Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

Published:Updated:
வானம் தொடுவோம்!
##~##

ன் முன்பு வந்து அமர்ந்த அந்தச் சிறு தொழிலதிபரின் முகத்தில் நிறையவே வாட்டம் தெரிந்தது. தொழில் போட்டிதான் அவரது வாட்டத்துக்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, அதற்கான காரணத்தைக் கேட்டேன். நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அவர் சொன்னார்... 'இன்ஜினீயரிங் பொருட்களைத் தயாரிக்கும் மத்தியதர நிறுவனம் எங்களுடையது. பொருளாதார மந்தம் எங்களை மிகவும் பாதித்துவிட்டது. அதோடு, சந்தையில் நாளுக்குநாள் சீன நாட்டின் தயாரிப்புகள் ஏகமாக அதிகரித்து வருகின்றன. போட்டி தாக்குப்பிடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வால் தயாரிப்புச் செலவுகள் கூடிக்கொண்டே போக, இரண்டு வருடங்களாக லாபமும் குறைந்துகொண்டே வருகிறது. போதாக்குறைக்கு, பயிற்சிபெற்ற முக்கிய ஊழியர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எனக்கு பிஸினஸ் ஆர்வம் சுத்தமாகப் போய்விட்டது. இதிலிருந்து விலகவோ அல்லது இதையே மீண்டும் உயிர்ப்பிக்கவோ, ஒரு தெளிவான முடிவு எடுக்க எனக்கு உதவுங்கள்' என்று பரிதாபமாகக் கேட்டார் அவர்.

அவர் இருந்த அப்போதைய மனநிலையில், அவருக்கு நீண்ட விளக்கம் தர வேண்டியதாயிற்று.

நான் சொன்னேன்... 'உங்களுக்கு ஒரு முடிவெடுக்க நான் உதவுகிறேனோ இல்லையோ, நீங்கள் ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டீர்கள். அதாவது, சந்தையே உங்களுக்கான முடிவை எடுத்துவிட்டது; அல்லது, முடிவை எடுக்கவில்லை. எப்படி வேண்டுமானாலும் இதை

வானம் தொடுவோம்!

வைத்துக்கொள்ளலாம். அது நீங்கள் மார்க்கெட்டை அவதானிப்பதைப் பொறுத்தது. ஒருவேளை, உங்கள் தயாரிப்புகளையும், சேவைகளையும், யோசனைகளையும் பெற வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்கலாம். நீங்கள்தான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.  

இப்போதைக்கு நீங்கள் ஓய்ந்து போயிருக்கலாம். இந்த நிலைமையிலிருந்து மீண்டு வர, ஒரே ஒரு தீர்வு மட்டும்தான் இருக்க முடியும் என்றில்லை. நுணுக்கமாக ஆராய்ந்தால் வேறு சில தீர்வுகளும் தென்படக்கூடும். எல்லாமே நீங்கள் நிலைமையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. நீங்கள் ஏதேனும் ஒரு முடிவை எடுத்து, அதையே தீவிரமாகப் பின்பற்றலாம். அல்லது, முடிவில்லாத அலசல்களில் ஈடுபட்டு, அதிலேயே உங்களையே மூழ்கடித்துக் கொள்ளலாம். தவிர, 'போங்கடா’ என்று எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு, கவலைகளை ஒரு மூட்டையாகக் கட்டிப் பரண் மீது போட்டுவிட்டு, நிம்மதியாகத் தூங்கப் போய்விடலாம்.

நீங்கள் இப்போது இருக்கும் நிலைமை, ஆதி- அந்தம் இல்லாத விஷ்ணுபகவான் ஆதிசேஷன் மீது படுத்துக்கொண்டிருப்பதைப் போன்றது. உங்களைச் சுற்றி, சந்தை வாய்ப்புகள் எனும் பாற்கடல் பரந்து விரிந்து கிடக்கிறது. அது என்றைக்கும் இருக்கும். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், அது அப்படியே இருந்துகொண்டேதான் இருக்கும்..'' என்று நான் சொன்ன விளக்கம் அவருக்குப் புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை.

அதனால் அவருக்கு நான் மறுபடியும் நீண்ட ஆலோசனை சொல்ல வேண்டியது இருந்தது. தொழிலைவிட்டு ஒதுங்குவதாக முடிவு செய்தால், எப்படிப்பட்ட அடுத்தகட்ட வாழ்க்கையைத் தேட வேண்டியது இருக்கும் என்று விரிவாக எடுத்துச் சொன்னேன்.

'பிஸினஸ் என்றால், அதன் உரிமையாளர்தான் முடிவு எடுக்கிறார். மார்க்கெட் ஏறலாம்;  இறங்கலாம். போட்டியாளர்கள் வரலாம்; போகலாம். ஆனால், பிஸினஸ் என்னும் கப்பலை ஓட்டிச் செல்லும் மாலுமி நீங்கள்தான். உங்கள் கப்பல் வழி தெரியாமல் தட்டுத் தடுமாறுகிறது என்று தெரிந்துகொண்டுவிட்டால், ஊழியர்கள் தப்பித்து வெளியே செல்லத்தான் முனைவார்கள். அவர்களுடைய கவலைகளை எண்ணிப் பாருங்கள். உங்கள் கவலையிலேயே நீங்கள் மூழ்கிப் போயிருப்பதால், அவர்களின் பயமும் பிரச்னைகளும் அவர்கள் படும்பாடும் உங்களுக்குத் தெரிவதில்லை. அதுதான் உண்மையான பிரச்னை! நீங்கள்தான் அதற்குக் காரணம்; வெளியே இருக்கிற உலகம் அல்ல.

சரி... நீங்கள் இந்த பிஸினஸை விட்டுவிட்டால், பிறகு எங்கே போவதாக உத்தேசம்?  வேறு ஒரு பிஸினஸை ஆரம்பிப்பீர்களா? அல்லது, வேலை தேடுவீர்களா? இந்தத் தேடல் யுத்தம் மறுபடியும் தொடரலாம். வாழ்க்கையில் எதற்கும் உத்தரவாதம் இல்லை; எதுவும் நிரந்தரம் இல்லை. அதனால்தான் எல்லோரும் ஒரு தலைவரைத் தேடிப் போகிறார்கள். அதாவது, ஒரு எஜமானனை; பிறருக்கு நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் ஒரு விஷ்ணுவை.

இப்போதைய உங்களது தேவை... நீங்கள் உங்களுக்குள்ளேயே இருக்கும் விஷ்ணுவை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். ஆமாம்; அத்தனைப் பரந்து விரிந்த பாற்கடலில், பாம்பையே படுக்கையாக்கிப் பள்ளிகொண்டு இருக்கும் மகாவிஷ்ணு உங்களுக்குள்ளேயே இருக்கிறார். அவரைக் கண்டுபிடியுங்கள். இப்போது இருக்கும் யுகத்துக்கு ஏற்ற மாதிரி அவரைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் பாம்பிடமிருந்து தப்பிக்க முடியும்; பாற்கடலில் நீச்சலிட்டுத் தலை நிமிரவும் முடியும்!' என்று நான் சொன்னது, அவருக்குள் சலனமற்ற ஒரு தீர்வைத் தந்திருக்க வேண்டும்.

நம்பிக்கையோடு எழுந்தவர், கண்களில் ஒளியோடு, 'நிச்சயம் ஜெயித்துக் காட்டுவேன்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். சிறிய இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் சாதிப்பார் என்றே எனக்கும் தோன்றியது.