இளைஞர் சக்தி

வள்ளுவன் வழியில்...

புதியதோர் உலகம் செய்வோம்!

இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார்.

அவரை அருகில் அழைத்த இளைஞன், ''பார்த்தீர்களா... இந்த இன்ஜின்தான் காரின் இதயம். இந்த உதிரி பாகங்கள் அனைத்தும் வால்வுகள். நானும் உங்களைப்போல ஒவ்வொரு நாளும் இந்த வால்வுகளை இணைத்து ரிப்பேர் செய்கிறேன். உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், எனக்குச் சம்பளம் வெறும் இருநூறு ரூபாய்; உங்களுக்கோ பல ஆயிரங்கள்'' என்றவன், நீண்டதொரு பெருமூச்சு விட்டுப் பொருமினான்.

அந்த மருத்துவர் ஒரு விநாடிகூடத் தயங்காமல், ''உண்மைதான். நீயும் அறுவை சிகிச்சைதான் செய்யறே! ஆனா... கார் ஓடிக்கிட்டிருக்கும்போது செஞ்சு பாரு!'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

வாழ்வில், உண்பதும் உறங்குவதும்போல ஒப்பிடுவதும் வெகு இயல்பாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பத்துக்கு எட்டு மதிப்பெண் பெற்று, முகமெல்லாம் சிரிப்பாக வரும் குழந்தையைப் பாராட்டாமல், 'உன் நண்பன் எவ்வளவு மார்க்?' எனக் குடையும் பெற்றோர்களே நம் தேசத்தில் அதிகம்.

சொந்த உழைப்பில் வாங்கிய காரில் குடும்பத்துடன் பயணிப்பவன்கூட, கடந்து செல்லும் இன்னொரு சொகுசு காரின் மீது பார்வையைச் செலுத்தி ஒப்பிட்டு, தனது காரையே ஏதோ பூச்சி போல பார்க்கிறான்; சொந்தமாகக் கார் வாங்கியதன் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் பறி கொடுத்து விட்டு, தாழ்வுமனப்பான்மை எனும் படுகுழியில் விழுகிறான்.

ஒப்பீடுகூட ஆரோக்கியமானதாக, வளர்ச்சிக்கு வித்திடுவதாக இருக்கும்வரை தவறில்லை. ஆனால், பிறருடன் ஓயாமல் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு, ''அவனுக்கு வந்த வாழ்வைப் பார்!'' என்று பிறரது வளர்ச்சியைக் கண்டு மனம் புழுங்குவது தவறு. பொறாமையை நம் தேசத்தின் தேசிய தீய குணம் என்றே சொல்லலாம்!

வாழ்வில் எல்லாம் இருந்தும், மகிழ்ச்சியின்றிப் பலர் தவிப்பதற்குக் காரணம், பொறாமை எனப்படும் வயிற்றெரிச்சல்தான். வள்ளுவரின் மொழியில் சொல்லவேண்டுமானால், அழுக்காறு!

பொறாமை கொண்ட மனம், அழுக்கு ஆறாகப் பெருகி ஓடும் சாக்கடைக்கு நிகரானது. அழுக்காறை பாவி என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும்

பொறாமையானது மனிதனுடைய செல்வத்தையெல்லாம் கவர்ந்து, அவனைத் தீய வழியில் செலுத்தி அழித்துவிடும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.

பொறாமை உடையவனுக்கு வேறு எதிரியே வேண்டாம்; அது ஒன்றே போதும்! எதிரிகூடத் தாக்கத் தவறிவிடலாம்; ஆனால் பொறாமையானது, அதனை உடையவனை அழிக்காமல் போகாது என்கிறார்.

பொறாமை உடையவனுடைய உறவினர்கூட, உண்ண உணவும், உடுக்க உடையும் இன்றித் துன்பப்பட நேரிடும். பொறாமை உடையவனைவிட்டு, திருமகள் விலகிச் சென்று விடுவாள். அதுமட்டுமல்ல, தன் சகோதரியையும் (மூதேவி) அவன் வாழ்வில் குடிபுகச் செய்துவிடுவாள் என்றெல்லாம் பொறாமையை விட்டொழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பலவாறாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.

பொறாமை கொண்ட மனதில் அமைதியோ, ஆனந்தமோ, நிம்மதியோ இருக்க வாய்ப்பு இல்லை; தன் வீட்டில் மின்சாரம் போய்விட்டது என்றதும் பதறி, பிறகு... பக்கத்து வீட்டிலும் போய்விட்டது என்பதை உறுதி செய்துகொள்வதில் உள்ள அல்ப சந்தோஷம் மட்டுமே மிச்சம்!

தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் மட்டுமே எப்போதும் நன்றாக இருக்கவேண்டும்; மற்றவர்கள் தன்னைவிட உயர்ந்த நிலையை அடைந்துவிடவே கூடாது என்ற குறுகிய எண்ணத்தில், பொறாமைப்பட்டுத் தங்களையும் வருத்திக்கொள்பவர்கள் பலர்.

வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதர், நிச்சயமாகப் பொறாமையை மனதில் இருந்து நீக்கியே ஆக வேண்டும். பொறாமையில் இருந்து விடுபட இரண்டு வழிகள் உண்டு. முதலாவது, எவர் முன்னேறினாலும் மனம் திறந்து, வாயார, உளமாரப் பாராட்டுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். துவக்கத்தில் செயற்கையாக, போலித்தனமாகத் தோன்றினாலும், காலம் செல்லச் செல்ல, பாராட்டுவதில் உள்ள சுகம் புரியும். தோற்றது நாமாக இருந்தாலும், வெற்றி பெற்றவரை இன்முகத்துடன் வாழ்த்தும் இனிய குணத்தை இளமையிலேயே பழகிக்கொள்வது, நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்தும்!

2-வது வழி, எல்லாவற்றையும் இறைவனின் மகிமையாகக் காணப் பழகிக் கொள்ளுதல். பாட்டோ, சித்திரமோ, கவிதையோ... எந்தத் திறமையைக் கண்டாலும், வெளி நாட்டவர் அதனை இறைவனின் பரிசு என்பார்கள். ஆனால், நமது பண்பாட்டில், அவற்றை இறைவனின் வெளிப்பாடாகவே கருதுகிறோம்.

''எங்கு, எச்சிறப்பு காணப்படினும், அவை அனைத்தும் என்னுடைய மகிமையே என்று அறிந்துகொள்'' என்று கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார் கிருஷ்ணர்.

இறையருள் எல்லோரிடத்திலும் வெளிப்படுகிறது. இறையருளுடன் போட்டி போடவோ, இறைவனைப் பார்த்துப் பொறாமைப்படவோ நம்மால் முடியாது. எனவே, அனைத்து அனுபவங்களிலும் கடவுளைக் காணப் பழகிக்கொண்டால், பொறாமையிலிருந்து விடுபடலாம்.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

உள்ளத்தில் பொறாமை இன்றி வாழ்வதை, சிறந்த ஒழுக்க நெறியாகக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

'ஒரு நல்லவன்கூட இன்னொரு நல்லவனைப் பார்த்துப் பொறாமைப்படுகிறான். தானும் நல்லவனாக இருந்து, இன்னொருவருடைய நற்குணத்தையும் பாராட்டுபவன் மிகவும் அரிதானவன்' என்கிறது ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம்.

சாதி, மத, இன, மொழிச் சண்டைகளில் போட்டியும், பொறாமையும் மலிந்திருக்கும் தேசத்தில்தான்...

காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

என மகாகவி பாரதியார், ஜயபேரிகை கொட்டினார்.

பொறாமையற்ற, பரந்துவிரிந்த மனம், எல்லோரையும் அரவணைத்துக் கொள்கிறது. பொறாமையற்ற பொன்னான மனதில் இனிமையும், அமைதியும், ஆனந்தமும் எப்போதும் பொங்கித் ததும்பும்; வாழ்வே மிகப் பெரிய வரமாகத் தோன்றும்; தன்னைச் சுற்றியிருப்போரின் மேல் உண்மையான அன்பும், அக்கறையும் வெளிப்படும். அவர்களது இருப்பே பிறருக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.

விழுப்பேற்றின் அஃதொப்பதில்லை யார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

பொறாமையற்ற மனம்போல் சிறந்த பேறு வேறில்லை என்கிறார் திருவள்ளுவர். பொறாமையற்ற மனம், எப்போதும் எல்லோருடைய நலத்தையும், இன்பத்தையும், வளர்ச்சியையுமே விரும்பும்.

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன் றறியேன் பராபரமே

என்கிறார் தாயுமானவர்.

பொறாமை பிடித்தவனுக்குப் பெருமூச்சும், வயிற்றெரிச்சலும், தீராத துன்பமும் மட்டுமே மிச்சம். பொறாமையற்றவன், ஒவ்வொரு கணமும் பிறருடைய வெற்றியையும் வளர்ச்சியையும் கண்டு பூரிக்கிறான். அவனுடைய உள்ளத்தில் கோடிப் பூக்கள் மலர்ந்து மணம் வீசுவதுபோல், எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

மனம் திறந்து பாராட்டும் குணத்தைப் பெருக்கி, எங்கும் இறைமையைத் தரிசித்து இன்புற்று, பொறாமையின் சுவடற்ற புதியதோர் உலகத்தைப் படைப்போம்!

- தொடரும்...
படம் எஸ். கிருஷ்ணமூர்த்தி