இளைஞர் சக்தி

வாழ்க வளமுடன்!

நாம் எல்லோருமே எந்திரன்கள்தான்!

'என்னடா இது... சாப்பாடு பத்தி, இப்படிப் பத்திபத்தியா சொல்லணுமா!' என்று சிலர் அலுத்துக்கொள்ளலாம். 'இந்த சுவாமிகள் சாப்பாட்டுப் பிரியர்போல' என்றும் சிலர் நினைத்துக்கொள்ளலாம். வன்முறை குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் அதிகம் பேசிய மகாத்மா காந்தி, வன்முறையாளரா என்ன? உலகமே போற்றிக் கொண்டாடுகிற அகிம்சாவாதிதானே?!

உணவு குறித்த விழிப்பு உணர்வு நம் இளைஞர்களிடம் இல்லை. அவர்கள், காலை உணவைப் புறந்தள்ளு வதற்குக்கூடத் தயாராக உள்ளனர். ஒரு டப்பாவில் இரண்டே இரண்டு சிறிய பிரெட் துண்டுகளை மதிய உணவு என்கிற பெயரில் கொண்டு வந்து சாப்பிடுகிற இளம்பெண்கள் உள்ளனர். வேறு சிலரோ, உணவகங் களுக்குச் சென்று, ஏகப்பட்ட அயிட்டங்களை ஆர்டர் செய்து, வகைதொகை தெரியாமல் சாப்பிட்டுவிட்டு, கொழுப்பு கூடிவிட்டது, எடை அதிகரித்துவிட்டது என்று புலம்புகின்றனர்.

அன்னமிடுதலைச் சேவையாக, தரும காரியமாக, புண்ணியம் தரும் விஷயமாக, பக்தியாகப் பார்க்கிற தேசம் இது. 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே' என்று சொல்லி வைத்த சமூகம் இது! 'ரெண்டகம் செய்யாதே' என்று சொல்லவில்லை. 'நினைக்கவே நினைக்காதே' என்பதில் உள்ள சூட்சுமம் புரிகிறதா உங்களுக்கு? உணவு பற்றிய மரியாதைக்கும் உன்னதத்துக்கும் இதைவிட உதாரணம் தேவையில்லைதானே?!

சரி... 'பசிக்காகவோ ருசிக்காகவோ, கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால், அதிலென்ன தவறு?' என்பார்கள் சிலர்.

உணவுப் பொருளைக் காலம் கடந்து வைத்திருந்தால், என்னாகும்? ஊசிப்போகும்; பொசபொசவென்றாகும்; நுரைத்து, புளிப்புத் தன்மை ஏறிவிடும். பிறகு, குப்பையில் கொட்ட வேண்டியதுதான். அதிக அளவு சாப்பிடுவதும் இப்படித்தான்! போதும் என்கிற அளவைக் கடந்து சாப்பிட்டு, தேவைக்கு அதிகமான உணவு வயிற்றுக்குள் இருக்குமெனில், உணவு ஊசிப்போவதுபோல், வயிற்றில் உள்ள உணவும் அப்படி ஆகிவிடும். நெகிழ்ந்து கொடுக்கிற தன்மை கொண்ட குடல், ஓரளவுக்குதான் உணவைக் குழைத்துத் தரும். அதிகம் என்றாகிவிட்ட உணவு குழையாத நிலையில், தேக்கமுண்டாகும்! இந்தத் தேக்கம், புளித்துப் போகும். இதனை, உப்புசம் என்பார்கள். புளித்தால், நுரை வரும். இதனை, வாயு என்பார்கள்.

அதிக உணவு, நல்ல ரசமாகப் பிரிக்கமுடியாதபடி கெட்டிப்பட்டுக் கிடக்கும். அது புளித்து, நுரையாகி, ரத்தத்துடன் கலக்கும். அப்படி நுரையுடன்கூடிய ரத்தம், உடலில் எந்தெந்த இடத்தில் ஓடுகிறதோ, அங்கே... ரத்த ஓட்டம், எகிடுதகிடாகிவிடும். அதுமட்டுமா? காந்த ஓட்டத்தையும் தடுத்துவிடும். இதனால், உடலுக்குக் கேடு விளையும். உடல் என்பது நீங்கள்தானே!

இயற்கை, உணவு செரிப்பதற்காக புளிப்புத்தன்மை கொண்ட அமிலத்தை நம் உடலில் சுரக்கச் செய்கிறது. அதற்கு, ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric Acid) என்று பெயர். கொஞ்சம் அதிகம் சாப்பிட்டுவிட்டால், அவற்றைச் செரிக்கச் செய்வதற்கு அதிகம் புளிப்பு தேவை. ஆனால், உடல் முழுவதுமுள்ள செல்களுக்கு, அவற்றுக்குத் தேவையான சத்துக்களுக்கு எல்லை உண்டு. அந்த எல்லை வரை, அவை இழுத்துக்கொண்டு, மிச்சத்தை இழுக்காமல் விட்டுவிடும். குடலிலும் உணவிலும் உள்ள புளிப்பானது, வேறு வேலை ஏதும் நிகழாததால், ரத்தத்துக்கு வந்து சேரும்.

இதன் விளைவு... மெள்ள மெள்ள, நரம்புகளைப் பாதிக்கும். அதுவும் எப்படி? புளிப்பாகவே போய்த் தாக்காமல், காற்றாக, வாயுவாக நரம்பில் புகுந்து, நரக வேதனைப் படுத்திவிடும்.

பகவான் ரமண மகரிஷி, ஒருநாள் எழுந்திருக்கும்போது, அவரால் சட்டென்று எழுந்திருக்க முடிய வில்லையாம். உடன் இருந்தவர்கள் பதறிப்போய், 'என்ன சுவாமி?' என்று கேட்க... 'ஆஞ்சநேயரின் அப்பா என் காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாரு!' என்று வாய்வுப் பிரச்னையை நகைச்சுவையுடன் சொன்னாராம், பகவான் ரமணர்.

ஆகவே, நரம்பில் காற்று போகாமல், கவனமாக உணவை எடுத்துக்கொள்வது அவசியம். அதேபோல், தேவைக்கு மிஞ்சிய உணவு, உடலுள் சர்க்கரையாக மாறுவதும் நிகழும்! மாவுப்பொருள் எனப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்க, நீரிழிவு நோயில் கொண்டு போய் நிறுத்திவிடும். பெரியவர்கள் செய்கிற இந்தத் தவறு, அவர்களின் செல்களுக்குள் பரவி, அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் நீரிழிவு நோயைக் கொண்டு சேர்க்கும்! நம் சந்ததியினருக்குச் சொத்துபத்துகளை, காசு- பணத்தை, சேர்த்து வைக்கலாம்; வைக்காமலும் போகலாம். ஆனால், நோயைத் தரலாமா? நோயற்ற வாழ்வுதானே குறைவற்ற செல்வம்!

உயிராற்றல் என்பது தினமும் வந்துகொண்டே இருக்கிறது; செலவாகிக்கொண்டே இருக் கிறது. உணவில் இருந்து ஒரு பகுதி, காற்றில் இருந்து ஒரு பகுதி, கோள்களில் இருந்து வரக்கூடிய அலைகள் ஒரு பகுதி, பூமியின் மையத்தில் இருந்து, அணுக்கள் உடைகிறபோது, அதில் இருந்து தெறிக்கக்கூடிய கதிர்வீச்சிலிருந்து ஒரு பகுதி என நான்கு வகைகளால் ஆற்றலானது உடலுள் வந்துகொண்டிருக்கிறது. தேவையான ஆற்றலை, உடலின் செல்கள் தங்களுக்குத் தேவையான அளவுக்கு ஏற்றுக் கொள்கின்றன. இந்த நான்கிலும், ஒவ்வொருவித கனம் உண்டு. அறிவு மற்றும் உடலுக்கு ஏற்ற விகிதத்தில், இவை ஈர்க்கப்பட வேண்டும். ஆனால், உணவை மட்டும்தானே வயிற்றில் நிரப்பி வைத்துக்கொள்கிறோம். இதனால், மற்ற மூன்று வகையில் கிடைக்கும் ஆற்றலை, நமக்குத் தெரி யாமல் நாமே தடுத்து விடுகிறோம். இப்படித் தடுப்பதால், சிலருக்குச் சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் குறைபாடாக இருக்கிறது.

உடல் என்பது ஒருவகையில் எந்திரம்தான்! அப்படிப் பார்த்தால், நாமெல்லாருமே எந்திரன்கள்தான்! நம் உடலுக்கு உலோகச் சத்துக்களும் ரசாயனங்களும் தேவை. இவை குறைய, நோய் பெருகுவது உறுதி.

'என்ன இப்படி நோஞ்சான் மாதிரி இருக்கிறே? சரியாச் சாப்பிடற தில்லையா?' என்று ஒல்லிப்பிச்சா னாக இருப்பவர்களைப் பார்த்துப் பலரும் கேட்பார்கள். ஆனால், போஷாக்கு என்பது, உணவின் அளவை மட்டும் பொறுத்தது அல்ல; சுத்தமாகவும் சத்தானதாகவும் உணவு இருந்தால்தான், அந்த உணவு போஷாக்கைத் தரும்; உடல் செரிமா னத்துக்குப் பழகிய உணவாக இருந் தால்தான், குடல் மற்றும் உள்ளுறுப் புகளில், ஒரு பிரச்னையும் வராமல் இருக்கும்!

உடலுக்கு ஏற்ற, உடலை மீறாத உணவாக இருந்தால்தான், அறிவு வேலை செய்யும். அறிவு துடிப்புடனும் விழிப்புடனும் இருந்தால்தான், சிந்தனை சிறப்புறும். சிந்தனை சிறப்புற இருந்தால்தான், தெளிவாகச் செயலாற்ற முடியும். அறிவாற்றலும் சிந்தனையாற்றலும் பெருகினால்தான், திறமைசாலி என நம்மை நாலு பேர் போற்றுவர்; புகழ்வர்.

அம்மா கொடுக்கும் ஆகாரம்
அளவாய் கொள்ள வேண்டும் - அதை
சும்மா அதிகம் சாப்பிட்டால்
சுகத்தைக் கெடுக்கும் அறிந்திடுவீர்!

- என்பது குழந்தைகளுக்கான பாட்டு. இது, இளைஞர்களுக்கான பாட்டும் கூட!

- வளம் பெருகும்
தொகுப்பு ஆர்.கே. பாலா