Published:Updated:

அன்பே தவம்! - 10

வளமுடன் வாழலாம்!ஆர்.கே.பாலா

அன்பே தவம்! - 10

வளமுடன் வாழலாம்!ஆர்.கே.பாலா

Published:Updated:
##~##

ந்த உலகம் மிகமிக விசித்திரமானது. எதற்கு வேண்டுமானாலும் கோபப்பட்டுவிடுவதும், டென்ஷனாகி தலையில் கைவைத்து உட்கார்ந்து கொள்வதும் இன்றைக்கு வழக்கமாகிவிட்டன. பாட்டியைப் பார்த்து அம்மாவும், அம்மாவைப் பார்த்து மகளும், மகளைப் பார்த்து அவளின் மகளுமாக, அதேபோல் தாத்தாக்கள் செய்ததை அப்பாக்களும், அப்பாக்கள் செய்ததை மகன்களும், மகன்களைப் பார்த்து அவரின் குழந்தைகளும் ஒவ்வொரு சம்பவத்துக்குத் தகுந்தது மாதிரியான ரியாக்ஷன்களைச் செய்கிறார்கள்.

ஏதேனும் நினைத்ததோ கேட்டதோ நடக்கவில்லை என்றால் இடிந்து உட்கார்ந்து விடுகிற, தன்னைத் தானே நொந்து கொள்கிற குழந்தைகள் அதிகமாகிவிட்டார்கள். இது வேதனையான உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த வேதனைகளெல்லாம் சிறிது காலத்தில் முற்றிலுமாக மாறிவிடும். ஏனென்றால், கணவனும் மனைவியுமாக, மனவளக்கலைப் பயிற்சிக்கு வரத் துவங்கிவிட்டார்கள்.

அன்பே தவம்! - 10

அலுவலகங்கள் பலவற்றில் மனவளைக் கலைப் பயிற்சியை ஊழியர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நேரம் ஒதுக்குகிறார்கள். ஆபீஸில் கற்றுக் கொண்டதை வீட்டில் செய்யும் போது, அம்மாவைப் போல, அப்பாவைப் போல நாமும் யோகா செய்ய வேண்டும் தியானப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குழந்தைகளும் ஆசைப்படுகிறார்கள். தவிர, தமிழகத்தில் பள்ளிகள் பலவற்றுக்குச் சென்று அங்கேயும் கடந்த வருடங்களில் மனவளக் கலைப் பயிற்சியைக் கொடுத்து வந்தோம். இது இன்னும் நிறைவைத் தந்தது எங்களுக்கு'' என்கிறார் உலக சமுதாய சேவா சங்கத்தின் சென்னை நகர் மண்டலத் தலைவர் பேராசிரியர் சுந்தரம். சென்னை அண்ணாசாலையில் உள்ள அந்தத் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்றபோது, அங்கே மௌனம் மொத்த இடத்திலும் வியாபித்திருந்தது. சுழல் நாற்காலிகள் ஓரங்கட்டப் பட்டிருந்தன. தரையில் ஊழியர்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் காட்சியைப் பார்க்க முடிந்தது.

''எனக்குத் திட்டக்குடி பக்கம்தான் சொந்த ஊர். அப்பா காலத்துலயே சென்னைக்கு வந்தாச்சு. யோகாசனமும் அந்தப் பயிற்சிகளும் எனக்குப் புதிதல்ல. யோகா பண்ணணுங்கற விழிப்பு உணர்ச்சி, கடந்த பல வருஷமாவே மக்களுக்கு வந்துருச்சு. பல அமைப்புகளும் விதம்விதமான முறைல யோகா பயிற்சி வகுப்புகள் நடத்திட்டுதான் இருக்காங்க. அத்தனை வகுப்புகளையும் பணம் கொடுத்துக் கத்துக்கிட்டவ நான்'' என்கிறார் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் சுமதி.

அன்பே தவம்! - 10

''ஒருநாள் பயிற்சி, ஆறுநாள் பயிற்சின்னு நிறையப் பணம் கட்டி, யோகா கத்துக்கிட்டேன். ஆனா பணமே வாங்காம, எங்களுக்குக் கத்துக் கொடுக்கிற இந்தப் மனவளக்கலைப் பயிற்சி மற்ற பயிற்சி களைவிட ரொம்பவே வித்தியாசமானது. இது எல்லா வயதினரும் செஞ்சு பலன் அடையறதுக்குத் தகுந்தது போல இருக்கு! அப்படி பலவிதமா யோசிச்சு, மனவளைக் கலைப் பயிற்சியை உருவாக்கிக் கொடுத்த வேதாத்திரி மகரிஷிக்குதான் மானசிகமா நன்றி சொல்லணும்'' என உணர்வுபூர்வமாகத் தெரிவிக்கிறார் சுமதி.

அன்பே தவம்! - 10

''ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒரு தேடல் இருக்கும். அந்தத் தேடல் பத்தின முழுவிவரம் தெரியாமலேயே நாம தேடிக்கிட்டே இருப்போம். அதைத்தான் ஆத்மாவின் தேடல்னு சொல்றோம். என் ஆத்ம தேடலுக்கான பதிலும் தீர்வும் இந்த மனவளைக் கலைப் பயிற்சியின் மூலம் கிடைச்சுதுன்னா சொன்னா... மிகையில்லை!'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் சுமதி. அதைச் சொல்லும்போது அவர் முகத்தில் அப்படியொரு பரவசம்!

- வாழலாம்

படங்கள்: ரா.மூகாம்பிகை