Published:Updated:

அன்பே தவம்! - 4

வளமுடம் வாழலாம்..! ஆர்.கே.பாலா

அன்பே தவம்! - 4

வளமுடம் வாழலாம்..! ஆர்.கே.பாலா

Published:Updated:

ல்லோரும் பழக்கவழக்கங்களுக்கு ஆளாகிறோம். ஒருகட்டத்தில், அந்தப் பழக்கத்தில் இருந்து மீளமுடியாத நிலையும் ஏற்பட... தவித்துப் போகிறோம்.

காலையில் எழுந்ததும் காபியோ டீயோ குடித்தால்தான் பலருக்குப் பொழுதே விடியும். செய்தித்தாளின் வருகைக்காக வீட்டுக்கும் வாசலுக்குமாக நூறு நடை நடந்து, பேப்பர்காரப் பையனின் சைக்கிள் மணியோசைக்காகக் காத்திருப்போம்.

செய்யும் வேலை, செல்லும் வாகனம், சாப்பிடும் உணவு, தூங்குகிற இடம் என எல்லாமே பழக்கவழக்கங்களால் செலுத்தப்படும் வாழ்க்கைதான் இங்கே பலருக்கு வாய்த்திருக்கிறது. நமது பழக்கவழக்கம் நல்லதோ, கெட்டதோ... எதுவும் பழக்கம் என்றாகி, அதற்கு நாம் அடிமையாகிவிட்டால் பிரச்னையும் குழப்பமும் நிச்சயமாக உண்டு என்பதை மறுக்கமுடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருமபுரி மாவட்டம் அஜ்ஜிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்கு வயது 55. கடந்த முப்பது வருடங்களாகக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி பெரும் அவதிக்குள்ளானவர் அவர். இப்போது அவரிடம் லட்சம் ரூபாய் கொடுத்துக் குடிக்கச் சொன்னாலும், சிரித்தபடி கைகூப்பி, ''என்னால முடியாதுங்க, மன்னிக்கணும். வாழ்க வளமுடன்!'' என்று சொல்லிவிட்டு, மெள்ள நகர்ந்துவிடுகிறார் என்றால் நம்புவீர்களா, நீங்கள்?

அன்பே தவம்! - 4

''கோழிப்பண்ணை வைச்சிருக்கேன். நல்ல சம்பாத்தியம்தான். அதெல்லாம் குறைவில்லை. என்ன... என்னைப் போல குடிக்கிறவனும் இல்ல; என் பொண்டாட்டி சாலம்மாவைப் போல கோபக்காரியும் கிடையாது. என்னோட குடியும், அதைப் பார்த்து அவளுக்கு வர்ற கோபமும்தான் வாழ்க்கைன்னு ஓடுச்சு.

தினமும் குடிப்பேன். அவளும் ஆத்திரத்தோடு தினமும் கத்திக் கூப்பாடு போடுவா. இதுல வீடு நரகமானதுதான் மிச்சம். நல்ல நாள், பெரிய நாள், பண்டிகை, விசேஷம், அன்பா நாலு வார்த்தைன்னு எந்த நிம்மதியும் எந்தச் சந்தோஷமும் இல்லாமத்தான் இருந்துச்சு வீடு. இதோ... கொஞ்ச நாளாதான் வீடு வீடாவே மாறியிருக்கு. அதுக்கு மனவளக்கலைப் பயிற்சிதான் காரணம்.

எங்க ஊருக்கு வந்து, எங்க கிராமத்து மக்களுக்கு எல்லாப் பயிற்சியும் கத்துக் கொடுத்தாங்க. ஆரம்பத்துல ஆர்வம் இல்லாமத்தான் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அப்புறமா இதுல ஈர்ப்பு ஏற்பட்டு, தொடர்ந்து வர ஆரம்பிச்சேன். கூடவே, என் மனைவி சாலம்மாவையும் கூட்டிட்டுப் போனேன். எல்லாம் கத்துக்கிட்ட பிறகு, ஆழியாறுல அஞ்சு நாள் பயிற்சிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அதுதான், என்னை மனுஷனாவே மாத்திச்சு!'' என்று குரல் உடைந்து, அழுகையுடன் சொல்கிறார் பழனி.

அன்பே தவம்! - 4

''முதலில் பழனியை வலுக்கட்டாயமாக இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தும்போது, ரொம்பவே கஷ்டப்பட்டுப் போனோம். அவரைப் பற்றி விசாரித்ததில் பயங்கர மொடாக்குடிகாரர்னும், அவரைத் திருத்துறது கஷ்டம்னும் ஊர்ல நிறையப் பேர் சொன்னாங்க. ஆனா, அடுத்தடுத்த நாள் பயிற்சியில அவர் காட்டின ஈடுபாடு எங்களை மலைக்க வைச்சுது. அப்படியே மெள்ள மெள்ள மாறினவர், இப்ப குடிக்கறதை மொத்தமாவே விட்டுட்டார். வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலைப் பயிற்சியின் மகோன்னதம்தான் அது!'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார், பயிற்சியை வழங்கும் பேராசிரியர் வெங்கடேசன்.

அன்பே தவம்! - 4

ஜருகு எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்தில், உலக சமுதாய சேவா சங்கம் அளித்து வரும் பயிற்சிகளும் அடுத்தடுத்த முயற்சிகளும் அந்தக் கிராமத்தையும் மக்களையும் அடுத்தடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்று வளம் சேர்க்கும் என்பது உறுதி என்பதாகத் தோன்றுகிறது.

''பொசுக்குன்னா கோபம் வந்துடும் எனக்கு! ஆனா, மனவளக்கலைப் பயிற்சி என் மனசை என்னவோ செஞ்சுச்சு. ஆழியாறு போய் அங்கேயும் பயிற்சி எடுத்துக்கிட்டது இன்னும் அமைதியையும் பதற்றம் இல்லாத நிலையையும் கொடுத்துச்சு. இப்ப... கோபம்னா கிலோ என்ன விலைன்னு கேட்பேன்னா பார்த்துக்குங்க!'' என்று வெட்கம் கலந்து சொல்கிறார் சாலம்மா.

மனத்தை வளப்படுத்தும் பயிற்சி... ஒரு கிராமத்தை நோக்கித் திரும்பி, சாமானியர்களுக்கும் கிடைப்பதுதான் பேரானந்தம்!

- வாழலாம்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism