நாம் எல்லோரும் அதிகாலை எழுந்தது முதல், வேலைக்குச் சென்று திரும்புவது வரை, ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதாகத் தோன்றினாலும், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது.

அதிகாலையில் வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுகிறவரைக் கவனித்திருக்கிறீர்களா? தினசரி பேப்பரை டெலிவரி செய்யும் இளைஞனைக் கவனித்திருக்கிறீர்களா? பள்ளிக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ, வேன் மற்றும் பஸ் டிரைவர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? இவர்களிடம் எந்நேரமும் ஒருவித வேகம் இருக்கும். அடுத்தடுத்த வேலைக்கு எப்போதும் ஆயத்தமாகிக்கொண்டே இருப்பார்கள்.

அதேபோல், காலை 6 மணிக்கு எழுந்திருந்து, 7 மணி வரை பேப்பர், பத்திரிகையெல்லாம் படித்துவிட்டு, ஏழே கால் மணிக்குக் குளித்து, 8 மணிக்கு பேருந்து அல்லது ரயிலைப் பிடித்து 9 மணிக்கு

அலுவலகத்துக்கு வருபவர்களும் இருக்கிறார்கள். இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்பவர்களும் உண்டு.

அவ்வளவு ஏன்... இரு சக்கர வாகனமே அலுவலகம் என்று சொல்லும் அளவுக்கு, வண்டியில் ஃபைல்கள், ஃபாரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, இந்தப் பகுதி, அந்த ஏரியா, ஏஜென்ட், கஸ்டமர் என அலைவார்கள் சிலர். வழியில் எங்கேனும் மோர், இளநீர் அல்லது ஒரு டீயைக் குடித்துவிட்டுத் தங்கள் பொழுதைக் கழிப்பவராக இருப்பார்கள் அவர்கள்.

காலையில் கிளம்பி அலுவலகத்துக்கு வந்து, தனக்குரிய நாற்காலியில் அமர்ந்து விட்டால், இந்த உலகம் இருப்பதே தெரியாமல் இயங்குகிற அன்பர்களும் உண்டு. வங்கிகளில் பணிபுரியும் அன்பர்கள் பலரும் அப்படித்தான் இயங்குகின்றனர்.

இப்படிக் காலை எழுந்தது முதல் இரவு வீட்டுக்குத் திரும்புவது வரை, நாம் வேலை செய்வதிலும் பழக்க வழக்கங்களிலும் எத்தனையோ மாறுபாடுகள் இருக்கின்றன என்பது புரிகிறதுதானே?

ஆனால், உடலாலும் மனத்தாலும் மிகுந்த அயர்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்புவதில் மட்டும் அனைவரிடமும் ஒற்றுமை இருப்பதாக உணருகிறேன் நான்.

வங்கியில் பணிபுரியும் அன்பர் ஒருவர் சென்னையில் இருந்து வந்திருந்தார். 'கேஷியர் உத்தியோகம் சுவாமி, எனக்கு! அதனால காலைல வந்து என் சீட்டுல உக்கார்ந்தா, இடையில டீ சாப்பிடுறதுக்காக எழுந்திருப்பேன். சில நேரம், அந்த டீ கூட சீட்டுக்கே வந்துடும். அப்புறம் மதிய உணவுக்காக எழுந்திருப்பேன். அதை விட்டா, சாயந்திரம் வரைக்கும் பணத்தை எண்ணி, தனித்தனியாப் பிரிச்சு, கட்டுகளாக்கி, மேனேஜர்கிட்ட கணக்குக் காட்டி, உள்ளே லாக்கர்ல வைக்கிற வரைக்கும் தேவையே இல்லாம எனக்குள் ஒருவித டென்ஷனும் பரபரப்பும் ஓடிக்கிட்டிருக்கும்.

எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, முதுகுத் தண்டே ஒடிஞ்சு விழற மாதிரி வலி பின்னியெடுக்கும். தலை பாரமா இருக்கும். தலைவலி தைலம் தடவினாலோ அல்லது மாத்திரையை முழுங்கினாலோதான் தலைவலி போகும். இதுலேருந்து ஒரு தீர்வு கிடைச்சுதுன்னா நல்லாருக்கும் சுவாமி!'' என்றார்.

ஒரு இடத்தில், ஒரே நாற்காலியில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் வருகிற பிரச்னை இது. கொஞ்சம் கவனித்துச் செயல்பட்டால், இந்த வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

திருப்பூரில் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அன்பர் ஒருவரும் அன்று வந்திருந்தார்.

''சுவாமி, வீட்டில் இருந்து கம்பெனி, கம்பெனியில் இருந்து குடோன், குடோனில் இருந்து கடைகள்னு சரக்கை அனுப்பிச்சிட்டு, டூவீலர்ல அலையற வேலை சுவாமி என்னுது! காலைல வண்டியை எடுத்தா, நைட் திரும்பும்போது எப்படியும் குறைஞ்ச பட்சம் 300 கிலோமீட்டர் தூரமாவது வண்டியிலயே சுத்தியிருப்பேன். சுத்தும்போது ஒண்ணும் தெரியாது. ஆனா, வீட்டுக்கு வந்து, சாப்பிட்டுப் படுக்கும்போது, முதுகும் காலும் அப்படி விண் விண்ணுனு தெறிக்குது, சுவாமி!

ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கிட்டே இருக்கறதாலயும், பிரேக்ல கை வைச்சுக்கிட்டே இருக்கறதாலயும் ரெண்டு கை விரல்கள்லயும் சரியான வலி. இதுக்கு ஏதாவது பயிற்சி இருக்குதா சுவாமி?'' அந்த அன்பர் கேட்டார்.

ஆக, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தாலும் பிரச்னை; வண்டியை எடுத்துக் கொண்டு நாலைந்து இடங்களுக்குச் சென்றாலும் வேதனை! வழிகள் வெவ்வேறாக இருந்தாலும், வலிகள் மட்டும் முதுகுத் தண்டு, கால்கள், கைகள் என்று குறிப்பிட்ட சில இடங்களில் மையம்கொண்டுவிடுகின்றன.

அந்த இருவருக்கும் மனவளக்கலைப் பயிற்சியில் சொல்லித் தரப்படும் கைகள் மற்றும் கால்களுக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மகராசனப் பயிற்சியும் அளிக்கப்பட்டது; நரம்பு மற்றும் தசை நார் மூச்சுப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. பிறகு, நிறைவாக உடலைத் தளர்த்துகிற பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

பத்து நாட்களுக்குப் பிறகு, டெக்ஸ்டைல் அன்பர் திருப்பூரிலும், வங்கி ஊழியர் சென்னையிலுமாகப் பயிற்சிகள் எடுத்துக்கொள்வதற்கு, அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அறிவுத்திருக்கோயிலை அணுகும்படி வலியுறுத்தப்பட்டது. அங்கே காலையும் மாலையும் சென்று, பயிற்சிகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதையடுத்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு, திருப்பூர் அன்பர் வந்து என் எதிரில் அமர்ந்தார். அவர் முகத்தில் அப்படியரு விடுதலை உணர்வு.

''சுவாமி, இப்போதெல்லாம் எத்தனை கிலோ மீட்டர் வண்டியில் சுற்றினாலும் வலியே இருப்பதில்லை சுவாமி! காலையில் 5 மணிக்கு எழுந்தவுடன் முதல் வேலையாக பயிற்சியைச் செய்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்குச் செல்கிறேன். அதேபோல், இரவு எந்நேரமானாலும் படுக்கச் செல்வதற்கு முன்னதாக, ஒரு பதினைந்து நிமிடம் பயிற்சியைச் செய்துவிட்டுத்தான் தூங்கப் போகிறேன். காலையில் செய்வதால், உடலில் சுறுசுறுப்பும், இரவில் செய்யும்போது ஆழ்ந்த தூக்கமுமாக உடலும் மனமும் ஒருசேர புத்துணர்ச்சியாக இருக்கிறது சுவாமி!'' என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

ஒரு டிசம்பர் மாத விடுமுறை காலத்தில், சென்னையில் உள்ள வங்கி ஊழியர் தன் குடும்பத்தாருடன் வந்தார். ''முன்னெல்லாம் ஒரு இடத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்தாலே அயர்ச்சியாகிவிடும் சுவாமி! ஆனால், இப்போது ஆணி அடித்தாற்போல எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார முடிகிறது. அப்படி உட்காருவதால் எந்த வலியோ அயர்ச்சியோ வருவதே இல்லை. காலையும் மாலையும் விடாமல் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். அப்படி ஒரேயருநாள் பயிற்சி செய்யமுடியாமல் போனாலும், மனத்தளவில் சோர்வு தட்டி, அயர்ந்துபோவதை நன்றாகவே உணருகிறேன், சுவாமி. அதனால், மழையோ வெயிலோ, குளிரோ... எதுவானாலும் தினமும் இரண்டு வேளையும் மனவளக் கலைப் பயிற்சி செய்யாமல் இருப்பதே இல்லை. இன்றைய காலத்துக்குத் தேவையான, அவசியமான இந்தப் பயிற்சியை மனைவியும் குழந்தைகளும் செய்யவேண்டும் என்றுதான் ஓடோடி வந்தேன். அவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள், சுவாமி!'' என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

உடலாலும் புத்தியாலும் நாம் என்ன வேலை செய்தாலும் சரி... மனவளைக்கலை யோகா பயிற்சியை எடுத்துக்கொண்டால், செய்யும் வேலையில் எப்போதும் பிரகாசிக்கலாம்; அயர்ச்சியின்றி வாழலாம்!

- வளம் பெருகும்

தொகுப்பு: ஆர்.கே.பாலா