Published:Updated:

அன்பே தவம்! - 11

வளமுடன் வாழலாம்!ஆர்.கே.பாலா

அன்பே தவம்! - 11

வளமுடன் வாழலாம்!ஆர்.கே.பாலா

Published:Updated:
##~##

''அந்தக் காலத்தில், பணி செய்யும் இடத்துக்கு அருகில் வீடு அமைந்திருந்தது. தொழிற்சாலைகளுக்குப் பக்கத்திலேயே குடியிருப்புகள் கட்டப்பட்டன. அங்கே, ஊழியர்களின் குடும்பத்தாருக்கு அனைத்து வசதிகளுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதேபோல், குழந்தைகள் படிப்பதற்கும் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன.

பஞ்சு மில், சிமென்ட் தொழிற்சாலை எனப் பல ஊர்களில், பல இடங்களில், காலனி குடியிருப்புகள் ஏ டைப், பி டைப் என்று கட்டப்பட்டு, ஊழியர்களுக்கும் அவர்கள்தம் குடும்பத்தாருக்கும் வசதிகள் செய்து, வீட்டில் இருந்து வேலைக்கும், வேலை முடிந்து வீட்டுக்கும் சட்டென்று ஐந்து நிமிடத்தில் வந்துவிட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், ஊர் விட்டு ஊர் வருவதும், வசதிகள் எங்கே உள்ளதோ அந்த இடத்தில் வீடு பார்த்துக் குடியேறுவதும், ரயிலோ பஸ்ஸோ பிடித்து வேலைக்குச் செல்வதும் இன்றைக்கு அதிகரித்துவிட்டது. தண்ணீர் வசதியை வைத்துக் குடியேறுவதும், பிள்ளைகளுக்கு நல்ல பள்ளிக்கூடம், கல்லூரி கிடைப்பதை வைத்து வீடு மாறுவதும் இன்றைக்கு சகஜமாகிவிட்டது.

எனக்குக் குரோம்பேட்டையில் வீடு. தினமும் சீக்கிரம் கிளம்பி, சாயந்திரம் வீட்டுக்கு லேட்டாகப் போகும்போது, சாப்பிடுறதுக்கும் தூங்கறதுக்குமான நேரங்கள் மாற ஆரம்பிச்சுடுச்சு. அசதியோடு தூங்கப் போவதும், சோர்வோடு காலையில் கண் விழிப்பதுமான இந்த நடைமுறை வாழ்க்கை உடம்பை ரொம்பவே படுத்தி எடுத்துருச்சு!'' என்கிறார், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பாலகுரு.

அன்பே தவம்! - 11

''இந்த நிறுவனத்தில் பத்து வருஷமா வேலை பாக்கறேன். எப்பவும் கச்சலா, ஒல்லிப்பிச்சானா இருக்கற உடம்புதான் எனக்கு! பாக்கறவங்க எல்லாருமே 'உடம்பைக் கவனிப்பா. சாப்பிடுப்பா’னு அட்வைஸ் பண்ற அளவுக்கு மெலிஞ்ச தேகத்தோட இருந்தேன். போதாக்குறைக்கு, ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு, அசிடிட்டி, அல்சர், அதுஇதுன்னு ஏகத்துக்கு வயித்துல பிரச்னை! இந்த நேரத்துலதான், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, எங்க ஆபீஸ்ல மனவளக்கலை பயிற்சி கொடுக்க வந்தாங்க. இதோ... இப்ப வரைக்கும் தொடர்ந்து பயிற்சி செஞ்சுக்கிட்டுதான் இருக்கோம்.

இந்தப் பயிற்சிதான் எங்களை முழுக்கவே மாத்திச்சு. குறிப்பா, கால் மடக்கி குனிஞ்சு யோகா செய்யச் செய்ய, முதுகும் வயிறும், எல்லாப் பாகங்களுமா அசைஞ்சு கொடுத்துச்சு. நல்லாச் சாப்பிட முடிஞ்சுது. மெள்ள மெள்ள அசிடிட்டி எரிச்சல்லேருந்து விடுதலை கிடைச்சுது. ஓரளவு இப்ப எடை கூடியிருக்கேன். இது எல்லாத்துக்குமே மனவளக்கலைப் பயிற்சிதான் காரணம்!'' என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் பொங்கச் சொல்கிறார் பாலகுரு.

''அதேபோல, காலைல வீட்டுலேருந்து கிளம்பி வந்தப்ப எப்படி ஃப்ரெஷ்ஷா, புத்துணர்ச்சியா, உற்சாகமா இருந்தேனோ, அதேபோல ராத்திரி வீட்டுக்குப் போகும்போதும் அதே உற்சாகம், அதே புத்துணர்ச்சின்னு உடம்பு மலர்ச்சியா இருக்க ஆரம்பிச்சதும் மனவளக்கலைப் பயிற்சியாலதான்.

மதியம் சாப்பிட்டதும் எல்லாரையும் உடம்பு ஒரு அசத்து அசத்தியெடுக்கும். கண்ணுல எரிச்சலும் தூக்கமும் றெக்கை கட்டிக்கிட்டு நிக்கும். மத்தியானம் ரெண்டு மணிலேருந்து மூணரை, மூணே முக்கால் மணி வரைக்கும் இப்படி அரைத் தூக்கத்துலயே அல்லாடும்படியா இருக்கும். அப்புறம் முகம் கழுவி, ஒரு டீ குடிச்சா, ஓரளவு உற்சாகத்தோட வேலை பார்க்கமுடியும். ஆனா, இந்த ரெண்டு வருஷமா மதியம் ஆபீஸ்ல பயிற்சி செய்றதால, அந்த அலுப்பும் சலிப்பும் வந்ததே இல்லை. தூக்கமும் அயர்ச்சியும் எட்டிக் கூடப் பார்க்கலை. மிகப் பெரிய ரிலாக்ஸ் கிடைச்சு, எப்பவும் எனர்ஜியோட வேலை பார்க்கமுடியுது. அதனால, யார் மேலயும் தேவையில்லாம கோபமோ எரிச்சலோ வர்றதுக்கு சான்ஸே இல்லை. இதனோட நெட் ரிசல்ட்- எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி!'' என்று உற்சாகம் ததும்பச் சொல்கிறார் பாலகுரு.

- வாழலாம்

படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism