Published:Updated:

வளமுடன் வாழலாம்..!

அன்பே தவம்! - 6ஆர்.கே.பாலா

வளமுடன் வாழலாம்..!

அன்பே தவம்! - 6ஆர்.கே.பாலா

Published:Updated:
##~##

யிற்சி என்பது எல்லா நல்லது கெட்டதுகளிலும் உண்டு. உலகையே காக்கும் உணவுத் தயாரிப்பில் துவங்கி, உலகையும் மனிதர்களையும் அழிக்கவல்ல அணுகுண்டு தயாரிப்பு வரை... எல்லாவற்றுக்குமே பயிற்சி மிக மிக அவசியம்! அதாவது, ஆக்கவும் அழிப்பதற்கும் பயிற்சி ரொம்பவே அவசியம். மனிதனைக் கொன்றால் அது உயிர்க்கொல்லி; மனிதனை இம்சிக்கும் பூச்சிகளைக் கொன்றால், அது பூச்சிக்கொல்லி மருந்து!

எந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளவேண்டும், எதைக் கற்றுப் பின்பற்றினால் நம் வாழ்க்கைக்கு நல்லது என்பதை நாம்தான் பார்த்துப் பார்த்து கவனமாக ஈடுபடவேண்டும். அந்த கவனமும் ஈடுபாடும்தான் நம்மை இன்புற்று வாழ வைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்படியான ஆகச்சிறந்த பயிற்சிதான், மனவளக்கலைப் பயிற்சி. மனசுக்கும் உடலுக்கும் ஒருசேரப் புத்துணர்ச்சியைத் தருவதுதான் இந்தப் பயிற்சியின் சிறப்பம்சம். அடிக்கடி உடல் சோர்வால் அவதிப்படுகிறவர்களும் மனக்கிலேசத்தால் அல்லல் படுகிறவர்களும் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொண்டால், சீக்கிரமே அவற்றில் இருந்தெல்லாம் விடுபட்டுவிடுவார்கள் என்பது கண்கூடு!'' என்கிறார் உமா. சென்னை, பம்மலில் உள்ள மனவளக்கலை மையத்தின் பயிற்சியாளராகத் திகழ்கிறார் இவர்.

வளமுடன் வாழலாம்..!

''வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம் என்பது இப்போதெல்லாம் போஸ்டர்களில் காணப்படும் ஒரு வாசகம். வணங்குவது நல்லதொரு பண்பாடுதான். ஆனால், வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்பதுதான் உண்மை. வாழ்த்துவதற்கு மனமே போதுமானது. எவரையும் மிக அருமையாக வாழ்த்து வதற்கு பல வழிகளைச் சொல்லித் தந்திருக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவற்றில் சிகரம் தொட்ட அற்புதமான வாசகம்... 'வாழ்க வளமுடன்’! வாழ்த்துவதை வெறும் வார்த்தையாக, ஒலியாகச் சொல்லாதீர்கள் என்பார் சுவாமி.

ஆழ்ந்த நிலையில், உள்ளுக்குள்ளிருந்து வாழ்த்தைச் சொல்லவேண்டும். இங்கே, பயிற்சிக்கு வரும் அன்பர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கிற பயிற்சி இதுதான். நிறைவாகச் சொல்லும்போது, அங்கே நல்ல எண்ண ஓட்டங்கள் சூழ்ந்துகொள்ளும். அப்படிச் சூழ்ந்துவிட்ட நல்ல அதிர்வுகளால் நன்மைகள்தான் விளையும். அத்தகைய நல்ல அதிர்வுகள், வேதாத்திரி மகரிஷி சொல்லித் தந்த மனவளக்கலைப் பயிற்சி எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கே சூழ்ந்து கொள்ளும் என்பது உறுதி!'' என்கிறார் உமா.

''வீட்டில் நிம்மதி இல்லை என்று சிலர் வருவார்கள். வெளியில், அலுவலகத்தில் பிரச்னை என்று இன்னும் சிலர் வருவார்கள். 'வீட்டிலும் இல்லை; வெளியிலும் இல்லை. எல்லாப் பிரச்னைகளும் எனக்குள்ளேயே இருக்கின்றன. அதுதான் பிரச்னை!’ என்று சொல்லி வருபவர்களும் உண்டு. மிகப்பெரிய மன அழுத்தப் போராட்டத்தில் வாழவே பிடிக்காமல் வெறுத்துப்போன பெண்கள் பலரும் இறுதி முயற்சியாக இந்தப் பயிற்சியில் வந்து கலந்துகொண்டு, அமைதியான சூழலுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

வளமுடன் வாழலாம்..!

நல்ல அதிர்வு கொண்ட, அற்புதமான எண்ண ஓட்டங்கள் நிறைந்திருக்கும்போது, வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்த எளிமையான மனவளக்கலைப் பயிற்சியை செய்யச் செய்ய... 'நேற்று இருந்த நானா இது!’, 'என் உடம்பிலும் மனசிலும் இப்படியரு அமைதியையும் வேகத்தையும் இதுவரை நான் அனுபவித்ததே இல்லையே...’ என்று பெருமிதத்துடன் சொன்ன அன்பர்கள் பலர் இங்கேயே இருக்கிறார்கள்.

இப்படியான அன்பர்கள் தெளிவும் கனிவுமாக மாறி விட்டதைப் பார்க்கிறபோது உண்டாகிற ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என்னைப் பொறுத்தவரை, வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்களும் பயிற்சிகளும் எனக்குக் கிடைத்தது, என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை! அந்தப் பயிற்சியையும் அவரின் சீரிய கருத்துகளையும் எல்லோருக் கும் கற்றுத் தருகிற பணியைச் செய்வது மிகப்பெரிய வரம்!'' என்று சொல்லி நெகிழ்கிறார் பேராசிரியை உமா.

''உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஏதேனும் ஒருநாளில் காலையில் இருந்து மாலை வரை, 25 முறை வாழ்த்தியிருக்கிறீர்களா? அப்படி வாழ்த்திப் பாருங்கள். கீரியும் பாம்புமாக சண்டையும் கோபமுமாக இருப்பவர்கள்கூட, நகமும் சதையும் போல் சிநேகமாகி விடுவார்கள் என வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார் மகரிஷி!'' என்கிறார் உமா.

அட... இன்றிலிருந்து நாமும் நம் குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, மாமா, அத்தை என உறவுகளையும் சொந்தங் களையும் தினமும் வாழ்த்துவோமா? வாழ்க வளமுடன் என்று மனதாரச் சொல்வோமா?

- வாழலாம்

  படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism