Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டலுக்கும் உயிருக்கும் உறவு இருக்கவேண்டும். குறிப்பாக, அந்த உறவு உயிர்ப்பானதாக, சிறப்புக்கு உரியதாக இருக்கவேண்டும். உடலும் உயிரும் இணைந்து ஓடினால்தான் இந்த வாழ்க்கை மிக அர்த்தம் உள்ளதாக, நிம்மதி நிறைந்ததாக இருக்கும். உடல் கிழக்கிலும் உயிர் மேற்கிலுமாக இரண்டுபட்டுப் பயணப்பட்டால், வாழ்க்கை ருசிக்காது; ரசிக்காது!

உடலும் உயிரும் பின்னிப் பிணைந்த நல்லுறவுடன் திகழவேண்டும் என்றால், மூன்று விஷயங்கள் நம்முள்ளே சிறப்பாக நடைபெறவேண்டும். ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகிய இந்த மூன்றும்தான் அமைதியான வாழ்க்கைப் பயணத்துக்கான கலங்கரை விளக்கங்கள்.

இந்த மூன்றின் செயல்பாடுகளில் சிக்கல்களும் குழப்பங்களும் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, நாமாகவே செய்துகொள்கிற சின்னச் சின்ன தவறான பழக்கங்கள். இவை பின்னாளில் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தி, இந்த மூன்று செயல்பாடுகளில் சிக்கலையும் தடுமாற்றத்தையும் விளைவிக்கும்.

அடுத்தது... வெளியில் இருந்து வரக்கூடிய சுகாதாரச் சீர்கேடுகள். அசுத்தமான நீர், மாசுபட்ட காற்று ஆகியவற்றால் விளையக்கூடியது.

நாமே ஏற்படுத்திக்கொள்கிற காரணமாக இருந்தாலும் சரி, இயற்கையாகவே சுற்றுச்சூழலால் உண்டாகிற விளைவாக இருந்தாலும் சரி... இரண்டுமே ரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தும்; வெப்ப ஓட்டத்தின் அளவைக் குறைக்கவோ கூட்டவோ செய்யும்; காற்றோட்டத்தின் அளவை குழப்பிப் படுத்தியெடுக்கும்.

இப்படியான தடைகள் இந்த மூன்று ஓட்டங்களிலும் ஏற்பட்டால், அவற்றை உடனே சரிசெய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். அப்படிச் சரிசெய்துகொள்வதற்கான சக்தியை உடனே நாம் பெற்றாகவேண்டும். அதை ஆங்கிலத்தில் 'இம்யூனிட்டி’ என்பார்கள்.

வாழ்க வளமுடன்!

சக்தியை கொஞ்சம் அதிகப்படுத்திக் கொண்டால், ஆயுசுக்கும் குறைவின்றி வாழலாம். அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன என்கிறீர்களா? அதுதான் மனவளக்கலைப் பயிற்சி. இந்தப் பயிற்சியில் உள்ள ஒவ்வொரு விஷயமும் உடலுக்கும் உயிருக்குமான பந்தத்தை அதிகப்படுத்தக்கூடியது. உடலிலும் உயிரிலும் சக்தியை முழுவதுமாகப் பரவச் செய்யக்கூடிய பயிற்சிகள் இவை.

உணவிலும் புளிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதிக புளிப்பு வயிற்றுக்கு நல்லதல்ல. அதிக புளிப்பு உணவை உட்கொள்ள உட்கொள்ள, வயிற்றில் இருந்து தொடங்கி உடலின் அனைத்து பாகங்களிலும் சிக்கல்களும் பிரச்னைகளும் மெள்ள மெள்ள வந்து எட்டிப் பார்க்கும்.

சென்னையின் மையப் பகுதியில் இருந்து அன்பர் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார். கொஞ்சம் சதை போட்ட உடலுடன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்தார். ''எப்பப் பாத்தாலும் வடையும் பஜ்ஜியுமா சாப்பிட்டுக்கிட்டே இருப்பார். முந்திரி பக்கோடான்னா கொள்ளை உசுரு இவருக்கு. வடநாட்டுலேருந்து புதுசா இங்கே வந்திருக்கிற பேல்பூரியை இவர் உறிஞ்சி உறிஞ்சிச் சாப்பிடுற விதத்தைப் பாக்கவே பயமா இருக்கும். அப்படியரு இழுப்பு இழுத்து, அந்த ரசத்தைக் குடிப்பார். அதான், இந்த ஏழெட்டு மாசத்துல உடம்பு ரொம்பவே வெயிட் போட்டுடுச்சு, சுவாமி!'' என்று அவர் மனைவி ஏக்கமும் துக்கமும் பொங்கத் தெரிவித்தார்.

வாழ்க வளமுடன்!

புளிப்பு என்பது உடலில் என்னவெல்லாம் செய்யும் என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தினேன். புளிப்பு நம் நரம்புகளுக்குள் காற்றாகப் புகுந்துவிடும் எனப் புரியவைத்தேன். 'நரம்புகளுக்குள் காற்று போல் புளிப்பு எனும் லேயர் புகுந்துவிட்டதென்றால், அங்கே ரத்த ஓட்டமும் வெப்ப ஓட்டமும் எப்படிச் சீராக இருக்கும்?’ என்று அவரிடமே கேட்டேன். அவர் மௌனமானார்.

இதனால்தான் நரம்புக் கோளாறு மற்றும் இதயத்தில் பிரச்னை எனப் பல வியாதிகள் வருகின்றன என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன். அவர் மெள்ள மெள்ளப் புரிந்து கொண்டார்.

அதன்பின், அவருக்கு இருபது நாட்களுக்கு மனவளக் கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது. ''இந்தப் பயிற்சியை தினமும் செய்வேன், சுவாமி!'' என்று உறுதியும் சந்தோஷமும் பொங்கச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆறு மாதம் கழித்து வந்தவர், சற்றே மெலிந்து காணப்பட்டார். ''சுவாமி, தினமும் காலையிலும் மாலையிலும் மனவளக் கலைப் பயிற்சியை செஞ்சுட்டு வரேன். உடலிலும் மனசிலும் நிறையவே மாற்றங்களை உணர்ந்தேன். இதுவரை 9 கிலோ குறைஞ்சிருக்கு, சுவாமி! உங்களுக்கு என் நமஸ்காரங்கள்''என்றார். அவரின் மனைவிக்கு முகம் கொள்ளாத மகிழ்ச்சி, நிறைவு!

மனவளக் கலைப் பயிற்சியில் உள்ள ஒவ்வொரு வகைப் பயிற்சியையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தால், விரைவில் பலனைப் பெறலாம்; அதை உங்களால் நன்றாகவே உணரவும் முடியும். குறிப்பாக, மொத்த உடலுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் பரிபூரண ஓய்வு தருகிற பயிற்சியைச் செய்வது, மலர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது என்பதை அந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நிச்சயமாக உணர்வீர்கள்.

மல்லாந்து படுத்துக்கொண்டு, கண்களை மூடி, கழுத்து, தோள்பட்டைகள், கைகள், இடுப்பு, மார்பு, வயிறு, தொடைப் பகுதி, முழங்கால், பாதங்கள் என ஒவ்வொரு பாகத்தையும் தளர்த்தியபடி இருங்கள். அந்தத் தளர்ச்சி அடுத்தடுத்த நேரங்களில் மிகப் பெரிய சுறுசுறுப்பையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதைப் புரிந்து வியப்பீர்கள்.

உணவில் ஆரம்பித்து நம் உடலுக்குத் தருகிற ஓய்வு வரைக்கும் எல்லாமே நம்மை மலரச் செய்பவை. முக்கியமாக நம் புத்தியையும் மனத்தையும் தாமரைப்பூவென மலர்ந்து மணம் பரப்பவல்லவை. ஆகவே, உணவில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். எளிதில் ஜீரணமாகிற உணவையே உட்கொள்ளுங்கள். அதிக எண்ணெயோ அதீத கொழுப்போ கொண்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

'சிறு வயது முதற்கொண்டு நாம் சாப்பிட்டுவரும் உணவில் இருந்தும், அந்த உணவுக்கு அடிமையாவதில் இருந்தும் சுலபத்தில் தப்பிக்க முடியுமா’ என்று எண்ண வேண்டாம். மிக எளிதில் தப்பிக்கலாம். அதற்குத் தேவை... நம் உடல் மீதும், மனம் மீதும் நாம் கொள்ளவேண்டிய பேராவல்; பெரும் அக்கறை. உடல் எனும் வாகனம் சீராக இருந்தால்தான், உயிர் எனும் ஆன்மா செம்மையாக இயங்கும்; நிம்மதியாக இருக்கும்.

உடலில் குறைகளும் நோய்களும் தோன்றத் துவங்கினால், அது ஆன்மாவின் பலத்தையே சோதிக்கும்; குலைத்துப் போடும். இம்சை செய்து, நிம்மதி மொத்தத்தையும் பறித்துக்கொள்ளும்.

நமக்கான ஒவ்வொரு பருக்கையிலும் இறைவன் நம் பெயரை எழுதியிருக்கிறான். அந்தப் பருக்கையில் இருந்து எடுத்து சில பருக்கைகளை தானம் செய்துவிட்டுச் சாப்பிட்டால், நமது மனோபலமும் கூடும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உணவை ஒழிக்கச் சொல்லவில்லை; குறைக்கத்தான் சொல்கிறேன்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா