Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
##~##
கா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ல்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, தோள்களில் இறக்கையை ஒட்டிக்கொண்டு, கைகளில் சாப்பாட்டுப் பையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிற உழைக்கும் மக்கள் இருக்கிற உலகம் இது!

எட்டு மணி நேர வேலை என்றாலும், நகரத்துக்கு வெளியே வீடு பிடித்து, பேருந்து, ரயில் அல்லது இரு சக்கர வாகனம் என ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ பயணித்து, வேலை முடிந்ததும் மீண்டும் அதே அளவு நேரத்தைச் செலவிட்டு, 8 அல்லது 9 மணிக்கு வீடு எனும் கூட்டுக்குள் வந்து விழுகிற மனிதர்கள் இங்கு அதிகம்.

'டிரெயின்ல நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாயிட்டே இருக்கு. பஸ்ல நிரம்பி வழியற கூட்டத்துல நசுங்கி, வதங்கி வெளியே வரவேண்டியிருக்கு. பைக்ல போகலாம்னா, ஊர்ல இருக்கிற வண்டிப் புகையெல்லாம் நம்ம மூக்குக்குள்ளேதான்! அதுவும் இல்லாம, பயங்கர டிராஃபிக்ல ஊர்ந்து ஊர்ந்து, நகர்ந்து நகர்ந்துதான் போக வேண்டியிருக்கு.

வீட்டுக்கு வந்து அக்கடான்னு படுக்கலாம்னா, இடுப்பை அப்படியே கழட்டி வைச்சா தேவலைனு தோணுது. அப்படியரு வலி!’ என்று பெங்களூருவில் இருந்து வந்திருந்த அன்பர் ஒருவர் என்னிடம் புலம்பினார்.

அந்த அன்பர் அது அவருக்கு மட்டுமே உண்டான பிரச்னை என்று சொல்லவில்லை. வளர்ந்துவிட்ட நகரத்தில் வாழ்கிற முக்கால்வாசி பேருக்கும் உண்டான பிரச்னை இது என்று தெளிவாக எடுத்துச் சொன்னார்.

ஒருவகையில் உண்மைதான் இது!

அதிக நேரம் பயணித்தாலோ அல்லது அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்த்தாலோ... இடுப்பில், எலும்புப் பகுதியில் வலி பின்னியெடுக்கும். கொஞ்சம் நிமிர்ந்தால்கூட வலி அதிகரித்து, அழக்கூடச் செய்துவிடும். மல்லாக்கப் படுத்தாலும் வலிக்கும்; குப்புறப் படுத்தாலும் வலிக்கும். உடலின் மையமான பகுதியில் இருக்கிற இந்த இடுப்புப் பகுதியில் மொத்த வலியும் வந்து குவிந்து கொள்ளும். உட்கார்ந்தால், நின்றால், நிமிர்ந்தால், திரும்பினால் என ஒவ்வொரு அசைவுக்கும் வலி கூடிக்கொண்டே போகும்.

அதனால்தான் உடலைத் தளர்த்துகிற பயிற்சியில், இடுப்புப் பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பயிற்சிக்கு வருவோம்.

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுத்துக்கொண்டு, முகத்தை மேல்நோக்கியபடி வைத்துக் கொள்ளவேண்டும். கண்கள் மூடியே இருக்கட்டும். கால்கள் இரண்டையும் ஒட்டாமல், பிரித்தே வைத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் தளர்ந்தபடியே வைத்துக்கொண்டு, காலின் பாதப் பகுதிகளில் இருந்து துவங்கி, அப்படியே மேல் நோக்கியபடி உடலை மெள்ளத் தளர்த்திக்கொண்டே வரவேண்டும்.

வாழ்க வளமுடன்!

பாதங்களைத் தளர்த்துவது குறித்து மனதுக்குள் நினைத்தபடி துவங்குகிற பயிற்சி சாதாரணமானது அல்ல. கிட்டத்தட்ட தியானத்துக்கு இணையானது. முனிவர்களும் யோகிகளும் அந்தக் காலத்தில் வனங்களில் பர்ணசாலை அமைத்து மேற்கொண்ட பயிற்சி இது. ஆகவே, இந்த உடல் தளர்த்துதல் பயிற்சியின் உன்னதத்தைப் புரிந்து கொள்ளுங்கள்; புரிந்து உணர்ந்து செய்யுங்கள்.

அடுத்து... பாதங்களுக்குப் பிறகு கால்கள், கெண்டைக் கால் பகுதி, முழங்கால் பகுதி, தொடைப் பகுதி என மெள்ள மெள்ள ஒவ்வொரு பகுதியாகத் தளர்த்திக்கொண்டே வாருங்கள். அப்படித் தளர்த்துவதை மந்திரம் போலும் உள்ளுக்குள் நாக்கு அசையாது சொல்லிக் கொள்ளுங்கள்.

முக்கியமாக, இடுப்புப் பகுதியைக் கூர்ந்து கவனித்தபடி, 'என் இடுப்பை இப்போது தளர்த்திக் கொள்கிறேன்’ என்று சொல்லி, அப்படியே தளர்த்தவும் செய்யுங்கள். இடுப்பு என்பதில் இடுப்பு மற்றும் முதுகின் கீழ்ப்பகுதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். முதுகுத் தண்டு வடப்பகுதியின் மீது அதிக கவனம் செலுத்தியபடி மெள்ளத் தளர்த்துங்கள்.

முடிந்தால், ஒரு நிமிடம்... ஒரேயரு நிமிடம் அந்த இடுப்புப் பகுதியுடன் பேசுங்கள். 'சாலையில் ஏகப்பட்ட குண்டு- குழிகள். வாகனத்தில் படபடவென வேகமாகச் சென்றதால், உனக்குத்தான் பாவம் வலி அதிகரித்துவிட்டது. மன்னித்துவிடு!’ என்று மனதார மன்னிப்பு கேளுங்கள். 'அதற்குப் பிராயச்சித்தமாகத்தான், இதோ... இப்போது உனக்கு ஏகாந்தமான ஓய்வைத் தரப்போகிறேன். உன்னை முழுவதுமாக தளர்த்திக் கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் உனக்குள் இருந்த வலி மொத்தமும் காணாமல் போய்விடும், பாரேன்!’ என்று குதூகலமும் உற்சாகமும் பொங்கப் பேசுங்கள். அவ்வளவுதான்... இடுப்புப் பகுதிக்கு அதுவரை கிடைத்திராத ஒரு லேசான, தக்கை நிலையை உங்களால் உணரமுடியும்.

மருந்துக் கடை வைத்திருக்கும் அன்பர் ஒருவர் ஒருமுறை வந்தார். 'எப்போதும் உட்கார்ந்திருக்கிற வேலைதான் எனக்கு! எப்போதாவது எவரேனும் வருவார்கள்; அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களாகும்! பிறகு என்ன... மீண்டும் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளவேண்டியதுதான்.

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக, முதுகுத் தண்டு வடத்தில், இடுப்பில் பயங்கர வலி சுவாமி. இரவில் மல்லாந்தபடி நன்றாகக் கை கால்களை நீட்டிப் படுத்தால், வலி உயிர் போகிறது. மனவளக்கலை யோகா பயிற்சியைச் செய்தால், உடல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று என் நண்பர் சொல்லித்தான் இங்கு வந்தேன்’ என்று சொன்னார்.

மனவளக்கலையின் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, இந்த உடல் தளர்த்துகிற பயிற்சிகளையும் கற்றறிந்த பிறகு... ஆறு மாதங்கள் கழித்து, மீண்டும் ஆழியாறு விழா ஒன்றுக்கு வந்தவரின் முகத்தில் அப்படியரு சந்தோஷம்; விடுதலை உணர்வு!

'இப்பவும் மெடிக்கல் ஷாப்தான். அதே நாற்காலிதான். அதே போல எப்பவாவது வர்ற கஸ்டமர்கள்தான். ஆனா, எப்பவும் நிரந்தரமா இருந்த வலி மட்டும் இப்ப காணவே காணோம் சுவாமி!’ என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னபோது, விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கரவொலி செய்தனர்.

நேராக நின்றுகொண்டிருக்கும்போது, சட்டென்று திரும்புவோம். உட்கார்ந்திருக்கும்போது கையில் வைத்திருக்கும் பேனா, நோட்டுப் புத்தகம் அல்லது பர்ஸ் என ஏதேனும் ஒன்று கீழே விழும். உடனே குனிந்து அவசரம் அவசரமாக அதை எடுப்போம். பண்டிகைக்காக நிறைய பொருட்களை வாங்கிக்கொண்டோ, அல்லது வெளியூர் செல்வதற்கு நிறைய பெட்டிகளையும் கைப்பைகளையும் சுமந்துகொண்டோ மூன்று நான்கு மாடிகள் ஏறுவோம். இதனாலெல்லாம் ஏற்படுகிற பாதிப்பு முதலில் இடுப்பைத்தான் தாக்கும். இடுப்பு பிடித்துக்கொள்ளும். அதிக வலியெடுக்கும். சுருட்டிச் சுருட்டி வலிக்கும். இவற்றில் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கும், இம்மாதிரியான வலிகள் வரவே வராமல் தடுப்பதற்கும் உடல் தளர்த்துதல் எனும் பயிற்சி ரொம்பவே உதவி செய்கிறது என்பது சத்தியமான உண்மை.

இடுப்பைப் போலவே ரொம்ப முக்கியமான, சட்டென்று உடனுக்குடன் ரியாக்ஷன் காட்டுகிற இன்னொரு உறுப்பு எது தெரியுமா? வயிறு!

எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்றாகிவிட்ட நிலையில், நமது ஆரோக்கியத்துக்கு வயிற்றின் பங்கு என்ன என்பதைப் பார்க்கலாமா?

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா