Published:Updated:

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

வானம் தொடுவோம்!

Published:Updated:
வானம் தொடுவோம்!
##~##

க்தர் ஒருவர் கோயிலுக்குப் போனார். அங்கே விசித்திரமான காட்சி ஒன்றைக் கண்டார். கோயில் கருவறை வாசல்கதவின் மேலே நட்ட நடுவில், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓர் உருவத்தின் தலை, பக்தர்களைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டிருந்தது. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் பக்தருக்கு ஏற்பட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அது என்னவாக இருக்கும்?’ என்று மனத்துக்குள் கேள்வி பிறந்த மாத்திரத்தில், அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆம்... அவர் கேள்விக்கான பதில் கோயில் கருவறைக்குள் இருந்து அசரீரி வாக்காக வெளிப்பட்டது.

''நான் பார்க்க முடியாததை எல்லாம் அவர் (விசித்திர உருவம்) பார்க்கிறார். பக்தர்கள் என்னிடம் காண்பிக்க விரும்பாததை எல்லாம் அவரால் பார்க்க முடியும். கோயிலுக்கு வருபவர்களின் பக்தியை மட்டும்தான் நான் பார்க்கிறேன். ஆனால் அவரோ, பக்தர்களின் மனத்தில் என்ன இருக்கிறது என்றும் பார்த்துவிடுகிறார். இறுதியில் அவர் என்ன பார்க்கிறாரோ, அதுதான் முக்கியமானது!'' என்றது அசரீரி

வானம் தொடுவோம்!

வாக்கு. இந்த வாக்கு பக்தருக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சகுண பிரம்மத்தையும், நிர்க்குண பிரம்மத்தையும் அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார். சகுண பிரம்மம் என்பது, உருவமாகப் பார்க்க முடிகிற தெய்விகம்; நிர்க்குண பிரம்மம் என்பது, உருவமாகப் பார்க்க முடியாத தெய்விகம்.

பக்தர் அதுநாள்வரையில், கோயிலில் உள்ள கடவுளைப் பார்ப்பதுதான் சகுண பிரம்மம் என்றும், அவர்தான் நிர்க்குண பிரம்மத்தை அடைய வழிகாட்டுவார் என்றும் நினைத்திருந்தார். ஆனால், அவரது எண்ணம் அசரீரி வாக்கால் மாறிவிட்டது. 'அந்தக் கடவுளே நிர்க்குணப் பிரம்மத்தின் உதவியை நாடுகிறாரே...’ என்று எண்ணினார் அவர். இந்த ஆன்மிக தத்துவத்தை வியாபார வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஒரு நிறுவனம் எப்படி நடக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் வியாபாரம் இருக்கிறது. ஆனால், இதில் ஊடாக மறைந்திருக்கும் அம்சம் என்பது நம்பிக்கை. துரதிர்ஷ்டவசமாக நம்பிக்கையைப் பார்க்கமுடியாது; அதை அளவிடவும் முடியாது. எனவே, அதை நிர்வகிக்கவும் முடியாது. ஆனால், ஒரு நிர்வாகத்தின் வெற்றிக்கு நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கைதான் நடத்தைக்கு வழி வகுக்கிறது. அதற்காக நடத்தையை நம்பிக்கை என்று கூறிவிட முடியாது.

உங்களை மதிக்கிறவர் உங்களுக்கு மரியாதை காண்பிப்பார். ஆனால், உங்களுக்கு மரியாதை காண்பிப்பவர் எல்லாம் உங்களை மதிக்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டுவிட முடியாது. மரியாதை காண்பிப்பது என்பது பண்பு அல்லது நடத்தையில் சேர்த்தி. அதை நேரிடையாகக் காண முடியும். மதிப்பு வைப்பது என்பது நம்பிக்கை போன்றது. அதைக் காண முடியாது. நிறுவனம் சகுண பிரம்மத்துடன் நின்றுவிடுகிறது.ஆனால், எல்லோரும் விரும்புவதோ நிர்க்குண பிரம்மத்தை!

சந்திரசேகர் 25 வருடங்களாக ஒரு பெரிய ஓட்டலை நடத்தி வருகிறார். வரும் வாடிக்கையாளர்களை வரவேற்பது, அவர்களை மகிழ்ச்சியுடன் திரும்ப அனுப்பி வைப்பது, டாய்லெட்டுகளைச் சுத்தமாக வைத்திருப்பது, பாத்திரங்கள் கழுவிவைப்பது, துணிகளைச் சலவைக்குக் கொடுப்பது, தொழிலாளர் பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பது... என, வெகு நீண்ட நடைமுறையை அவர் பின்பற்றியாக வேண்டும். இதை எல்லாம் கவனிக்க, திறமையான அதிகாரிகள் இருந்தாலும், அத்தனை பெரிய ஓட்டலில் கண்ணுக்குத் தெரியாத, வெளிப்படையாகக் கவனிக்க முடியாத அளவுகோல்கள் சில இருக்கத்தான் செய்தன. ''அதெல்லாம் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. எப்படி

வானம் தொடுவோம்!

நிகழ்கிறதென்றே புரியவில்லை. ஒரே மாயாஜாலமாக இருக்கிறது. நடைமுறையில் காண முடியாததைக் கண்டு, அதைத்தான் வேண்டும் என்று கேட்கிறார் வாடிக்கையாளர். அதை எங்களால் தரவும் முடிகிறது. மொத்தத்தில், நடைமுறை என்பது சுத்தம்தான். எல்லாப் பணிகளிலும் இருக்கவேண்டியது சுத்தம்தான். புறச் சுத்தம் மட்டுமல்ல; கைச்சுத்தம், வாய்சுத்தம், செயல்சுத்தம் எல்லாமும்தான்!'' என்பது சந்திரசேகரின் கணிப்பு.

நடைமுறை என ஒன்று இல்லாமல் வாழ முடியாது. இன்ன வேலையை இப்படித்தான் முடித்தாக வேண்டும் என்று ஒரு நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், அது மட்டும் போதுமா? மக்கள் நாம் செய்யும் வேலையில் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், சாதனை கைக்கு எட்டாமலே போய்விடும். நம்பிக்கை ஏற்படுத்தாத வெறும் நடைமுறையால் எதையும் சாதித்துவிட முடியாது.

சந்திரசேகருக்கு உணவு விஷயத்தில் மட்டும்தான் மாயாஜாலம் தெரிகிறது. ''எப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை; மக்கள் நம்மை விரும்பி வருகிறார்கள். காரணம், நாம் படைக்கும் உணவு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது!'' என்று நம்புகிறார். ஒரே மாதிரி இடுபொருட்களைக் கொண்டு, இரண்டு சமையல்காரர்கள் ஒரே மாதிரியான சுவையைத் தரும் உணவைத் தயாரித்துவிட முடியாது. ஒருவரின் சமையல் ஒரு மாதிரி இருக்கும்; இன்னொருவரின் சமையல் வேறு மாதிரி இருக்கும். அதுதான் ஒரு சமையல்காரரை வேறு ஒரு சமையல்காரரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்த உண்மை சந்திரசேகர் கண்ணுக்குத் தெரியவில்லை.

நடைமுறைதான் சகுண பிரம்மம். அதைச் சொல்லிக் கொடுக்கலாம். வற்புறுத்திக் கடைப்பிடிக்கச் செய்யலாம். நடைமுறையில் மாற்றம் கொண்டுவர முடியும். ஆனால், நம்பிக்கையை உண்டாக்க இன்ஸ்பிரேஷன் என்கிற தூண்டுதல் தேவை. சந்திரசேகருக்கு சகுண பிரம்மம் தெரிந்தது. நிர்க்குண பிரம்மம் தெரியவில்லை. இது, சந்திரசேகருக்கு மட்டுமல்ல; நம்மில் பலருக்கும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism