Published:Updated:

முகவரி சொல்லும் தங்கம் !

முகவரி சொல்லும் தங்கம் !

முகவரி சொல்லும் தங்கம் !

முகவரி சொல்லும் தங்கம் !

Published:Updated:
##~##

அலுவலகச் சூழல் வித்தியாசமானது. வீட்டில், நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அலுவலகத்தில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை உண்டு; விதிமுறைகள் உண்டு. அதே நேரம், அங்கே பணிபுரிபவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.அலுவலகத்தில் சீனியாரிட்டியைப் பொறுத்து (சம்பளம் தவிர) சில கூடுதல் சலுகைகள் இருக்கும். ஆனால், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையாக நடத்துவதும், ஒரு சிலரிடம் தேவையின்றி அதிகாரங்கள் குவிந்திருப்பதும் கூடாது.

உதாரணத்துக்கு, காரை நிறுத்தத் தனி இடம், தனிப்பட்ட கான்ட்டீன், பிரத்யேக உணவு வசதிகள், தனிப்பட்ட டாய்லெட், சொகுசு வசதிகளுடன் கூடிய பெரிய கேபின் அறை போன்றவை இருக்கக்கூடாது. இப்படியெல்லாம் இருந்தால், அங்கே பணிபுரிவோர் மத்தியில் உற்சாகம் இருக்காது; அதிருப்திதான் அதிகமாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சீரான அலுவலகத்தில் ஊழியர்களின் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. ஆனால், அப்படியரு சீரான அலுவலகம் சாத்தியமில்லாத கற்பனை! அதன் வேர், பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரான்சில் இருந்தது. எல்லா மனிதர்களும் சமம் என்பது அதன் விளைவாகக் கருதப்பட்டது.

முகவரி சொல்லும் தங்கம் !

முன்பெல்லாம், மன்னர்கள் தங்களைக் கடவுளின் பிரதிநிதிகளாக அறிவித்துக்கொண்டார்கள். அதன் பிறகு, இன்னாருக்குப் பின்னால்தான் இன்னார் என்ற வரிசையில் ஒவ்வொருவரும் அடையாளப்படுத்தப்பட்டனர். அதற்குத் தகுந்தவாறு, பொருளும் சலுகைகளும் வழங்கப்பட்டன.  

சமத்துவம் என்ற லட்சியம் சில மதங்களில் வலுவாக இருக்கிறது. ஜுடாயிசத்தில் 'ஷலோம்’ என்பது, 'உன்னிடத்தில் அமைதி இருக்கட்டும்’ என்ற அர்த்தத்தில் கூறப்பட்டு வந்தது. (அதற்கு சல்யூட் அல்லது வணக்கம் என்று பொருள் அல்ல!). கடவுளுக்கு முன்னால் எல்லோரும் சமம்; கடவுளுக்கு மட்டுமே வணக்கம் செலுத்த வேண்டும்; வேறு எவருக்கும் அல்ல என்பதை வலியுறுத்தவே, ஒன்றாக வட்டமாக அமர்ந்து, ஒரே தட்டிலிருந்து உணவை உண்ணும் பழக்கமும் பின்பற்றப்பட்டது.

ஆனால், இயற்கையில் எல்லாமே உயர்வு - தாழ்வு வரிசைப்படிதான் இருக்கிறது. பலமுள்ளது அல்லது புத்திசாலித்தனமுள்ளது முதலில் உணவை உண்ணுகிறது. 'பலமுள்ளதே பிழைக்க முடியும்’ என்ற கொள்கைப்படி, வலுவாக இருப்பதற்கும், புத்திசாலித்தனமாக இருப்பதற்கும் எல்லோரும் போட்டியிடுகிறார்கள். அதனால், ஒரு வரிசைக்கிரமம் கடைப்பிடிக்கப்பட்டது. உயரமான மரம்தான் அதிக சூரிய வெளிச்சத்தைப் பெறும். ஓர் ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கத்துடன் தன் இரையைப் பகிர்ந்துகொள்ளாது.

ஆக, இந்த மேலிருந்து கீழான வரிசைப்படுத்துதல் (ஹைரார்க்கி முறை) என்பது இயற்கையானது. சமத்துவம் என்பது மனிதன் வகுத்த திட்டம். அது, ஒரு கனவு; ஒரு தேடல்!

ஒரு நிறுவனத்தில் எத்தனை பேர், தங்களை மீறி மற்றவர்கள் நடப்பதைச் சகித்துக்கொள்வார்கள்? எத்தனை பேர் தங்கள் வசதிகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்வார்கள்?

எல்லோருக்கும் தனித் தனி கேபின்கள் தேவையா, அல்லது திறந்த கூடமாக இருந்தால் போதுமா?  

கேபின்களுக்கு நிறையச் செலவாகும்; அதனால், நிதிப் பொறுப்பில் இருப்பவர் திறந்த கூடம் இருப்பதையே வரவேற்பார். அதேநேரம், திறந்த அலுவலகச் சூழல் என்றால், ஒழுங்கும் கட்டுப்பாடும் தேவை. அங்கே, மெதுவாகத்தான் பேச வேண்டும். தனியாக ஒரு கான்ஃப்ரன்ஸ் அறை தேவைப்படும். அவசரகதியான சில தருணங்களில், 'நான் முன்பே புக்கிங் செய்திருந்தேனே...’ என்பது போன்ற பிரச்னைகள் தலைதூக்கும். இதில், வலுத்தவர் சொல்லுக்கே மரியாதை!

நாமெல்லோரும் கார்ப்பரேட் மிருகங்களாக, 'பெரிதான, விரைவான, வலுவான’வர்களாகவே இருக்க விரும்புகிறோம். சிறந்தவருக்கே தங்கம் கிடைக்கிறது. நமக்கும் தங்கம் வேண்டும். அலுவலகத்தில் நமக்கு உட்கார நல்ல இடம் கிடைக்க வேண்டும். தனி கேபின் இருந்தால் நல்லது. நாம் அமரும் நாற்காலி விலை உயர்ந்ததாக, சொகுசானதாக இருக்க வேண்டும்.

முகவரி சொல்லும் தங்கம் !

ஆனால், தலைமைப் பண்புக்கு இவையெல்லாம் தேவையா?

இந்துப் புராணங்களில், கடவுளர்களுக்கெல்லாம் கடவுளான ஆதிசிவன் உயர்வு- தாழ்வு போன்ற நிலையைக் கருத்தில் கொள்ளாதவர்.ஆனால், தட்ச பிரஜாபதியோ இந்த மேல்-கீழ் வரிசையை ஆதரித்தான். அதனால், இருவருமே மோதிக்கொண்டனர்.

சிவபெருமான் எதிலும் பற்று வைக்காமல், எல்லாப் பொருள்களின் மீதுமான ஆசையை விட்டொழித்தவராக இருக்கிறார். பாம்புகள் தன் மீது ஊர்ந்து சென்று, தலையில் சுவாதீனமாக சுற்றிக்கொள்வது குறித்து அவர் அலட்டிக்கொள்வதில்லை. மிருகத்தின் தோலை உடுத்திக்கொள்வதில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. தங்கமும் வைரமும் அவருக்குத் தேவை இல்லை. உடம்பில் பூசிக்கொள்ள வெறும் சாம்பல் மட்டுமே அவருக்குப் போதுமானது! ஆனாலும், அவரே கடவுளர்களின் தலைவர்.

எனில், தலைமைப் பண்பை அடைய பிரத்யேகச் சலுகைகள் அவசியமானவையா? நம்மால் இந்த ஆசைகளை எல்லாம் அடக்கிவிட முடியாதா? முடியும். நாம் மனசு வைத்தால் முடியும். ஆசைகளை அடக்கியாள்வது போன்ற அற்புதமான நிலை வேறு இல்லை. அப்படி நாம் அற்புதமான மனிதர்களாக மாறும்போது, சமமான, சீரான அலுவலகம் சாத்தியம்.

அதுவரை, நாம் விரும்பும் கனவாகவே அது இருக்கும். அந்தக் கனவு மெய்ப்படும் காலமும் ஒரு நாள் வரும். அதுவரை, ஒரு நிலைக்குக் கீழ் இருப்பவர்கள் பல்லைக் கடித்துச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism