்குள் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. அதற்கு நீயும் ஒரு காரணம்.

இன்றைக்கு, என்னைப் போல பைக் விடுவதற்கு ஆளே இல்லை என்கின்றனர் நண்பர்கள். ஏழாம் வகுப்புப் படிக்கும்போது, வாடகைக்குச் சைக்கிளை எடுத்துக் கொண்டு, குரங்குப் பெடலில் அழுத்தி அழுத்தி ஓட்டுகிறபோது, 'அடேய் முட்டாள்! வளர்ந்துவிட்டாயடா நீ. இன்னும் பயம் எதற்கு?’ என்று என்னிடம் சொல்லாமல் சொல்லி, பெடல் அழுத்தி, சைக்கிள் விடுவதற்குப் பக்க பலமாக இருந்தது நீதானே?! விழுந்து, முட்டி பெயர்ந்து, மெல்லிசாய் ரத்தக்கசிவு தெரிகிறபோதெல்லாம், 'வீரனுக்கு விழுப்புண்கள் சகஜம்’ என்பதுபோல், நீதானே பெடலில் உன்னைப் பொருத்திக்கொண்டு, பரபரவெனச் செயல்பட் டாய். புத்திக்குள் இறங்கிப் படர்ந்திருந்த சைக்கிள் ஆசையை, உன் பத்து விரல்களுக்கும் கொண்டு சென்று குவித்துக்கொண்டு, மொத்த பலத்தையும் திரட்டி, பெடல் அழுத்தியதால்தான், பிறகு கைகளை விட்டுவிட்டும்கூட, பாதங்களில் பேலன்ஸ் செய்தே சைக்கிள் ஓட்டினேன். அதுதான், அடுத்து பைக் ஓட்டுவதில் சூரனாக என்னை மாற்றியிருக்கிறது.

வாழ்க வளமுடன்!

உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது? வார்த்தையாகச் சொன்னால் போதுமா? கை குலுக்கி நன்றி பாராட்டுவது போல், கால்களைக் குலுக்கிக்கொள்ள முடியாதே? என்ன செய்வது?''

ஒன்றும் செய்யவேண்டாம். வெறுமனே கால்களை நீட்டிக்கொண்டு, அவற்றை ஒரு நிமிடம் உற்றுக் கவனியுங்கள். குறைந்தது இரண்டு நிமிட நேரமாவது, ஒவ்வொரு விரலையும் கூர்ந்து கவனியுங்கள். சுமார் மூன்று நிமிடங்களேனும் அடிப்பாதங்களை மெள்ள வருடிக் கொடுங்கள். ஒரு நான்கு நிமிடங்கள், அடுத்த பாதத்தை கவனிக்கத் துவங்குங்கள். இதையடுத்து ஐந்து நிமிடங்களை, முழங்காலில் இருந்து பாதங்களின் விரல்கள் வரைக்கும், பார்வையாலும் கைகளாலும் மெள்ள நீவிவிடுங்கள்.

அடுத்து, சுமார் 10 நிமிடங்கள், மேற்சொன்ன பயிற்சிகளில் ஈடுபடுங்கள். தினமும் இப்படியாக, பத்து இருபது நிமிடங்களைப் பாதங்களுக்காக ஒதுக்குங்கள். பயிற்சிக்காகச் செலவிடுங்கள். ஒரு விஷயம்... காலச் செலவு, பத்து இருபது நிமிடங்களாக இருக்கலாம். ஆனால், வரவு என்பது வாழ்க்கை முழுமைக்கும் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறிவிடாதீர்கள்!

இரண்டு கால்களைக் கவனிக்கா விட்டால், ஒருகட்டத்தில் மூன்றாவது காலைத் தேடவேண்டியிருக்கும்; உஷார்! அந்த மூன்றாவது கால் என்பது, ஊன்றுகோல்.

ஆனால் இன்றைக்கு, மூன்றாவது கால் என ஊன்றுகோல் மட்டுமா இருக்கிறது? நிறையப்பேருக்கு, நான்கு கால்களைக் கொண்ட 'வாக்கர்’ எனும் சாதனம்தான் பயன்பாடாக இருக்கிறது. அதுவும், பாதையிலும் சாலையிலும் பயணிப்பதற்காகவா? இல்லை. நடுக்கூடத்தில் இருந்து வாசல்; வாசலில் இருந்து பாத்ரூம்; பாத்ரூமில் இருந்து பூஜையறை... என வீட்டுக்குள் புழங்குவதற்கே, 'வாக்கர்’ தேவைப்படுகிறது, சிலருக்கு!

'வாக்கிங்’ செல்லும் வழக்கம் இருந்தால், பின்னாளில் 'வாக்கர்’ தேவைப்படாது என்று அன்பர்களிடம் நான் அடிக்கடி சொல்வது உண்டு.

எனவே, நான் சொன்னதுபோல், கால்களுடன் பேசிப் பழகி, பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்களுக்கு வாய் இல்லை; ஆனால், உங்களுக்கு அவை நன்றி சொல்லும்; 'கவலைப்படாதே! எங்கே வேண்டுமானாலும் போக ஆசைப்படு; நாங்கள் இருக்கிறோம்!’ என்று அவை உத்தரவாதம் தரும்.

உங்களுக்குச் செவிகள் உள்ளன. ஆனாலும், கால்களின் வார்த்தைகளை உங்களால் கேட்கமுடியாது; உணரத்தான் முடியும். ஆமாம், அடுத்தடுத்த நாட்களில் கால்களிலும் பாதங்களிலும், பத்து விரல் களிலும் பரவியிருக்கும் புத்துணர்ச்சியை, புதுத் தெம்பினை உங்களால் உணர முடியும்! கால்கள் கொடுக்கிற நம்பிக்கை வைட்டமின் அது!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism