Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

Published:Updated:
வானம் தொடுவோம்!
வானம் தொடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ம்புப் படுக்கையில் பீஷ்மர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த காட்சி, குரு க்ஷேத்திரப் போர்க்களம் முழுக்க ஒருவித சோக அலையை ஏற்படுத்தி இருந்தது. உத்தராயனம் வரும்வரை, அதாவது... சூரியன் வட திசையில் பயணம் செய்ய முற்படும் காலம் வரும் வரை உயிரை துறக்க மறுத்துவிட்டார் பீஷ்மர். ஒருவேளை தட்சிணாயனத்தில்... சூரியன் தெற்கே பயணம் செய்யும் காலத்தில், தென் திசை பித்ருக்களோடு சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் அவ்வாறு தீர்மானித்திருக்கலாம். இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால்... பீஷ்மர் மேல் பித்ருக்கள் கோபமாக இருக்கலாம் என்பதால், அவர்களை அவர் சந்திக்க விரும்பவில்லை.

யார் இந்த பித்ருக்கள்? அவர்களுக்கு பீஷ்மர் மீது ஏன் கோபம்?

மறைந்த நம் முன்னோர்கள்தான் பித்ருக்கள். பீஷ்மரைப் பொறுத்தவரை, அவர் பிரம்மசாரியாக இருந்துவிட்டபடியால் வாரிசுகள் எவரையும் பெறவில்லை. அதன்மூலம் வாரிசுகள் மீண்டும் பிறவியெடுக்க அவர் வாய்ப்பு அளிக்கவும் இல்லை. இதனாலேயே பீஷ்மர் மீது பித்ருக்களுக்கு அப்படியரு கோபம்!

நம் இந்து புராணங்களில் பித்ருக்கள் பற்றிய பல தகவல்கள் உண்டு.

மறுபிறவி நம்பிக்கையின்படி, ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடலின் ஒரு பகுதியில் தீர்க்காத கடன்கள் பற்றிய நினைவுகள் இருந்துகொண்டே இருக்கும்.  இந்தப் பகுதி, வைதரணி நதியைக் கடந்து, இறந்தவர்கள் வசிக்கும் எமலோகத்தில், பித்ருக்களில் ஒருவராக இருக்க வேண்டும். அதன்படி, வைதரணியைத் தாண்ட முடியவில்லை என்றால், இறந்தவர்கள், நாம் வாழும் உலகத்திலேயே பிரேதமாக- பிசாசாகத் தங்கிவிடுகிறார்கள். வைதரணி நதியைத் தாண்ட வகை செய்யும் வரையில் அவர்களின் நிலை அப்படித்தான் என்பது நம்பிக்கை. இந்து சமுதாயத்தில் அனுசரிக்கப்படும் சிராத்தத்தின் அடிப்படையும் இதுதான்!

சிராத்தம், பித்ருக்களாகிய முன்னோர்களுக்காக, அவர்கள் மறைந்த ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுகின்றது. என்றாலும், அனைவராலும் அதைச் செய்ய முடியாமல் போய்விடுகிறது. பெரும்பாலும், விநாயகர் பூஜை முடிந்த பத்து நாட்களுக்கும், துர்கா பூஜை முடிந்த பத்து நாட்களுக்கும் இடையே மொத்தமாக எல்லா பித்ருக்களுக்கும் சிராத்தம் செய்துவிடுகிறோம். அந்த நேரத்தில்தான் பித்ருக்கள் நம்முடன் நெருங்கி இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை.

வானம் தொடுவோம்!

பித்ருக்கள் மீது மதிப்பு வைத்திருந்தா லும் அவர்களைப் பற்றிய பயம் இருக்கத் தான் செய்யும். அதேநேரம், நாம் அவர்கள் மீது அன்பும் மரியாதையும் கொள்கிறோம். அதனால்தான், முன்னோர்களின் ஈமச் சடங்குகளின்போது அவர்களுக்கு பண்டங்கள் படைக்கிறோம். இந்துக்களைப் பொறுத்தமட்டில், அதை வலதுகரத்தால் அவர்களுக்கு பரிமாறு வதே சரியான வழக்கம். மணிக்கட்டை சற்றே வளைத்து, எதிர் கடிகாரச்சுற்று முறையில் பரிமாறுவார்கள். இது அன்பையும் பாசத்தையும் நம்மோடு இணைத்துக் கொள்வதைக் காட்டுகிறது.

பித்ருக்களுக்கு வலது கரத்தால் பரிமாறுவது மரியாதையை காண்பிக்கிறது.  ஆனால், மணிக்கட்டை வளைத்து, உடலிலிருந்து தள்ளி நின்று, கடிகாரச் சுற்றுப்படி கொடுப்பது... அவர்கள் நாம் வாழும் உலகத்துக்கு வெளியே உள்ள இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காண்பிக்கிறது (இந்தக் காரியங்களைச் செய்யும்போது, பூணூல் அணிந்திருந்தால், அதை இடது தோளுக்குப் பதில் வலது தோளுக்கு மாற்றிக்கொள்வார்கள்).

இப்படியாக, முன்னோர்களுடனான நம் தொடர்பு, அவர்கள் மறைந்த பிறகும் ஏதாவது ஒருவகையில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இதையே நிர்வாக இயலில் ஒப்பிட்டுப் பாருங்கள். மூதாதையர் இடத்தில், நம் நிறுவனத்தைத் துவக்கியவர்களை வைத்துப் பார்ப்போம். அவர்கள், எந்த நோக்கத்துக்காக தங்கள் நிறுவனத்தை உருவாக்கி, எவ்வாறு தம் வணிகத்தை நேர்மையாக நடத்தி வந்து, அடுத்த தலைமுறையிடம் அதை ஒப்படைத்தார்கள் என்பதையும் நினைத்துப் பார்ப்போம். மூதாதையரின் அந்த நோக்கம் நிறைவேற, நாம் சிரத்தையுடன் செயல்படும்போது அவர்களின் மனம் நிறைவு அடைகிறது.

பல இந்திய நிறுவனங்களில், அதை நிறுவியவரின் படத்தை மாலையிட்டு மாட்டியிருப்பார்கள். இன்னும் சில நிறுவனங்களில் பெற்றோரின் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். அவை வெறும் சடங்குக்காகவோ, அலங்காரத்துக்காகவோ மாட்டப்பட்டவை அல்ல. அவர்கள் வகுத்த பாதையில் நாம் வழுவாமல் செல்கிறோமா என்பதை அவர்கள் கண்காணிக்கிற மாதிரி அமைந்தவை அந்தப் படங்கள். அமானுஷ்யமாக அவர்கள் அங்கே இருந்து ஆசி வழங்குவதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

முன்னோர்கள் மறைந்தாலும், அவர்கள் நம் ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை நாம் நட்டாற்றில் விட்டுவிடவில்லை. இது, நாம் எல்லோரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய வாழ்க்கைப்  பாடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism