Published:Updated:

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

Published:Updated:
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வா
ரத்தில் ஒரு நாள் சம்பிரதாய பஜனையில் ஈடுபடுவார்கள், முன்னோர்கள். அப்போது நடைபெறும் பூஜையில், ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகமும் இடம்பெறும். ஸ்ரீராதையுடன் இணைந்த கிருஷ்ணரைப் பாடும்போதே மெய்ம்மறந்து போவார்கள், அவர்கள்! 'ராதே ஸ்யாம் - ராதே கிருஷ்ணா’ என்பதுதான் கிருஷ்ண பக்தியின் எல்லை என்பதில் உறுதியுடன் இருப்பார்கள்.

'கிருஷ்ணா’ என்றால், 'பக்தன் என்னில் இணைந்து நிற்கிறான்’ என்று பொருள்; 'ஸ்ரீகிருஷ்ணா’ என்றால்,  'ராதையுடன் இணைந்த என்னை அறிகிறான்’ என்று அர்த்தம் என்கிறது புராணம். 'கிருஷ்ணா என்றால், பக்தன் என்னை மட்டும் அழைக்கிறான்; ஸ்ரீகிருஷ்ணா என்றால், உன்னுடன் இணைந்த என்னை அழைக்கி றான்’ என (பிரம்ம வைவர்த்த புராணம்) ராதையிடம் விளக்கு கிறார் ஸ்ரீகிருஷ்ணர். ஸ்ரீ என்ற எழுத்து ராதை யைக் குறிக்கிறது. பாடல்களிலும் ராதையுடன் இணைந்த கிருஷ்ணருக்குப் பெருமைகள் உண்டு. 'ராதா ரமண; ஹரே ராமேதி’ எனும் வரிகள் இன்றைக்கும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீகிருஷ்ண லீலைகள், தத்துவ விளக்கங்கள்; தத்துவம் ராதை என்கிறது புராணம். சிங்கார வடிவில் தோன்றுகிற தத்துவம், மனதில் அப்ப டியே பதிந்துவிடும். இந்த இணைப்பில் ஏற்பட்ட இறுக்கம், என்றைக்கும் தளராது. ''என் உயிரினும் மேலானவள் நீ. உடலில் வேறாகத் தோன்றினா லும், உண்மையில் நாம் இருவரும் ஒன்றே! பாலில் வெண்மை, நெருப்பில் சூடு, புஷ்பத்தில் வாசனை ஆகியவற்றைப்போல் இணைந்துள் ளோம். மண்ணின்றி, மண்பாண்டம் இல்லை; தங்கமின்றி கம்மல் இல்லை; நீயின்றி படைப்பு நிகழாது. நீ விளைநிலம்; நான் விதை. படைப் புக்கு ஆதாரமான பெண்மை நீ; படைப்பை நடைமுறைப்படுத்தும் விதை நான். ஆக, என்னிடமிருந்து வெளிப்பட்டு, என்னுடன் இணைந்து, உலக இயக்கத்துக்கு ஆதாரமாக இருப்பவள் நீ! பெண்மையும் ஆண்மையும் நம்மில் இருந்து தோன்றியவை. அதன் நெருக்கம், பிரபஞ்சத்தை உருவாக்கியது. பக்தனானவன், 'ரா’ என்று சொல்லும்போது, உனது பெயரின் முதல் எழுத்து என்கிற எண்ணம் தோன்றும். அவனுக்கு நிலையான பக்தியை அளித்துவிடுவேன். 'தா’ என்று கேட்டதும், நான் அவனைப் பின்தொடர் வேன். 'தா’ என்ற எழுத்தைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் எனும் ஆசையில், அவனை விட்டு விலகவேமாட்டேன். அவனுக்குப் பாதுகாப் பாக இருந்து, யோக க்ஷேமங்களை அவனுக்கு வழங்குவேன்'' என ராதையை அறிமுகம் செய்யும் தகவல், புராணத்தில் உண்டு.

சிந்தனை செய் மனமே!

ராதை என்றால் விருப்பத்தை நிறைவு செய்ப வள் என்று அர்த்தம் (ராத ஸாத ஸம்ஸித்தௌ). அதாவது, நிறைவுக்கு எது தேவையோ, அதனை அளிப்பவள். ஸ்ரீகிருஷ்ணரின் வெற்றியை நிறைவு செய்தது, ஸ்ரீராதையின் இணைப்பு. புலன்களின் ஈர்ப்பில் ஏற்பட்ட இணைப்பு அல்ல இது; இரும் புடன் காந்தம் இணைவது போலான இயல்பான இணைப்பு! தாவரங்கள், தன்னில் உறைந்திருக்கும் ஆண்மை பெண்மையின் இறுக்கத்தில், இயற்கை வளத்தைப் பெருக்கி, படைப்பின் நிலையை எட்டவைக்கின்றன. கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு என்கிறது புராணம் (யத: கிருஷ்ண: ததோஜய:)

'ராதை எனும் பெண்மைதான், கிருஷ்ண ருடன் இணைந்து வெற்றியை அடையவைத் தது. அம்பாளின் இணைப்பு, நஞ்சுண்ட ஈசனை வாழவைத்தது’ என்பார் ஸ்ரீஆதிசங் கரர். ஸ்ரீசங்கரனுக்கு ஸ்ரீகௌரி; ஸ்ரீதரனுக்கு ஸ்ரீ; அத்ரி மகரிஷிக்கு அனசூயை; வசிஷ் டருக்கு அருந்ததி; இந்திரனுக்கு இந்தி ராணி... என அனைவருமே பெண்மையின் இணைப்பில் வெற்றி பெற்றவர்கள். இவர் களைப்போல், 'திருமணத்தில் இணைந்த நீ, பெண்மையின் இணைப்பில்  வெற்றி பெற வேண்டும்’ எனத் திருமணத்தில், தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம். இங்கு குறிப்பிட்ட அத்தனை தம்பதியரிலும் பெண்மையே ஆண்மைக்குப் பெருமைக்குச் சேர்த்தது எனும் தகவலை விளக்குகின்றன, புராணங்கள்!

சீதையுடன் இணைந்த பிறகே, ஸ்ரீராமரின் பெருமை வெளிப்பட்டது. ஆண்மையானது வெற்றியை அடைவதற்கு, பெண்மையை இணைத்துக்கொள்கிறது. விதையானது, விளை நிலத்தை ஏற்காமல் இருப்பின், தனது வளத்தை வெளிப்படுத்த இயலாது; அதன் பரிணாம வளர்ச்சி வெளிப்படாமலேயே அழிந்துவிடும். அதேபோல், விளைநிலம், விதையை ஏற்காமல் விட்டால், இயற்கை வளத்தை வெளியிட முடி யாது; ஒன்று, மற்றொன்றுடன் இணைந்து செயல்பட்டால்தான், இரண்டுமே சிறக்கும் எனும் தத்துவம், ஸ்ரீராதை- ஸ்ரீகிருஷ்ணர் இணைப்பில் உறுதிப்படுகிறது. ராதாகிருஷ்ண தத்துவ விளக்கம், பிற்பாடு வந்த திருமணங்க ளுக்கு ஆதாரமானது என்று சொன்னால், மிகையில்லை!

ராஸக்ரீடையிலும் கோபியரின் பக்தியை அடையாளம் கண்டு அருளும் திறமை, தன்னு டன் இணைந்த ராதையால் விளைந்தது. இயற்கையின் உருவமான ராதை, இறைவனுடன்தான் இணையும். மனித இனம் மட்டுமின்றி, அனைத்து உயிர் களுக்கும் இயற்கைதான் வாழ்வளிக்கிறது. அப்படி வாழ்வளிப்பவள், ஸ்ரீராதை; வாழவைப்பவர் ஸ்ரீகிருஷ் ணர்! ஆக, ராதா- கிருஷ்ண வழிபாடு விசேஷத்துக்கு உரியது. 'ராதே, ச்யாம்’ என உள்ளன்புடன் அழைத்தால், வெற்றி நிச்சயம்!

திருமணத்தில் மாப்பிள்ளையை மகாவிஷ்ணுவாக வும், கன்னிகையை மகாலட்சுமியாகவும் பார்ப் பார்கள். அந்த மகாவிஷ்ணுவிலும் மகாலட்சுமி யிலும் ராதையும் கிருஷ்ணரும் ஒன்றியுள்ள னர். திருமணத்தின் வெற்றிக்கு அதுவே காரணமாகிறது.

ஒருமுறை, கிருஷ்ணனுடன், நந்தகோபன் பிருந்தாவனம் சென்றார். மாடுகளை மேற்பார்வை யிட்டபடி, ஸ்ரீகிருஷ்ணரை மார்பில் அணைத்தபடி,  மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது ஸ்ரீகிருஷ் ணன், மாயையால் வானில் மேகமூட்டத்தை உண்டு பண்ணினான். நீருண்ட மேகங்கள் பரவி, காற்றின் துணையுடன் இடியோசை முழக்க, மழை பொழியச் செய்தது. இடிச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார் நந்தகோபன். 'மழையில் நனையும் மாடு-கன்றுகளை விட்டுவிட்டு, எங்கே செல்வது? அதேநேரம், வீட்டுக் குச் செல்லவில்லையெனில் குழந்தை மழையில் நனைவானே?!’ என யோசித்தபோதே, குழந்தை பாலுக்காக அழத் துவங்கியது. அப்போது, அங்கே தோன்றினாள் ராதை. அவளைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியவர், அவளை வணங்கினார்.

சிந்தனை செய் மனமே!

''நீ ராதை என்பதை நானறிவேன். பரந்தாமனுக்கு, லட்சுமியைவிட உன்னிடம் பற்று அதிகம். இந்தக் குழந்தை சிறுவன், மகாவிஷ்ணு என்பதையும் அறி வேன். கர்க முனிவரின் மூலமாக அனைத்தையும் அறிந் துள்ளேன். உன்னுடைய பிராணநாதனைப் பெற்றுக் கொள்'' என்று அழுதுகொண்டிருந்த குழந்தையை ராதையிடம் ஒப்படைத்தார் நந்தகோபன்.

கிருஷ்ணருடன் வெகு தூரம் சென்றவள், வழியில், அழகிய ரத்தின மண்டபத்தைக் கண்டு, உள்ளே நுழைந் தாள். அங்கே புஷ்பப் படுக்கையில் அலங்காரத்துடன் அழகு மிளிரக் காட்சி தந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனாள். அப்போதுதான் தனது இடையைப் பார்த்தாள். அங்கே குழந்தையைக் காணோம்! இளமைப் பருவத்தில் அழகு மிளிரக் காட்சி தந்த ஸ்ரீகிருஷ்ணரைக் கண்டு ரசித்தாள். அவளை அருகில் அழைத்த ஸ்ரீகிருஷ்ணர்,  ''தேவர்கள் சூழ, கோலோகத்தில் உனது விருப்பத்தைத் தெரிவித்தாயே! அதை இப்போது நிறை வேற்றுகிறேன். என்னுடன் என்றென்றும் இணைந்து வாழ்கிற பாக்கியம் இன்று நிறைவேறும்'' என்றார்.

அதையடுத்து, ராதைக்கு ஸ்ரீகிருஷ்ணர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணியில் இறங்கினார் பிரம்மா; அவர்களை திருமணத்தில் இணைத்து வைக்க முனைந் தார். அக்னியில் வேள்வியைத் துவக்கி னார்; ஸ்ரீவிஷ்ணுவை நினைத்து, ஹவிஸை வேள்வியில் சேர்த்தார். ஸ்ரீகிருஷ்ணருக்கும் ஸ்ரீராதைக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து, காப்புக் கட்டினார்; இருவரையும் அக்னியை வலம் வரச் செய்தார்; வேத மந்திரங்கள் ஓதி, ஸ்ரீராதையின் கைத்தலம் பற்றச் செய்தார். இருவரும் மாலை மாற் றிக்கொண்டனர்; தேவர்கள், துந்துபி வாத் தியம் முழங்கினர்; கந்தர்வர்கள், பூமழை பொழிந்தனர்; அப்சரஸ் பெண்கள், நடன மாடினர். அந்தத் திருமணத்தால் உலகமே மகிழ்ந்தது எனும் தகவல் பிரம்ம வைவர்த்த புராணத்தில் உண்டு!    

ராதை வேறு, கிருஷ்ணர் வேறு அல்ல. ராதையை வணங்கினால், பிறவிப் பயனை அடையலாம். பிறப்பின் இலக்கு, பகவானை அடைவது என்பதைத் தனது சரிதையின் மூலம் விளக்குகிறாள் ஸ்ரீராதை.  

இணைப்பானது, சிற்றின்பத்துக்காக அல்ல; பேரின்பத்துக்காக என்பதை உணர்த்தியவள், ஸ்ரீராதை. இக-பர சுகத் துக்கு அவளே ஆதாரம்! இன்றைக்கும், சம்பிரதாய பஜனையில், ஸ்ரீராதா கல் யாணம்தான் சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. அவளின்றி அவனில்லை என் பதை வெளிப்படுத்த, இரண்டு கோடரி களுக்கு இடையே மாதவன் இணைந்து கைகோத்து விளையாடும் நிகழ்வு, பாரதப் பண்புக்கு ஆதாரமாகத் திகழ்கிறது.  

ஸ்ரீராதா கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டால் மட்டும் போதாது; அதன் உட்பொருளை உணர்ந்து, அறிந்து, வாழ்வது மிகமிக அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism