Published:Updated:

அன்பே தவம்! - 8

வளமுடன் வாழலாம்!ஆர்.கே.பாலா

##~##

பிரச்னையோ சிக்கலோ, தவிப்போ குழப்பமோ... தனக்கு வந்தால்தான் கோயிலுக்குப் போவதும், போய் ஸ்வாமியை வணங்குவதுமான மனோநிலை பலருக்கும் உண்டு. அதேபோல, உடலில் ஏதேனும் உபத்திரவம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களே இங்கே அதிகம். ஆனால், உடல்நிலையிலும் சரி, மனநிலையிலும் சரி... வருமுன் காப்பதே உத்தமம் என்பதை நாம் அறிவதே இல்லை.

மேக்வெல் கன்டெய்னர் கேர் எனும் கம்பெனியைத் திறம்பட நடத்தி வரும் வான்மதி, ஆரம்பத்தில் இருந்தே மனவளக்கலையின் மீது ஆர்வம் கொண்டு பயிற்சி எடுத்திருந்தாராம். அந்தப் பயிற்சியும், அதனால் கிடைத்த பலன்களும் வான்மதியை அடுத்தடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றதாகப் பூரிப்புடன் தெரிவிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்பே தவம்! - 8

''ஆமாம்... அப்போது ஒரு ஏற்றுமதி- இறக்குமதி கம்பெனில வேலை பார்த்துட்டிருந்தேன். துறைமுகத்துக்குப் போறது, சரக்குகளை இறக்குறதுன்னு அங்கே எனக்கு நிறைய வேலைகள். எல்லாமே டென்ஷனையும் ஒருவித மன இறுக்கத்தையும் ஏற்படுத்தும்படியான வேலையாகவே இருக்கும்.

அந்தச் சமயத்துலதான், வேதாத்திரி மகரிஷி ஐயாவோட மனவளக்கலைப் பயிற்சி பத்தி எனக்குத் தெரியவந்துச்சு. கத்துக்கிட்டா என்னன்னு தோணுச்சு. அத்தனை வேலைகளுக்கிடையிலும் பயிற்சிக்குன்னு நேரம் ஒதுக்கிக் கத்துக்க ஆரம்பிச்சேன். மெள்ள மெள்ள, பேச்சுலயும் யோசிக்கறதுலயும் ஒரு நிதானம் வர ஆரம்பிச்சுது. எப்பேர்ப்பட்ட விஷயமானாலும் படபடப்போ டென்ஷனோ வராம, நிதானமும் தெளிவான சிந்தனையும் கிடைச்சுது. மனசு தக்கையானதை நல்லாவே உணர முடிஞ்சுது.

அதுக்குப் பிறகு, 'மேக்வெல் கன்டெய்னர் கேர்’னு கன்டெய்னர்கள் தயாரிக்கும் கம்பெனியை நாங்களே சொந்தமா ஆரம்பிச்சோம். கன்டெய்னர்கள் எப்படி பிரமாண்டமோ, அதேபோல அதைத் தயாரிக்கறதும், அதுல ஈடுபடுற தொழிலாளிகள் கூட்டத்தை நிர்வகிக்கிறதும்கூட மிகப்பெரிய விஷயம்தான்!

கன்டெய்னர் கேக்கற கம்பெனிகள், துறைமுகப் பணியாளர்கள்னு அந்த இடங்களை சமாளிக்கறதுங்கறது லேசுப்பட்ட காரியம் இல்லை. வடக்கேருந்து ஒரு கம்பெனி, இருபது நாள் டைம் கொடுத்து, கன்டெய்னர் தயாரிக்கச் சொல்லியிருக்கும். பரபரன்னு வேலை நடந்துட்டிருக்கும்போதே, பதினேழாம் நாள் தொழிலாளிகள்கிட்டேருந்து தடால்னு ஒரு புகைச்சல் கிளம்பும். ஒருபக்கம்... நாள் நெருங்க நெருங்க, கம்பெனிகிட்டேருந்து ஃபோன் மேல ஃபோனா வரும். இன்னொரு பக்கம், விடாப்பிடியா வேலை செய்யாம முரண்டு பிடிப்பாங்க தொழிலாளிகள். இந்த ரெண்டு தரப்பையும் சமாளிச்சு, சொன்ன நாள்ல, சொன்ன நேரத்துல கன்டெய்னரைத் தயாரிச்சு, புருஷன் வீட்டுக்குப் பெண்ணை அனுப்பி வைக்கற  மாதிரி பக்காவா அனுப்பி வைப்போம். அதுக்குள்ளே பி.பி. எகிறியிருக்கும். எல்லார்கிட்டயும் சிடுசிடுப்பு, கடுகடுப்பு, டென்ஷன், சண்டைன்னு அந்த வாரம் முழுசும் அப்படியே ஓடியிருக்கும். ஆனா, இப்பெல்லாம் இது எதுவுமே இல்லாம, பதற்றம் துளியும் வராம, அத்தனை விஷயங்களையும் ரொம்ப சுலபமா என்னால கவனிக்க முடியுதுன்னா, அதுக்கு இந்த மனவளக்கலைப் பயிற்சிதான் காரணம்!'' என்கிறார் வான்மதி.

அன்பே தவம்! - 8
அன்பே தவம்! - 8

''பத்திரிகை நடத்தணும்கற என் இளமைக் கால ஆசையும் இப்ப நிறைவேறிடுச்சு. கன்டெய்னர் தயாரிக்கறது போலவே, பத்திரிகையையும் ஆசையும் ஆர்வமுமா நடத்திக்கிட்டு வரேன். எப்படி ஒரு இலக்கியம் அன்பையும் சகமனிதர்களை நேசிப்பதையும் கத்துக் கொடுக்குதோ, அதேபோல இந்த மனவளக்கலை யோகா பயிற்சியானது எனக்கு நல்ல பல விஷயங்களைக் கத்துக் கொடுத்தது. நிதானத்தையும் பேரன்பையும் மௌனத்தையும், கோபமே வராத நிலையையும் இந்தப் பயிற்சிதான் எனக்குத் தந்துது!'' என்று சொல்லி, கம்பீரமாகச் சிரிக்கிறார் வான்மதி.

- வாழலாம்

  படங்கள்: ரா.மூகாம்பிகை