Published:Updated:

அன்பே தவம்! - 7

வளமுடன் வாழலாம்!ஆர்.கே.பாலா

அன்பே தவம்! - 7

வளமுடன் வாழலாம்!ஆர்.கே.பாலா

Published:Updated:
##~##

'வாழ்க வளமுடன்’ எனும் ஒப்பற்ற தாரக மந்திரத்தை, அந்த அற்புதமான வாசகத்தை எங்கெல்லாம் பார்த்திருக்கிறீர்கள்?

ஆட்டோவில் பார்த்திருக்கலாம். காரின் பின்பகுதியில், லாரியில், வேன்களில், இரு சக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் எனப் பல வாகனங்களில், பல இடங்களில் இந்த வாசகத்தைப் பார்த்திருக்கலாம். கல்யாணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் மொய் வைப்பதற்காக, பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் ஐம்பது காசு கொடுத்து வாங்குகிற கவரில், 'வாழ்க வளமுடன்’ என்று அச்சிடப்பட்டிருக்கும். கவனித்திருக்கிறீர்கள்தானே! இன்னும் பலர் தங்கள் வீட்டு வாசலில், கதவில் 'வாழ்க வளமுடன்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, தண்டையார்பேட்டையில் வ.உ.சி. தெருவுக்குப் போய், 'வாழ்க வளமுடன் வீடு எங்கே இருக்கு?’ என்று கேட்டால், சட்டென்று குழந்தைகள்கூட வழிகாட்டுவார்கள். ஆமாம்... அந்த வீட்டின் பெயரே 'வாழ்க வளமுடன்’ இல்லம்தான்!

அன்பே தவம்! - 7

''ஒத்தை ரூபாயை வைச்சுக்கிட்டு, சிவாஜி படத்துல ரஜினி முன்னுக்கு வந்து காட்டுவாரே... அதுமாதிரி எந்தப் பிடிகொம்பும் இல்லாம, அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம, வாழ்வா சாவான்னு போராட்டமா இருந்த எங்க வாழ்க்கையை நல்லவிதமா மாத்தின மந்திரச் சொல்... வாழ்க வளமுடன்! என்னோட கவலைகளையெல்லாம் மறந்து உற்சாகமாகவும் புத்துணர்ச்சியோடயும் இன்னிக்கி வீடு- வாசலும் காரும் வாகனமுமா இருக்கறதுக்குக் காரணமே, வேதாத்திரி மகரிஷி வகுத்துக் கொடுத்த பயிற்சிகள்தான்!'' என்று மனம் கொள்ளாத பரவசத்துடன் சொல்கிறார் வான்மதி.

''இன்றைக்குத் தொழிலில் நேர்த்தியும் முனைப்புமாகச் செயல்பட்டு ஜெயிச்சதுக்கும் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டிருக்கறதுக்கும் மகரிஷியோட வார்த்தைகளும் பயிற்சிகளும் ரொம்பவே முக்கியமான காரணம்னு சொல்லுவேன்'' என்பவர் ஏதோ சிறிய அளவில் பேப்பர் கப்போ, செயற்கை ஆபரணங்களோ செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார் என நினைத்துவிடப் போகிறீர்கள். அல்ல! மிகப் பெரிய வாகனங்களை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர்களைத் தயாரித்து வருகிறார் வான்மதி.

''வாகனங்களையோ பொருட்களையோ ஏத்திட்டுப் போற கன்டெய்னர்கள் மட்டுமில்லாம, ஒரு பாலம் கட்டுகிற இடத்திலோ கட்டடம் கட்டுகிற இடத்திலோ நாலஞ்சு மாசம் தங்கறதுக்கு வசதியா குடியிருப்புக் கன்டெய்னர்களும் தயாரிச்சுத் தர்றோம். அதில் சமையலறை, குளியலறை, படுக்கையறைன்னு எல்லா வசதிகளும் இருக்கும். கிட்டத்தட்ட ஆண்கள் மட்டுமே வேலை செய்ற இடத்துல நம்பிக்கையும் தைரியமுமா, எந்தத் தயக்கமும் இல்லாம வேலை செஞ்சேன்; எல்லாரையும் வேலை வாங்கினேன்னா அதுக்கு இந்த மனவளக்கலைப் பயிற்சிதான் காரணம்.

அன்பே தவம்! - 7
அன்பே தவம்! - 7

எத்தனை டென்ஷன் இருந்தாலும், ஒரு கால் மணி நேரம் இந்தப் பயிற்சியைச் செய்தால் போதும்... நூறு சதவிகிதம் ரிலாக்ஸ் ஆயிடுவேன். சிறுகச் சிறுகக் காசு சேர்த்து வீடு கட்டும்போது அப்பா பேரு, அம்மா பேரு, கடவுள் பேருன்னு வீட்டுக்குப் பேரு வைக்கறது பத்தி உறவுக்காரங்க எல்லாரும் ஒவ்வொரு ஐடியா சொன்னாங்க. ஆனா, 'வாழ்க வளமுடன் இல்லம்’னு வைக்கறதுல நான் உறுதியா இருந்தேன். ஆத்மார்த்தமா, மகரிஷி மேலயும் பயிற்சி மேலயும் இருந்த ஈடுபாட்டோடு இந்தப் பேர் வைச்சேன். இப்ப, இந்த வீட்டுக்கும் எனக்கும் இந்தப் பேரே மிகப் பெரிய அடையாளமாவும் புகழாவும் ஆயிருச்சு!'' என்று சொல்லிவிட்டுப் புன்னகைக்கிற வான்மதி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சென்னை திருவான்மியூரில் சக்திவிகடன் சார்பில் நடந்த மனவளக்கலைப் பயிற்சியிலும் கலந்துகொண்டிருக்கிறாராம்.

- வாழலாம்

  படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism